LIC Jeevan Saral திட்டத்தில் 1 லட்சம் கோடி ஊழலா? கொந்தளிக்கும் பாலிசிதாரர்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ஒரு துறையில், இன்னும் அரசு நிறுவனம் கொடி கட்டிப் பறக்கிறது, தனியார் நிறுவனங்கள் எல்லாம் தெறித்து ஓடுகிறார்கள் என்றால்.. அது லைஃப் இன்ஷூரன்ஸ் துறையில் இருக்கும் LIC மட்டும் தான்.

கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் மட்டும் இந்தியாவில் லைஃப் இன்ஷூரன்ஸுக்காக 4.58 லட்சம் கோடி ரூபாயை பிரீமியமாகச் செலுத்தி இருக்கிறார்கள் மக்கள். அந்த 4.58 லட்சம் கோடி ரூபாயில் LIC பங்கு மட்டும் 3.18 லட்சம் கோடி ரூபாய்.

இந்த LIC என்கிற ஒரே ஒரு நிறுவனம் தான் இந்திய லைஃப் இன்ஷூரன்ஸ் சந்தையில் 70 சதவிகிதத்தை தன் கைக்குள் வைத்திருக்கிறது. பாக்கி உள்ள 23 தனியார் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒன்றாகச் சேர்த்தால் கூட LIC-க்கு அருகில் கூட வர முடியவில்லை. சரி LIC Jeevan Saral ஊழல் விஷயத்துக்கு வருவோம்

ஒரு பாலிசி

ஒரு பாலிசி

1956-ல் LIC தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரை பல இன்ஷூரன்ஸ் பாலிசிகளைக் கொண்டு வந்திருக்கிறது. பாலிசி சரி இல்லையா, அதை மீண்டும் திருத்தி வெளியிட்டிருக்கிறது. அதுவும் ஒத்து வரவில்லையா..? பாலிசியை ரத்து செய்திருக்கிறார்கள். ஆனால் LIC Jeevan Saral பாலிசி மட்டும் தனித்து நிற்கிறது. இந்த ஒற்றை பாலிசியால் இன்று உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிக் கொண்டிருக்கிறது நம் LIC.

அந்த பாலிசி

அந்த பாலிசி

பிதாகரஸ் தேற்றம் (pythagoras theorem) தெரியுமா..? டக் வொர்த் லீவிஸ் (duckworth lewis) முறை பற்றித் தெரியுமா..? அந்த அளவுக்கு நான்கு இடியாப்பத்தை பிய்த்துப் போட்டு ஆரம்பத்தையும் முடிவையும் தேடுவதற்கு சமம்... இந்த LIC-ன் ஜூவன் சரல் பாலிசி. இந்த பாலிசியைப் பற்றி பலரிடம் விசாரித்தோம். LIC ஊழியர்கள், LIC ஏஜெண்ட்கள் என யாரைக் கேட்டாலும் முழுமையாகத் தெரியாது என ஒதுங்கிக் கொள்கிறார்கள். அது தான் இந்த ஒரு லட்சம் கோடி ஊழல் நடந்ததாக வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதற்கும் காரணம். இந்த LIC ஜீவன் சரல் திட்டத்தில் பணம் போட்டவர்களிடம் விசாரித்தால், பலரும் கடுப்பில் இருப்பது தான் முதலில் தெரிய வருகிறது. பாலிசி டாக்குமெண்ட்களும் நமக்குக் கிடைக்கவில்லை.

என்ன பிரச்னை

என்ன பிரச்னை

ஆனால் இந்த LIC Jeevan Saral பாலிசியால் பொதுமக்கள் எப்படி ஏமாந்திருக்கிறார்கள் என Money Life என்கிற பத்திரிகை தன் வலைதளத்தில் கூடுமான வரை விளக்க முயற்சித்திருக்கிறது. ஆக அங்கிருந்து பாலிசியைப் பற்றிப் பார்ப்போம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ்

டேர்ம் இன்ஷூரன்ஸ்

டேர்ம் இன்ஷூரன்ஸ் என்றால் என்ன..? ஒருவர் திடீரென இறந்துவிட்டால் அவர் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் கவரேஜ் தொகையை அப்படியே அவர் குடும்பத்துக்கு கொடுத்துவிடுவார்கள். இதற்கு பிரீமியம் குறைவாகத் தான் இருக்கும்.
உதாரணத்துக்கு, 25 வயதுள்ள ஒருவருக்கு 1 கோடி ரூபாய்க்கு, 10 ஆண்டு காலத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவருக்கு ஆண்டு பிரீமியம் 6,000 - 10,000 வரை வசூலிக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனம். இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கும், இந்த 10 ஆண்டு காலத்துக்குள் இறந்துவிட்டால், இன்ஷூரன்ஸ் நிறுவனம் இவருக்கு ஒரு கோடி ரூபாய் க்ளெய்ம் கொடுக்கும். ஒருவேளை 10 ஆண்டு பாலிசி காலத்தில் இறக்கவில்லை என்றால், இந்த பிரீமியம் தொகை திரும்ப கொடுக்கப்படாது.

