Mutual Funds: பொண்ணு டாக்டர் படிப்புக்காக மாசம் 5,000 போட்டேன், இப்ப 15 லட்சம் வந்துருச்சுல்ல..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம் தலைப்பை, அண்ணன் சுகுமாரன் அவர் நண்பர் ராஜனிடம் சொல்கிறார். அப்படி எதில் முதலீடு செய்தார்..? என்றில் இருந்து முதலீடு செய்தார்..? எவ்வளவு வருமானம் கிடைத்திருக்கிறது. அவரே சொல்கிறார் கேளுங்களேன்.

நமக்கு சொந்த ஊர் மதுரைங்க. படிச்சது பி.காம். ஒரு தனியார் கம்பெனில வேலை பாக்குறேன். நடுத்தர குடும்பம் தான். வழக்கம் போல வாங்குற சம்பளம் கைக்கும் வாய்க்குமே சரியா போய்ருமே. அதே தானுங்க நம்ம வாழ்க்கையிலயும்.

2010 வரை எனக்கு பெரிய சேமிப்பு திட்டம் எல்லாம் கிடையாதுங்க. பொண்டாட்டி புள்ளைங்கள நல்ல படியா பாத்துக்கிட்டா போதும். அவ்வளவு தான் எனக்கு இருந்துச்சு. திடீருன்னு (Mutual Funds) மியூச்சுவல் ஃபண்ட் பத்தி சொன்னாய்ங்க. சரி போட்டு தான் பாப்போமேன்னு ஆரம்பிச்சேன், இன்னக்கி ஒரு நல்ல தொகை இருக்கு என பெருமையாகச் சொல்கிறார்.

 வாழ்க்கை லட்சியம்

வாழ்க்கை லட்சியம்

2010-ல பொண்ணு மூணாம் வகுப்போ நாலாம் வகுப்போ படிச்சிக்கிட்டு இருந்தா. பள்ளிக்கூடத்துல, உங்க வாழ்க்கை லட்சியம் என்னன்னு இங்கிலீஷ்ல ஒரு கட்டுரை எழுதிக் கொண்டு வரச் சொல்லி இருக்காய்ங்க. என் பொண்ணு டாக்டர் ஆகணும்-னு சொல்லி என்னத்தையோ விரிவா எழுதி இருக்கு. நமக்கு தமிழ் மட்டும் தான் படிக்க வரும். அப்புறம் என் பொண்டாட்டி கிட்ட கேட்டா, என் பொண்ணு, இந்த கட்டுரைக்காக எங்க குடும்ப டாக்டர் கிட்டயே பேசி விவரமா எழுதி இருக்கா.

பொண்ணு ஆசை

பொண்ணு ஆசை

அப்ப தாங்க மண்டைல உறச்சிது. பொண்ணு டாக்டர் ஆக, கொஞ்சமாவது பணம் வேணும். ஆகையால் எப்படியாவது ஒரு பெரிய தொகைக்கு ஏற்பாடு பண்ணனும்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன். அப்ப தான் ஒரு நண்பர் மியூச்சுவல் ஃபண்ட் பத்தி சொன்னாரு. அப்ப தான் எனக்கு கம்பெனில 5,000 சம்பளத்த கூட்டி, அக்கவுண்ட்ஸ் மேனேஜரா பதவி உயர்வு கொடுத்திருந்தாய்ங்க.

சம்பள உயர்வு டூ மியூச்சுவல் ஃபண்ட்

சம்பள உயர்வு டூ மியூச்சுவல் ஃபண்ட்

வாங்குன சம்பள உயர்வு 5,000 ரூபாயையும், அப்புடியே ஒரு புது (Mutual Funds) மியூச்சுவல் ஃபண்ட்ல போட ஆரம்பிச்சேன். அந்த மியூச்சுவல் ஃபண்டோட பேர் Mirae Asset Emerging Bluechip Fund - Regular Plan. மாசம் 5,000 ரூபா மேனிக்கு இதுவரை 108 தவணைல 5,40,000 ரூவா கட்டி இருக்கேன். அதோடு மதிப்பு கூட இன்னக்கி 15.03 லட்சம் ரூவா இருக்குங்க. பொண்ணு +2ல 1,189 வாங்கி இருக்கா. இப்பம் எல்லாம் டாக்டர் ஆகணும்னா ஏதோ நீட் எழுதணுமாமே..? இந்த வருஷ நீட் போச்சு. அடுத்த வருஷம் கண்டிப்பா நீட் பாஸ் ஆயிருவேங்குறா. அடுத்த வருஷம் டாக்டர் செலவுக்கு உதவும்ல. நம்ம சூழ்நிலைக்காக, நம்ம குழந்தைங்கள வளர விடாம நிறுத்தக் கூடாது பாருங்க என அடுத்த வேலை பார்க்கிறார்.

