Mutual funds: அப்ப உபரி லாபத்த SBI-ல போட ஆரம்பிச்சேன், இப்ப பையன் வெளிநாட்ல படிக்க போறான்.!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவை: ரத்னவேலு மாமா. கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். சொந்தமாக மூன்று இரும்பு லேத் இருக்கிறது. நல்ல தொழில். 2000-ம் ஆண்டு திருமணமாகி 2002-ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெயர் குமர வேல்.

ரத்னம் மாமாவுக்கு குமரன் (குமர வேல்) என்றால் உயிர். பங்குச் சந்தை, (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட், கடன் பத்திரங்கள் போன்றவைகளை எல்லாம் நம் ரத்னம் மாமா கேள்விப்பட்டது கூட கிடியாது. இந்த (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்ல் ரத்னம் மாமாவுக்கு இவ்வளவு அறிவு வரக் காரணமே நம் குமரன் தான் என்றால் நம்புவது கொஞ்சம் சிரமமாகத் தான் இருக்கும்.

அதிகம் படிப்பறிவு இல்லாதவர். 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தும், அப்பா இறந்துவிட்டதால் படிக்க வைக்க ஆள் இல்லாமல் இரும்பு லேத் பட்டறைகளில் வேலைக்கு சேர்ந்து குடும்பத்தை கவனித்துக் கொண்டவர். ஆகையால் மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என பெரும் கனவு கொண்டார்.

வெளிநாட்டு படிப்பு

வெளிநாட்டு படிப்பு

ஒரு கட்டத்தில் வெளிநாட்டில் மகனை அனுப்பி படிக்க வைத்தால் என்ன..? என்கிற லெவலுக்கு யோசிக்கத் தொடங்கிவிட்டார். யாரைப் பார்த்தாலும் வெளிநாட்டில் எம்பிஏ, மருத்துவம், பைலட் படிப்பு, பொறியியல், நுண் கலை, எழுத்து, சினிமா படிப்பு, நடிப்புப் பள்ளிகள், உணவு பதப்படுத்துதல் என விசாரித்து செலவுகளை கணக்கு போட்டுக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் மகன் வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்றால் சுமார் 40 - 50 லட்சமாவது குறைந்தபட்ச்மாகத் தேவை என கணக்கிட்டுக் கொண்டார்.

எப்படி கிடைக்கும்

எப்படி கிடைக்கும்

மகன், மனைவி என யாருக்கும் தெரியாமல். பணத்தை திரட்டுவதைப் பற்றி விசாரித்தார். தமிழகத்தில் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் பக்கம் எல்லாம் பங்குச் சந்தை பற்ரி ஓரளவுக்கு விழிப்புணர்வு கொண்டவர்கள் தானே. ஆகையால் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யும் சில நண்பர்களிடமும் பேசினார். பலரும் கொடுத்த ஒரே பதில் பங்குச் சந்தை. தன் பணத்துக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத பங்குச் சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்ய விரும்பவில்லை நம் ரத்னம் மாமா.

(Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்

(Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்

ரத்னம் மாமா உடன் பள்ளியில் படித்த பூவராகன், ஒரு பங்குச் சந்தை தரகராக இந்தியாவின் பல பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்தவர். அதோடு இப்போது தனியாக ஒரு நிறுவனம் நடத்திக் கொண்டிருப்பது தெரிய வருகிறது ரத்னம் மாமாவுக்கு. ரத்னம் மாமாவும் நண்பனைச் சந்திக்கச் செல்கிறார். நலம் விசாரிப்பு எல்லாம் முடிந்து விஷயத்தைச் சொல்கிறார். அதற்கு பூவராகன் (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் குறித்து முழு விவரங்களையும் சொல்கிறார். ரத்னம் மாமாவும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பணத்தைப் போட சம்மதிக்கிறார்.

அரசு பிடிப்பு

அரசு பிடிப்பு

(Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்களில் ஐசிஐசிஐ, ஹெச் டி எஃப் சி போன்ற நிறுவனங்களின் பெயரைப் பார்த்து பயந்தே போய்விட்டார். அதன் பிறகு ஆயிரம் தான் இருந்தாலும் ஒரு அரசு நிறுவனத்தில் பணத்தை போடும் போது, நம் பணத்துக்கு ஏதோ ஒரு உத்திரவாதம் இருக்கும் என்கிற நம்பிக்கையில் LIC MF Multicap Fund-ல் மாதம் 5,000 ரூபாயும், SBI Focused Equity Fund-ல் மாதம் 10,000 ரூபாயும் முதலீடு செய்யத் தொடங்கினார்.

எஸ்பிஐ மதிப்பு

எஸ்பிஐ மதிப்பு

SBI Focused Equity Fund-ல் மாதம் 10,000 என எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யத் தொடங்கினார். ஜூலை 2009-ல் தொடங்கிய முதலீடு ஜூலை 2019-வரை தொடர்கிறது. 121 தவணையாக ரூ.10,000 மேனிக்கு 12,10,000 ருபாய் முதலீடு செய்தார். இப்போது இந்த (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்-ன் மதிப்பு 28,91,770 ரூபாயாக இருக்கிறது. முரட்டு வளர்ச்சி. இந்த (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் சுமாராக ஆண்டுக்கு 19.13 சதவிகித வருமானம் கொடுத்திருக்கிறது.

