Mutual funds: வங்கி FD போல 8% நிலையான வருமானம் கொடுக்கும் வேல்யூ ஃபண்டுகள்!

Mutual funds: மியூச்சுவல் ஃபண்ட்ல முதலீடு செய்றது பத்தி பிரச்னை இல்ல. ஆனால் நல்ல வருமானமும் வராது, அதே நேரத்துல நிலையான வருமானமும் வராது, அதாங்க பிரச்னை என அலுத்துக் கொள்பவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஃபண்டு தான் இந்த வேல்யூ ஓரியண்டெட் ஃபண்டுகள்.

இந்த வேல்யூ ஓரியண்டெட் ஃபண்டுகளில் நீண்ட காலத்துக்கு நல்ல வருமானம் கொடுக்கக் கூடிய, பெரிய சொத்துக்களை உருவாக்கக் கூடிய தரமான பங்குகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவன ஃபண்ட் மேனேஜர்கள் கண்டு பிடித்து அதில் முதலீடு செய்வார்கள். அந்த ஃபண்டுகளில் போட்ட பணமும் நீண்ட காலம் (சுமார் 10 முதல் 15 அண்டுகள்) கழித்துப் பார்த்தால் ஒரு பெரிய தொகையை பணம் போட்டவர்களுக்கு வருமானமாக ஈட்டிக் கொடுத்திருப்பார்கள்.

Mutual funds: வங்கி FD போல 8% நிலையான வருமானம் கொடுக்கும் வேல்யூ ஃபண்டுகள்!

வேல்யூ ஓரியண்டெட் (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன..?

செபி அமைப்பின் வழி காட்டுதலின் படி, இந்த வேல்யூ ஓரியண்டெட் ரக மியூச்சுவல் ஃபண்டுகளின் மொத்த நிதியில் 65 சதவிகிதம் ஈக்விட்டி சார் முதலீடுகளில் இருக்க வேண்டும். நல்ல வேல்யூ இன்வெஸ்ட்மெண்ட் ஸ்ட்ராட்டஜியைப் பின்பற்றி போர்ட்ஃபோலியோ அமைத்திருக்க வேண்டும். அவ்வளவு தான். எதிர்காலத்தில் நாம் முதலீடு செய்திருக்கும் பங்கின் விலை அதிகரிக்க அதிகரிக்க நமக்கு லாபமும் அதிகரிக்கும்.

அப்படி கடந்த 5 ஆண்டுகளில் வேல்யூ ஓரியண்டெட் ஃபண்டுகள் விவரங்களைக் கொடுத்திருக்கிறோம். நல்ல ஃபண்டைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன். உங்கள் வசதிக்காக (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்களின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் வேல்யூ ஓரியண்டெட் மியூச்சுவல் ஃபண்ட் கொடுத்த வருமான விவரங்கள்
ஃபண்டுகளின் பெயர்தொடங்கிய தேதி5 வருட வருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Invesco India Contra FundApr-200712.374,027
L&T India Value FundJan-201012.378,260
Tata Equity PE Fund - Regular PlanJun-200411.475,499
JM Value FundJun-199710.57126
Kotak India EQ Contra Fund - Regular PlanJul-200510.07865
Reliance Value FundJun-20059.973,213
IDFC Sterling Value Fund - Regular PlanMar-20089.893,251
HDFC Capital Builder Value FundFeb-19949.884,585
ICICI Prudential Value Discovery FundAug-20048.9216,185
Quantum Long Term Equity Value Fund - Regular PlanApr-20178.56971
Templeton India Value FundSep-19967.84541
Aditya Birla Sun Life Pure Value FundMar-20086.944,433
SBI Contra FundJul-19996.411,484
UTI Value Opportunities Fund - Regular PlanJul-20056.234,493

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+