Mutual funds: ஐந்து ஆண்டுகளில் 15% வருமானம் கொடுத்த மிட் கேப் ஃபண்டுகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Mutual funds: மியூச்சுவல் ஃபண்ட் என்றாலே வருமானம் பெரிதாக இருக்காது, அதே நேரத்தில் கொஞ்சம் ரிஸ்கும் எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக நாமே ரிஸ்க் எடுத்து பங்குகளிலோ அல்லது ஃப்யூச்சர்ஸ் & ஆப்ஷன்களிலோ வர்த்தகம் செய்து லாபம் பார்த்து விடலாம் என நினைக்கும் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை கணிசமானது. ஆனால் இப்படி நாம் நினைப்பது போல, நாமே நல்ல பங்குகளை தேர்வு செய்து சரியான நேரத்தில் வாங்கி, விற்று லாபம் பார்ப்பது அத்தனை எளிதான காரியம் இல்லை. இதற்கு உதாரணம் ரகுவீர்.

ரகுவீர் சார் மேலே சொன்ன முதலீட்டாளர்களுக்கு உதாரணம். கொஞ்சம் பங்குச் சந்தை ஃப்யூச்சர் & ஆப்ஷன்கள் எல்லாம் தெரிந்தவர். ஆகையால் நாம் ஏன் மற்றவர்களை நம்பி பணத்தை போடுவானேன்...? என தன்னுடைய டீமேட் கணக்கு மூலம், கடந்த ஏப்ரல் 2018-ல் சுமார் 351 ரூபாய்க்கு டாடா மோட்டார்ஸ் பங்குகளை வாங்கினார். கொஞ்ச நெஞ்ச பங்குகள் அல்ல. 200 டாடா மோட்டார்ஸ் பங்குகளை வாங்கினார். ஆக 200 * 351 = 70,200 ரூபாய். அதே போல ஜூலை 2018-ல் 200 அசோக் லேலாண்ட் பங்குகளை வாங்கினார். ஒரு பங்கின் விலை 109.55 ரூபாய். ஆக 200 * 109.55 = 21,910. மொத்த முதலீட்டு தொகை 92,110 ரூபாய்.

Mutual funds: ஐந்து ஆண்டுகளில் 15% வருமானம் கொடுத்த மிட் கேப் ஃபண்டுகள்!

இப்போது வரை இந்த டாடா மோட்டார்ஸ் பங்குகள் தன் 350 ரூபாய் என்கிற விலையைத் தொடவில்லை. கடந்த 52 வார காலத்தில் அதிகபட்ச விலையே 282 ரூபாய் தான் என்றால் நம்புவீர்களா..? தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகளின் விலை 156.85 தான். ஆக ஏப்ரல் 2018-ல் மாதத்தில் வாங்கிய 200 டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மதிப்பு 70,200 ரூபாயில் இருந்து சரிந்து தற்போது 31,340 ரூபாயாக இருக்கிறது.

டாடா மோட்டார்ஸை விட அசோல் லேலாண்டின் நிலை பரவாயில்லை. இப்போது அதே 200 பங்குகளின் மொத்த மதிப்பு 15,960 ரூபாய் தான். ஆக மொத்த நஷ்டம் டாடா மோட்டார்ஸ் 38,860 + அசோக் லே லாண்ட் 5950 = 44,810 ரூபாய் நட்டம். போட்ட பணம் 92,110 ரூபாய். இப்போது கூட ரகுவீர் கடுமையான ரிஸ்க் எடுத்தார், ஆனால் அவர் எடுத்த ரிஸ்குக்கு சரியான ரிட்டன் கிடைக்கவில்லை. ஆனால் இதே ரிஸ்கை மிட் கேப் (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்களில் எடுத்திருந்தால் இந்த ரிஸ்க் பெரிய அளவில் குறைந்திருக்கும்.

மிட் கேப் (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன..?

பொதுவாக ஒரு பங்கின் சந்தை மதிப்பு 5,000 கோடி ரூபாய்க்கு மேலும், 20,000 கோடி ரூபாய்க்கு கீழும் இருந்தால் அந்த பங்குகளை மிட் கேப் பங்குகள் எனச் சொல்வோம்.
செபி அமைப்பின் வழி காட்டுதலின் படி, இந்தியாவின் டாப் 250 சந்தை மதிப்பு கொண்ட பங்குகளில் 101 முதல் 250 வரை இருக்கும் நிறுவன பங்குகளைத் தான் மிட் கேப் பங்குகள் எனச் சொல்கிறார்கள். இந்த மிட் கேப் (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் மூலம் திரட்டப்படும் நிதிகள், இந்த மிட் கேப் ரக பங்குகளில் முதலீடு செய்யப்படும். இந்த பங்குகள் விலை ஏறும் போது, கிடைக்கும் விலை ஏற்றத்தைத் தான் (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நமக்கு லாபமாகத் தருகிறார்கள்.

அப்படி கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த மற்றும் மோசமான வருமானம் கொடுத்த ஈக்விட்டி மிட் கேப் ஃபண்டுகள் விவரங்களைக் கொடுத்திருக்கிறோம். நல்ல ஃபண்டைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன்.

கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த மிட்கேப் மியூச்சுவல் ஃபண்ட் விவரங்கள்
ஃபண்டுகளின் பெயர்தொடங்கிய தேதி5 வருட வருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Kotak Emerging Equity Scheme Regular PlanMar-200714.444,501
L&T Midcap FundAug-200413.565,026
DSP Midcap Fund - Regular PlanNov-200612.756,302
Franklin India Prima FundDec-199312.727,169
HDFC Mid-Cap Opportunities FundJun-200711.9522,599
Tata Midcap Growth Fund - Regular PlanJul-199411.88704
Axis Midcap FundFeb-201111.82,656
Edelweiss Mid Cap Fund - Regular PlanDec-200711.71916
Invesco India Mid Cap FundApr-200711.53456
Sundaram Mid Cap FundJul-200210.915,955
கடந்த 5 ஆண்டுகளில் மிகக் குறைந்த வருமானம் கொடுத்த மிட் கேப் மியூச்சுவல் ஃபண்ட் விவரங்கள்
ஃபண்டுகளின் பெயர்தொடங்கிய தேதி5 வருட வருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Baroda Midcap FundOct-2010-0.5547
DHFL Pramerica Midcap Opportunities Fund - Regular PlanDec-20136.06122
Quant Mid Cap FundMar-20017.111
Motilal Oswal Midcap 100 Exchange Traded FundJan-20118.3525
UTI Mid Cap Fund - Regular PlanApr-20049.753,731
SBI Magnum Midcap FundMar-20059.783,596
ICICI Prudential Midcap FundOct-20049.91,755
Reliance Growth FundOct-199510.216,750
BNP Paribas Midcap FundMay-200610.33746
Aditya Birla Sun Life Mid Cap FundOct-200210.332,375
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mutual funds: equity mid cap funds is giving 15 percent return for 5 years

Mutual funds: equity mid cap funds is giving 15 percent return for 5 years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X