LIC Jeevan Saral

LIC Jeevan Saral

இப்போது LIC Jeevan Saral இந்த டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை அப்படியே கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்க்கிறார்கள். யாரும் செய்யாத படிக்கு, ஒரே பாலிசியில் இரண்டு மாற்றங்களைக் கொண்டு வருகிறார்கள்.
1. டேர்ம் இன்ஷூரன்ஸ் போல பாதுகாப்பு உண்டு.
2. பாலிசிக்கும் கொடுத்த பிரீமியம் பணம் திருப்பிக் கொடுக்கப்படும்... எனக் கொண்டு வருகிறார்கள்.
அந்த பாலிசியின் பெயர் LIC ஜீவன் சரல். இந்த பாலிசியை வடிவமைத்த ஜி என் அகர்வால் தான் அன்றைய எல் ஐ சி நிறுவனத்தை ஆக்ச்வரி (Actuary)-ஆக பதவியில் இருந்தார். அவரே நேரடியாக பல LIC அலுவலகங்களுக்கும், கூட்டங்களுக்கும் வந்து LIC Jeevan Saral திட்டத்தை விளக்கினார்.

வகுப்பில் சொன்னது

வகுப்பில் சொன்னது

LIC வரலாற்றிலேயே முதன்முறையாக LIC-ன் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை வடிவமைக்கும் Actuary-யே வந்து ஒரு பாலிசியை விளக்கினார். LIC Jeevan Saral பாலிசியை ஜி என் அகர்வால் விளக்கும் போது
1. மூன்று வருடங்களுக்குப் பின் பாலிசியை சரண்டர் செய்யும் போது எந்த ஒரு நட்டமும் இல்லாமல் சரண்டர் செய்வது.
2. சரல் என்றால் எளிமை என்று பொருள். பெயருக்கு ஏற்றார் போல, இந்த பாலிசியும் எளிமையாக இருப்பது.
3. நல்ல வருமானம், அதிக வருமானம், மற்ற முதலீடுகளை விட நல்ல வருமானம், நல்ல உள் நோக்கம்... இது தான் இந்த பாலிசியின் நோக்கம் என விளக்கியது.
4. ஆண்டுக்கு 9% வரை வட்டி ஈட்டலாம் எனச் சொல்லி பாலிசியை விற்றது....
என வளைத்து வளைத்துப் பேசினார். ஆனால் நட்டத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை. யார்ய்ம் கேட்கவும் இல்லை. அந்த கேள்வியே கேட்காமல் LIC Jeevan Saral-ஐ விற்க ஏஜெண்டுகளும், LIC அதிகாரிகளும் தயாரானார்கள். பாலிசி விற்பனை கலைகட்டத் தொடங்கியது.

மக்கள் கணிப்பு

மக்கள் கணிப்பு

அட பிரமாதமான பாலிசியா இருக்கே..? செத்தா வீட்டுக்கு பணம் வந்துடும். சாகலையா... பாலிசி காலம் முடிந்த பின் பணத்தை திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.. என சபாஷ் போட்டு LIC Jeevan Saral-ல் சம்பாதித்த காசை எல்லாம் போட்டார்கள் நடுத்தர மக்கள். குறிப்பாக வயதானவர்கள். LIC Jeevan Saral பாலிசி ஒரு காலத்தில் பட்டையைக் கிளப்பும் பாலிசியாக உருமாறியது. யார் LIC-க்கு வந்தாலும் ஜீவன் சரலை தலையில் கட்டுவதில் ஒரு பெரிய கும்பல் தயாராக இருந்தது. பலரும் நம்பி வாங்கினார்கள். டிசம்பர் 2013-ல் இந்த பாலிசியை நிறுத்தும் வரை, இந்தியா முழுக்க சுமார் 5 கோடி பேருக்கு இந்த LIC ஜீவன் சரல் திட்டத்தை விற்று இருந்தார்கள். இறந்தவர்களுக்கு முறையாக பாலிசியில் சொல்லி இருக்கும் சம் அஷ்ஷூர்ட் (Sum Assured) தொகை க்ளெய்ம் கொடுத்தார்கள். பாலிசி மெச்சூரிட்டி ஆன பின் சென்று க்ளெய்ம் கேட்டால் அத்தனை பேருக்கும் ஆச்சர்யம் காத்திருந்தது.

