ELSS Mutual funds கொடுக்கும் பலே காம்போ..! வரிக் கழிவு + 9 % வருமானம்! செம இல்ல..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Mutual funds: (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்ல முதலீடு செய்யலாம். ஆனா ஏதோ சில ஃபண்டுகள்ள முதலீடு பண்ணாத்தான் வரிக் கழிவு கெடக்குமாமே..? நாங்க எல்லாம் அந்த ஃபண்டுலத் தாங்க முதலீடு பண்ணுவோம் என விரதம் இருப்பவர்கள் என்றால்... இந்த செய்தி உங்களுக்காகத் தான்.

இ எல் எஸ் எஸ் (ELSS) என்கிற ஈக்விட்டி சார்ந்த முதலீட்டுத் திட்ட ஃபண்டுகளில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். ஆனால் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை தான் 80சி பிரிவின் கீழ் வரிக் கழிவு பெற முடியும். அதாவது 80சி பிரிவின் கீழ் இருக்கும் பல வரிக் கழிவு திட்டங்களில் இதையும் சேர்த்து மொத்தமாகவே 1.5 லட்சம் ரூபாய் தான் வரிக் கழிவு கிடைக்கும்.

ELSS Mutual funds கொடுக்கும் பலே காம்போ..! வரிக் கழிவு + 9 % வருமானம்! செம இல்ல..?

இ எல் எஸ் எஸ் - ELSS (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன..?

செபி அமைப்பின் வழி காட்டுதலின் படி, இந்த இ எல் எஸ் எஸ் ரக மியூச்சுவல் ஃபண்டுகளின் மொத்த நிதியில் 80 சதவிகிதம் ஈக்விட்டி சார் முதலீடுகளில் இருக்க வேண்டும். நிதி அமைச்சகத்தின் அனுமதி உடன் தங்கள் ஃபண்டுகளை இ எல் எஸ் எஸ் திட்டத்தின் கீழ் காட்டுவார்கள். இந்த ஃபண்டில் போடும் பணத்தை போட்ட தேதியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு எடுக்க முடியாது.

வரிக் கழிவு பெற வேண்டும், அதோடு நல்ல வருமானமும் கிடைக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு சரியான இடம் இந்த இ எல் எஸ் எஸ் தான். இந்த இ எல் எஸ் எஸ் திட்டத்தின் கீழ் இப்போதைக்கு 29 ஃபண்டுகள் இருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில், மேலே சொன்ன 29 ஃபண்டுகளில் 6 ஃபண்டுகள் தவிர மற்ற அனைத்து ஃபண்டுகளும் 8.5 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் ஈட்டித் தருகின்றன. அதிகபட்சமாக 14.82 சதவிகித வருமானத்தைக் கொடுத்திருக்கிறது.

அப்படி கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த மற்றும் மோசமான வருமானம் கொடுத்த இ எல் எஸ் எஸ் ஃபண்டுகள் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்திருக்கிறோம். நல்ல ஃபண்டைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன். உங்கள் வசதிக்காக (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்களின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த ELSS மியூச்சுவல் ஃபண்ட் விவரங்கள்
ஃபண்டுகளின் பெயர்தொடங்கிய தேதி5 வருட வருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Quant Tax PlanApr-200014.8210
Tata India Tax Savings FundMar-199613.311,903
Axis Long Term Equity FundDec-200912.9619,718
Kotak Tax Saver Regular PlanNov-200512.43942
Aditya Birla Sun Life Tax Relief 96Mar-199611.958,850
DSP Tax Saver FundJan-200711.885,646
JM Tax Gain FundMar-200811.2032
Invesco India Tax PlanDec-200611.20878
IDFC Tax Advantage (ELSS) Fund - Regular PlanDec-200810.882,060
IDBI Equity Advantage Fund - Regular PlanSep-201310.68570
கடந்த 5 ஆண்டுகளில் மோசமான வருமானம் கொடுத்த ELSS மியூச்சுவல் ஃபண்ட் விவரங்கள்
ஃபண்டுகளின் பெயர்தொடங்கிய தேதி5 வருட வருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Union Long Term Equity FundDec-20115.38253
Baroda ELSS 96 FundMar-19966.44157
Reliance Tax Saver (ELSS) FundSep-20056.4410,760
HDFC Taxsaver FundMar-19967.277,514
SBI Magnum Taxgain SchemeMar-19937.507,068
UTI Long Term Equity FundDec-19997.961,201
BOI AXA Tax Advantage Fund - Regular PlanFeb-20098.63234
Quantum Tax Saving - Regular PlanApr-20178.8480
Edelweiss Long Term Equity Fund (Tax Savings) - Regular PlanDec-20088.91106
HSBC Tax Saver Equity FundJan-20079.06158
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mutual funds: ELSS equity linked saving scheme is giving 9 percent solid return for 5 years

Mutual funds: ELSS equity linked saving scheme is giving 8 percent solid return for 5 years
Story first published: Monday, July 29, 2019, 18:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X