விவரங்கள்

விவரங்கள்

நம் சுகுமாரன் அண்ணன் தன் மகளுக்காக (Mutual Funds) மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதைப் போல, நீங்களும் செய்ய வேண்டுமா..? அவர் முதலீடு செய்த லார்ஜ் & மிட் கேப் ரக ஃபண்டுகளிலேயே சிறந்த டாப் 10 (Mutual Funds) மியூச்சுவல் ஃபண்ட்கள் மற்றும் மிகக் குறைந்த வருமானம் கொடுத்த பாட்டம் 10 (Mutual Funds) மியூச்சுவல் ஃபண்ட்களைக் கொடுத்திருக்கிறோம். நல்ல ஃபண்டைத் தேர்ந்தெடுத்து வாழ்கையின் எதிர்காலத்தை திட்டமிட்டுக் கொள்ள வாழ்த்துக்கள்.

லார்ஜ் & மிட் கேப் ஃபண்டுகளில் சிறப்பாக வருமானம் கொடுத்த மற்றும் குறைந்த வருமானம் கொடுத்த லார்ஜ் & மிட் கேப் ஃபண்டுகள் விவரம்

 

கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த லார்ஜ் & மிட் கேப் மியூச்சுவல் ஃபண்ட் விவரங்கள்   
ஃபண்டுகளின் பெயர் தொடங்கிய தேதி 5 வருட வருமானம் (%) நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Mirae Asset Emerging Bluechip Fund - Regular Plan Jul-2010 19.04 7,617
Canara Robeco Emerging Equities Fund - Regular Plan Mar-2005 15.92 4,929
Principal Emerging Bluechip Fund Nov-2008 14.45 2,236
Quant Large and Mid Cap Fund Dec-2006 14.39 5
Kotak Equity Opportunities Fund - Regular Plan Sep-2004 12.38 2,593
Invesco India Growth Opportunities Fund Aug-2007 12.26 1,539
Sundaram Large and Mid Cap Fund Feb-2007 12.13 665
DSP Equity Opportunities Fund May-2000 11.96 5,721
SBI Large & Midcap Fund Feb-1993 11.91 2,614
Tata Large & Mid Cap Fund - Regular Plan Mar-1993 11.23 1,424
கடந்த 5 ஆண்டுகளில் மிகக் குறைந்த வருமானம் கொடுத்த லார்ஜ் & மிட் கேப் மியூச்சுவல் ஃபண்ட் விவரங்கள்      
தொடங்கிய தேதி 5 வருட வருமானம் (%) நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
BOI AXA Large & Mid Cap Equity Fund - Regular Plan Oct-2008 6.47 157
HDFC Growth Opportunities Fund - Regular Plan Feb-1994 6.58 1,330
Reliance Vision Fund Oct-1995 7.21 3,019
ICICI Prudential Large & Mid Cap Fund Jul-1998 8.29 3,154
UTI Core Equity Fund - Regular Plan Feb-1993 8.35 919
L&T Large and Midcap Fund May-2006 9.49 1,390
Franklin India Equity Advantage Fund Mar-2005 9.78 2,729
IDFC Core Equity Fund - Regular Plan Aug-2005 10.14 3,015
Edelweiss Large & Mid Cap Fund Regular Plan Jun-2007 10.35 432
Aditya Birla Sun Life Equity Advantage Fund - Regular Plan Feb-1995 11 5,421

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mutual funds: sugumaran has 15.03 lakh by his sip investment

Mutual funds: sugumaran has 15.03 lakh ruppees through his sip investment
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X