உதாரணம்

உதாரணம்

பாட்டில் என்பவருக்கு அன்று 58 வயது பூர்த்தியாகிவிட்டது. 12 வருடங்கள் முன், பாட்டிலுக்கு (46 வயதில்) இந்த LIC Jeevan Saral பாலிசியில் பணத்தை போடத் தொடங்கினார். 12 வருடத்தில் பாலிசி மெச்சூர் ஆகிவிட்டது. அவர் பிரீமியமாக மொத்தம் 97,824 ரூபாய் செலுத்தி இருந்தார். சரி எப்படியும் க்ளெய்மாக 98,000 ரூபாயாவது வரும் என நம்பி க்ளெய்ம் கேட்டு விண்ணப்பிக்கிறார். ஆச்சர்யம். வெறும் 34,405 ரூபாய் தான் க்ளெய்ம் கிடைக்கிறது. இதுவும் போனஸ் எல்லாம் சேர்த்து. இதை எதிர்த்து பாட்டில், இன்ஷூரன்ஸ் சார்ந்த குறைகலைத் தீர்க்கும், இன்ஷூரன்ஸ் ombudsman மும்பை பிரிவில் புகார் அளித்தார்.

சிக்கல்

சிக்கல்

என்ன பிரச்னை என பலரிடம் விசாரித்துப் பார்க்கிறார் பாட்டில். LIC Jeevan Saral பாலிசி விவரங்களில் இறந்து விட்டால் (Death Sum Assured) 1.25 லட்சம் ரூபாய் கொடுப்போம் எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பாலிசி காலம் மெச்சூரிட்டி (Maturity sum Assured) அடைந்தால் எவ்வளவு பணத்தைக் கொடுப்பேன் எனச் சொல்லவில்லை. ஆக LIC Jeevan Saral பாலிசிக்கு இரண்டு Sum assured இருக்கிறது. ஆனால் பல பாலிசி டாக்குமெண்ட்களில் ஒரே ஒரு Sum Assured (இறந்தால் கிடைக்கும் பணமான Death sum Assured) மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்கள். மெச்சூரிட்டியானால் கிடைக்கும் Maturity Sum Assured குறிப்பிடவில்லை. ஆகையால் தான் மெச்சூர் ஆன LIC Jeevan Saral பாலிசிகளுக்கு, எல் ஐ சி இஷ்டத்துக்கு ஏதோ ஒரு தொகையை க்ளெய்மாகக் கொடுக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது.

எல் ஐ சி தவறு

எல் ஐ சி தவறு

ஆக இரண்டு Sum Assured விவரங்களை தனித் தனியாகச் சொல்லாததால், பாலிசி தாரர் இறந்துவிட்டாலோ அல்லது பாலிசி மெச்சூர் ஆனாலோ பாலிசி டாக்குமெண்டில் சொல்லி இருக்கும் Sum Assured தொகையை வழங்க வேண்டும் என பல வழக்குகள், புகார்கள் எழுந்தன. இப்போது கூட ஏகப்பட்ட LIC Jeevan Saral பாலிசி தாரர்கள் நீதிமன்றப் படி ஏறிக் கொண்டிருக்கிறார்கள். உங்களிடம் கூட LIC Jeevan Saral பாலிசி டாக்குமெண்டில் Death sum Assured மற்றும் Maturity Sum Assured தனித் தனியாக குறிப்பிடப்படவில்லை என்றால் வழக்கு தொடுத்து செலுத்திய முழு பிரீமியத் தொகையை, க்ளெய்மாக வாங்கலாம்.

