ஆனால் இந்த முறை சம்பள தாரர்களுக்கான படிவம் 16 நமக்கு தாமதமாகத் தான் வரும். இந்த படிவம் 16 தான் மாதச் சம்பளம் வாங்குபவர்களின் சம்பளத்தில் இருந்து வருமான வரிச் சட்டப் படி டிடிஎஸ் பிடித்தம் செய்து விட்டதாக நம் நிறுவனம் நமக்கு சொல்லும் ஒரு சின்ன அத்தாட்சி என வைத்துக் கொள்ளலாம்.
இந்த படிவம் 16-ல் தான் நம்முடைய வீட்டு வாடகையை கழித்துக் கொண்டது, வரி கழிவுகளுக்கு உட்பட்ட முதலீடுகள், வரி கழிப்புகளுக்கு உட்பட்ட தான தர்மங்கள், மருத்துவ இன்ஷூரன்ஸுக்கான பிரீமியம் செலுத்தியது, வீட்டுக் கடனுக்கு வட்டி செலுத்தியது என எல்லாம் வருமான வரிச் சட்டப் படி கழிவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு மீத தொகைக்கு இவ்வளவு டிடிஎஸ் பிடித்துவிட்டோம் எனச் சொல்லும்.

இந்த படிவம் 16-ன் அடிப்படையில் தான் பட்டையக் கணக்காளர்கள் நமக்கு பதிலாக வருமான வரிப் படிவத்தை நிரப்பி, வருமான வரித் துறையிடம் சமர்பிக்கிறார்கள். இப்போது நமக்கு மாத சம்பளம் போடும் நிறுவனங்கள், நம் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் டிடிஎஸ் தொகையை அரசிடம் செலுத்துவார்கள். அந்த படிவத்தின் பெயர் 24Q. இந்த படிவத்திலும், படிவம் 16-லும் நிறைய மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள் வருமான வரித்துறையினர்கள்.
எனவே படிவம் 24Q-வை சமர்பிக்க வேண்டிய கெடு காலத்தை 31 மே 2019 -ல் இருந்து 30 ஜூன் 2019-ஆக தள்ளிப் போட்டிருக்கிறார்கள். இந்த படிவம் 24Q கணக்கு நேர் ஆகாமல் படிவம் 16-ஐத் தயாரிக்க முடியாது. ஆகையால் படிவம் 16-ஐ ஊழியர்களுக்கு கொடுக்க கெடு தேதியாக இருந்த 15 ஜூன் 2019-ஐ 10 ஜூலை 2019-ஆக அதிகரித்திருக்கிறார்கள்.
ஆக சம்பளதாரர்கள் தங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்ய ஜூலை 31, 2019 தான் கடைசி தேதி என்றால் வெறும் 20 நாட்கள் தான் நேரம் இருக்கிறது. எனவே வாசகர்களே, உங்கள் நிறுவனம், உங்களுக்கு படிவம் 16-ஐக் கொடுக்க தாமதப்படுத்தினால் கூட ஜூலை 10, 2019-க்குள் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். படிவம் 16 கையில் கிடைத்த உடன், வருமான வரிப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்பித்து, தேவையில்லாத அபராதத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications