LIC-யின் அசரடிக்கும் வருமானம்! ஆண்டுக்கு 25,000 கோடி பங்குச் சந்தையில் இருந்து வருகிறதாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனமான LIC, தான் பாலிசிதாரர்களிடம் இருந்து வாங்கும் பிரீமியத் தொகையை அப்படியே கையில் வைத்துக் கொள்வதில்லை. கூடுதலாக இருக்கும் பணத்தை திட்டமிட்டு இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கிறது.

 

இப்படி கடந்த பல ஆண்டுகளாக முதலீடு செய்து வைத்திருக்கும் பங்குகளில் இருந்து கிடைக்கும் ஈவுத் தொகை (டிவிடெண்ட்), பங்குகளை நல்ல விலைக்கு விற்கும் போது கிடைக்கும் லாபம் போன்றவைகளால் தான், LIC பாலிசிதாரர்களுக்கு நிறைய க்ளெய்ம் கொடுக்க முடிகிறது. அது போல இந்திய அரசாங்கத்துக்கு நல்ல ஈவுத் தொகை கொடுக்க முடிகிறது.

 
LIC-யின் அசரடிக்கும் வருமானம்! ஆண்டுக்கு 25,000 கோடி பங்குச் சந்தையில் இருந்து வருகிறதாம்!

இந்தியாவிலேயே அதிக க்ளெய்ம் கொடுக்கும் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில், அரசு இன்ஷூரன்ஸ் நிறுவனமான LIC-க்கு ஒரு தனி இடம் உண்டு. அதற்கு முழு முதல் காரணம் இந்த பங்குச் சந்தை முதலீடுகள் தான். கடந்த 2015 - 16-ல் 11,000 கோடி ரூபாய், 2016 - 17-ல் 19,000 கோடி ரூபாய், 2017 - 18 நிதி ஆண்டில் 25,000 கோடி ரூபாய் என பங்குச் சந்தைகளில் பங்குகளை நல்ல விலைக்கு விற்றதால் மட்டும் கிடைத்த வருமானம் ஒவ்வொரு வருடமும் கணிசமாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

Wipro பல்டி! நீண்ட கால பயிற்சி கொடுத்து ப்ராஜெக்டில் இறங்கும் இந்தியர்களை விட அமெரிக்கர்கள் மேல்! Wipro பல்டி! நீண்ட கால பயிற்சி கொடுத்து ப்ராஜெக்டில் இறங்கும் இந்தியர்களை விட அமெரிக்கர்கள் மேல்!

இப்படி தன்னிடம் வரும் ப்ரீமியம் காசை வைத்து சிறப்பாக லாபம் பார்க்க முடிகிறது என்றால், அதற்கு LIC நிறுவனத்தில், பங்குச் சந்தை முதலீடுகளை மேற்கொள்ளும், முதலீட்டு அணிக்கு தனித் திறமை இருப்பதாகத் தானே பொருள். அப்படி சமீபத்தில் LIC நிறுவனம் கழட்டி விட்ட சில பங்குகள், தன் முதலீட்டை அதிகரித்துக் கொண்ட சில பங்குகளைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம். LIC முதலீடு செய்திருக்கும் பங்குகள் உங்களுக்கும் நல்லதாகப் பட்டால் நீங்களும் முதலீடு செய்யுங்கள், கழட்டி விட்ட பங்குகளில் கொஞ்சம் உஷாராக இருங்கள் முதலீட்டாளர்களே.

LIC முதலீடு செய்திருக்கும் செய்தி கேட்டு ஃபெடரல் பேங்க் பங்கு விலை 10% மற்றும் கோட்டக் மஹிந்திரா பங்கு விலை சுமார் 20% விலை அதிகரித்து வர்த்தகமாகி வருகிறது.

LIC தன் முதலீட்டை அதிகப்படுத்தி இருக்கும் பங்குகள்
UPL
Bliss GVS Pharma
Blue Dart Express
Havells India
The Federal Bank
Adani Ports and SEZ
Kota Mahindra Bank
GAIL india
Bank of Baroda
ITC
Granules india
Gillette india
LIC தன் முதலீட்டை குறைத்திருக்கும் பங்குகள்
Power Grid corporation of India
Bharat Heavy Electricals
NTPC
NMDC
SAIL
MTNL
Nalco
Central Bank of India
Shipping corporation of india
SBI
Axis Bank
Bank of India
Welspun corp
Hindustan Copper
Oil India
Vakrangee
Mishra dhatu Nigam
PNB
Tambli Capital
Orissa Mineral Development company
Empire Industries
SV Global Mill
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

lic share investment income around 25000 crore now its share portfolio changed

lic share investment income around 25000 crore now its share portfolio changed
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X