முன்னாள் எம்பிக்கே அல்வா தான்

முன்னாள் எம்பிக்கே அல்வா தான்

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த Dr Kirit Somaiya ஒரு மக்களவை உறுப்பினர். அதோடு இவர் ஒரு பட்டையக் கணக்காளர் (CA - Chartered Accountant) கூட. இவர் 27 நவம்பர் 2014-ல் இந்திய இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை நிர்வகிக்கும் IRDA (Insurance Regulatory and Development authority)-க்கு கடிதம் எழுதுகிறார். அதில் LIC Jeevan Saral பாலிசிக்கு 10 வருடம் கழித்து இவ்வளவு குறைவான மெச்சூரிட்டி தொகை கொடுப்பதை கண்டித்து எழுதி இருந்தார். அதோடு 2018-க்குப் பிறகு எல் ஐ சி இன்னும் பெரிய சிக்கல்களைச் சந்திக்கும். எல்ஐசி மீது வெகு ஜன மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையே இது தவிடு பொடியாகிவிடும் என எச்சரித்திருந்தார். அதோடு ஜி என் அகர்வால் இந்த பாலிசியை தவறாகச் சொல்லிப் பரப்பிவிட்டதையும் குறிப்பிட்டார். ஆனால் IRDA நடவடிக்கை எடுத்தார்களா எனத் தெரியவில்லை.

ஏஜெண்ட் வருத்தம்

ஏஜெண்ட் வருத்தம்

சரி, பாலிசி வாங்கி நஷ்டப்பட்டவர் சொன்னதைத் தான் கேட்கவில்லை. இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட்கள் சங்கம் (National Federation of Insurance Field Workers of India) 01 ஜூலை 2014-ல், எல் ஐ சிக்கு ஒர் உருக்கமான கடிதம் எழுதியது. இப்படி இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட்கள் எல் ஐ சிக்கு கடிதம் எழுதுவது எல் ஐ சி வரலாற்றில் நடக்கும் அரிய நிகழ்வுகளில் ஒன்று. தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பயங்கர நஷ்டம் ஏற்படும் எனத் தெரியாமலேயே இந்த LIC Jeevan Saral பாலிசிகளை விற்றுவிட்டதை கிட்ட தட்ட வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார்கள். "கடந்த 10 வருடங்களாக மொத்தம் 4.70 லட்சம் பிரீமியம் செலுத்திய எங்கள் வாடிக்கையாளர்களில் ஒருவருக்கு வெறும் 1.65 லட்சம் தான் மெச்சூரிட்டி தொகையாகக் கொடுத்திருக்கிறீர்கள். வாடிக்கையாளர் செலுத்திய பிரீமியத்தில் 65 சதவிகித நஷ்டத்தை சந்தித்திருக்கிறார்" எனச் சொல்லி இருக்கிறார்கள். இதற்கும் எல் ஐ சி பதில் சொல்லவில்லை.

எங்களுக்கே ஒன்னும் புரியலிங்க

எங்களுக்கே ஒன்னும் புரியலிங்க

ஒரு CA படித்த மக்களவை உறுப்பினர், பாலிசியை விற்ற ஏஜெண்ட்கள் LIC Jeevan Saral பற்றிச் சொல்வதை எல் ஐ சி கேட்கவில்லை என்றால்... அவர்களின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சொன்னால் கேட்பார்களா..? சொல்லி இருக்கிறார்கள். ஒரு எல் ஐ சி கிளை வலுவலகத்தின் மேலாளர் ஒருவர், தன்னுடைய பிராந்திய உயர் அதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் "மக்கள் முதலீடுகளுக்கு எல் ஐ சியை நம்புகிறார்கள். அவர்கள் சேமிப்பை நாம் பாதுகாக்கவில்லை என்றால், எப்படி மேற் கொண்டு எல் ஐ சி திட்டங்களை விற்பது..?" என LIC Jeevan Saral தொடர்பாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

பொதுவாக நட்டம்

பொதுவாக நட்டம்

பொதுவாக எல் ஐ சி மட்டுமல்ல எல்லா லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டத்திலும் முன் கூட்டியே பாலிசியை சரண்டர் செய்தால் தான், நாம் செலுத்திய பிரீமியத்தில் கொஞ்சம் நஷ்டம் ஏற்படும் அல்லது செலுத்திய பிரீமியத் தொகையாவது முழுமையாக திரும்ப கிடைக்கும். ஆனால் LIC Jeevan Saral பாலிசியில் தான், பாலிசி மெச்சூர் ஆன பிறகு கூட 50 - 70 சதவிகித பணத்தை பாலிசி தாரர்கள் இழக்க வேண்டி இருக்கிறது. இதற்கும் எல் ஐ சி என்ன நடவடிக்கை எடுத்தது எனத் தெரியவில்லை. ஆனால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் Insurance Ombudsan-கள் தங்கள் தீர்ப்பை வழங்கத் தொடங்கினார்கள். அதிலும் பல வேறுபட்ட தீர்ப்புகள் வந்த வண்ணமே இருந்தன.