சிறப்பாக இல்லை

சிறப்பாக இல்லை

LIC MF Multicap Fund-ல் மாதம் 5,000 என எஸ்ஐபியில் பணம் முதலீடு செய்யத் தொடங்கினார். ஜூலை 2009 தொடங்கி இன்று வரை 121 தவணைகளில் 5,000 மேனிக்கு 6,05,000 ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். அந்த (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் இப்போது 9,05,735 ரூபாயாக வளர்ந்திருக்கிறது. இந்த (Mutual funds) மியூச்சுவல் ஃபண்டின் வளர்ச்சி சுமார் 6.11 சதவிகிதமாகத் தான் இருக்கிறது. இது குறைவு தான். அத்தனை பெரிய வளர்ச்சியாக தெரியவில்லை. ஆக மொத்தம் இப்போது நம் ரத்னம் மாமாவிடம் 28.91 + 9.05 = 37.96 லட்சம் ரூபாய் ரெடியாக இருக்கிறது.

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து

ரத்னம் மாமா எதிர்பார்க்காத ஒரு சப்ஜெக்டை கையில் எடுத்திருக்கிறான் குமர வேல். அது தான் கேட்டரிங். சுவிர்சர்லாந்தில் École hôtelière de Lausanne என்கிற கல்லூரி தான் உலக சமையல் கலை வல்லுநர்களுக்கு ஹார்வர்ட் போல. அங்கு சேர்ந்து சமையல் கலையை படித்துவிட்டு, சில வருடம் பெரிய பெரிய 5 ஸ்டார் ஹோட்டல்களில் சமையல், நிர்வாகம் எல்லாம் படித்துவிட்டு கோவையிலேயே ஒரு உலக உணவுப் பட்டறையை நடத்தப் போகிறானாம். ரத்ன வேல் மாமாவும் ஓகே சொல்லி இருக்கிறார்.

நான் சேத்துட்டேன்

நான் சேத்துட்டேன்

ஆனால் அவர் முன் வைப்பது எல்லாம் ஒரே ஒரு விஷயத்தைத் தான், நல்ல வேளை 10 வருஷமா சேத்து வெச்சதுனால என் புள்ள படிக்க நெனச்சத படிக்க வெக்க முடியுதுங்க என தன் லேத் பட்டறைக்குச் செல்கிறார். நம் ரத்னம் மாமா போல நீங்களும், SBI Focused Equity Fund போன்ற நல்ல ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டுமா..? LIC MF Multicap Fund போன்ற சுமாரான வருமானம் தரும் ஃபண்டுகளில் இருந்து உஷாராக இருக்க வேண்டுமா. ஈக்விட்டி மல்டி கேப் ஃபண்ட் ரகங்களில், அதிக வருமானம் கொடுத்த டாப் 10 ஃபண்டுகள் மற்றும் எல் ஐ சி போல சுமாரான வருமானம் கொடுத்த கடைசி 10 ஃபண்டுகளின் விவரங்களை உங்களுக்காக கொடுத்திருக்கிறோம். நல்ல ஃபண்ட்களில் முதலீடு செய்து குழந்தை நினைக்கும் கல்லூரியில் படிக்க வையுங்களேன்.

கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த மற்றும் மோசமான வருமானம் கொடுத்த ஈக்விட்டி மல்டி கேப் ஃபண்டுகள் விவரம்.

கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த மல்டி கேப் மியூச்சுவல் ஃபண்ட் விவரங்கள்   
ஃபண்டுகளின் பெயர் தொடங்கிய தேதி 5 வருட வருமானம் (%) நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Motilal Oswal Multicap 35 Fund - Regular Plan Apr-2014 16.80 13635
Kotak Standard Multicap Fund Regular Plan Sep-2009 14.38 26010
Franklin India Focused Equity Fund Jul-2007 14.11 8653
SBI Focused Equity Fund Oct-2004 13.93 4634
SBI Magnum Multicap Fund Sep-2005 13.93 7583
Axis Focused 25 Fund Jun-2012 13.73 7978
Tata Retirement Savings Fund - Progressive Plan - Regular Plan Nov-2011 13.54 641
Quant Active Fund Mar-2001 12.46 7
Reliance Focused Equity Fund Dec-2006 12.20 4519
Parag Parikh Long Term Equity Fund - Regular Plan May-2013 11.54 1897
கடந்த 5 ஆண்டுகளில் மிகக் குறைந்த வருமானம் கொடுத்த மல்டி கேப் மியூச்சுவல் ஃபண்ட் விவரங்கள்      
ஃபண்டுகளின் பெயர் தொடங்கிய தேதி 5 வருட வருமானம் (%) நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
LIC MF Multicap Fund Apr-1993 5.37 286
Union Multi Cap Fund Jun-2011 6 272
Taurus Starshare (Multi Cap) Fund - Regular Plan Jan-1994 6.76 219
HDFC Focused 30 Fund Sep-2004 7.13 495
Baroda Multi Cap Fund Sep-2003 7.75 820
ICICI Prudential Focused Equity Fund May-2009 7.77 675
IDFC Focused Equity Fund - Regular Plan Mar-2006 7.89 1,646
HSBC Multi Cap Equity Fund Feb-2004 8.69 486
UTI Children's Career Fund-Investment Plan - Regular Plan Feb-2004 9.13 291
Principal Focused Multicap Fund Nov-2005 9.17 333
       

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mutual funds: rathnam mama did sip in 2 multi cap mutual funds for his sons higher studies

Mutual funds: rathnam mama did sip in 2 multi cap mutual funds for his sons higher studies
Story first published: Monday, July 8, 2019, 16:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X