நிராகரித்த மும்பை

நிராகரித்த மும்பை

பாட்டில் எல் ஐ சி நிறுவனம் மீது தொடுத்த வழக்கை விசாரித்த மும்பை ombudsman எல் ஐ சிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. "எல் ஐ சி நிறுவனம், தன் பாலிசி டாக்குமெண்ட்களில் சொன்ன படி க்ளெய்ம் கொடுத்திருக்கிறார்கள். Death Sum Assured மற்றும் Maturity Sum Assured விவரங்கள் பாலிசி டாக்குமெண்ட்களில் கொடுக்கப் படாதது பிரச்னை இல்லை" எனச் சொல்லி, நம் பாட்டில் வழக்கை தள்ளுபடி செய்தார்கள். பாட்டில் விடாமல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார்.

கோலாபூர் நுகர்வோர் நீதிமன்றம்

கோலாபூர் நுகர்வோர் நீதிமன்றம்

LIC Jeevan Saral திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட பாலிசி டாக்குமெண்ட்களில் சரியாக Maturity Sum Assured குறிப்பிடப்படவில்லை. எனவே பாட்டீலுக்கு Death Sum Assured ஆக குறிப்பிட்டிருக்கும் தொகையை, பாட்டீலுக்கு க்ளெய்ம் தொகையாகக் கொடுக்குமாறு தீர்ப்பு வழங்கியது கோலாபூர் நுகர்வோர் நீதிமன்றம். ஆனால் எல் ஐ சி விடாமல் மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது. மும்பை இன்ஷூரன்ஸ் ombudsman எல் ஐ சிக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்தால், ஹைதராபாத்தும், கொச்சியும் வேறு ரூட் எடுத்தது.

ஆதரித்த ஹைதராபாத்

ஆதரித்த ஹைதராபாத்

பாட்டிலைப் போலவே LIC Jeevan Saral பிரச்னைக்கு 20 ஜனவரி 2016-ல் ஹைதராபாத் ombudsman ஒரு தீர்ப்பு வழங்கியது. அதில் LIC Jeevan Saral பாலிசிதாரர் ஒருவர், 2002-ல் எல் ஐ சியின் விளம்பரத்தைப் பார்த்து அதிக வருமானத்துக்காக இந்த திட்டத்தில் முதலீடு செய்கிறார். இவர் பிரீமியமாக 48,040 ரூபாய் செலுத்தி இருக்கிறார். மெச்சூரிட்டி க்ளெய்மாக வெறும் 34,894 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. இவருக்கு கொடுத்த LIC Jeevan Saral பாலிசி டாக்குமெண்டில் மெச்சூரிட்டி Sum Assured-ல் எதுவும் குறிப்பிடவில்லை. எனவே Death sum Assured மற்றும் Maturity Sum Assured தனித் தனியாக குறிப்பிடாததால் Death Sum Assured-ல் குறிப்பிட்டிருக்கும் ஒரு லட்சம் ரூபாயை கொடுக்குமாறு தீர்ப்பு வழங்கினார்கள். இதே போல கொச்சி ombudsman-ம் வழங்கி ஒரு தீர்ப்பை எல் ஐ சிக்கு எதிராகச் சொல்லி கிளி கிளப்பினார்கள்.

உயர் நீதிமன்றம்

உயர் நீதிமன்றம்

ஹைதராபாத் ombudsman தீர்ப்பை எதிர்த்து, எல் ஐ சி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்த போது, எல் ஐ சிக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்தது உயர் நீதி மன்றம். அதோடு ஹைதராபாத் ombudsman தீர்ப்பின் படி LIC Jeevan Saral பாலிசிதாரருக்கு 1,00,000 ரூபாய் க்ளெய்ம் கொடுக்கவில்லை என்றால் எல் ஐ சி சார்பாக மனுதாக்கல் செய்தவரின் சொத்துக்களை பறிமுதல் செய்து வைக்கவும் உத்தரவிட்டு எல் ஐ சியை ஓட ஓட விரட்டியது. LIC Jeevan Saral பாலிசிதாரர்களின் வாயை மூட ombudsman, உயர் நீதிமன்றத்தில் போராடி தோற்றுப் போனது எல்ஐசி.

LIC கடிதம்

LIC கடிதம்

இத்தனை பேரிடம் அடி வாங்கிய பின் தான், எல் ஐ சி தன்னை பாதுகாத்துக் கொள்ளத் தயாரானது. அதன் பிறகு தான் தன் பாலிசி டாக்குமெண்ட்களை மாற்றிக் கொடுத்து தப்பிக்க முயற்சிக்கிறது எல் ஐ சி. எல் ஐ சி நிறுவனம் தன் பிராந்திய அலுவலகங்களுக்கு எல்லாம் ஒரு சுற்றறிக்கையை கடந்த 26 மார்ச் 2018-ல் LIC Jeevan Saral பாலிசி டாக்குமெண்ட்களை மாற்றுவது தொடர்பாக அனுப்பி இருக்கிறது. ஆக இப்போது வரை LIC Jeevan Saral பாலிசி எடுத்தவர்களிடம் மன்னிப்பு கேட்டு தவறை ஒப்புக் கொள்வதாகத் தெரியவில்லை. மாறாக புதிய LIC Jeevan Saral பாலிசி டாக்குமெண்டில் Death Sum Assured மற்றும் Maturity Sum Assured தொகைகளைக் குறிப்பிட்டு தப்பிக்கவே முயற்சிக்கிறது.

உஷார்

உஷார்

இப்போது கூட உங்களிடம் LIC Jeevan Saral பாலிசிக்கான டாக்குமெண்டுகள் இருந்தால், அதற்கான புதிய பாலிசி டாக்குமெண்ட்களை மாற்றாமல் வழக்கு தொடுத்து, நீங்கள் செலுத்திய மொத்த தொகையையும் திரும்ப வாங்கிக் கொள்ளலாம். இல்லை என்றால் எல் ஐ சியின் திட்டப்படி நாம் செலுத்திய பிரீமியம் தொகைக்கு மிகக் குறைவான ஒரு தொகையை Maturity Sum Assured ஆக குறிப்பிட்டு நம்மை ஏமாற்றிவிடுவார்கள் என்கிறது மணி லைஃப் அமைப்பு.

உச்ச நீதிமன்ற வழக்கு

உச்ச நீதிமன்ற வழக்கு

மணி லைஃப் அமைப்பே இந்த LIC Jeevan Saral ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அந்த வழக்கில் LIC Jeevan Saral பாலிசியில் சுமார் 5 கோடி பாலிசிதாரர்கள் பிரீமியமாகச் செலுத்திய தொகையில் 50 - 70 சதவிகித தொகையை இழந்துவிட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள். இந்த ஊழல் தொகை சுமார் ஒரு லட்சம் கோடியாக இருக்கும் எனவும் சொல்லி இருக்கிறார்கள்.

திருப்பிக் கொடு

திருப்பிக் கொடு

இந்த ஒரு லட்சம் கோடி ரூபாய் க்ளெய்ம் தொகையை ஆண்டுக்கு 8 சதவிகித வட்டி உடன் சம்பந்தப்பட்ட பாலிசி தாரர்களுக்கு திருப்பிக் கொடுக்குமாறு வழக்கு தொடுத்திருக்கிறார்கள் மனி லைஃப் அமைப்பினர்கள். இந்த வழக்கு விசாரணை வரும் 15 ஜூலை 2019-ல் நடக்கப் போகிறது. இது நாள் வரை எல் ஐ சிக்கு LIC Jeevan Saral பாலிசி தாரர்களுக்கான பிரீமியம் பணத்தை திருப்பிக் கொடுப்பதைப் பற்றி யோசிப்பதாகத் தெரியவில்லை. வயதான தாத்தா பாட்டிகளும் தங்கள் பென்ஷன் பணம், மகன் கொடுத்த பணம், மகள் பணம் என எல்லாவற்றையும் LIC Jeevan Saral-ல் போட்ட குற்றத்துக்காக அரசு அலுவலகங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் அலைந்து தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எத்தனை செருப்புகள் தேய்ந்து, கால் வலி எடுக்க நடந்து கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. வாழ்க்கை முழுக்க தன் குழந்தைகளுக்காக ஓடிய கால்கள், இந்த ஓய்வு காலத்திலாவது கொஞ்சம் பேரன் பேத்திகளுடன் புல்வெளியில் நடக்கட்டுமே..!

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: insurance
English summary

LIC jeevan saral policy 1 lakh crore claim scam case supreme court

LIC jeevan saral policy 1 lakh crore claim scam case is coming for hearing in supreme court on july 15, 2019.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X