ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கடன் பத்திர வெளியீடு இன்று தொடக்கம்.. மூத்த குடிமக்களுக்கு சலுகை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை : வங்கி அல்லாத நிதி நிறுவனமான ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் கடன் பத்திர வெளியீட்டை இன்று (ஜூலை17) தொடங்கியுள்ளது.

 

மாங்க.. நிதி நிறுவனமான ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திர வெளியீட்டை இன்று தொடங்கியுள்ளது.

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கடன் பத்திர வெளியீடு இன்று தொடக்கம்.. மூத்த குடிமக்களுக்கு சலுகை!

இது குறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் 300 கோடி ரூபாய்க்கு பங்குகளாக மாற்ற இயலாத பத்திரங்களை வெளியிட முடிவெடுத்துள்ளது.

இதோடு இதற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என்று பார்த்த பிறகு, ரூ.10,000 கோடி வரை கூட திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது இந்த நிறுவனம்.

இந்த நிலையில் இந்த கடன் பத்திரங்களின் முதிர்வுக் காலம், 30,42,60 மற்றும் 84 மாதங்களாக இருக்கும் என்றும், இந்த கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 9.5 முதல் 9.7 சதவிகித வட்டியாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த முதலீட்டின் மூலம் முதலீட்டாளர்கள் 9.7 சதவிகிதம் வரை சம்பாதிக்கலாம் என்றும், இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் மூத்த குடிமக்களுக்கு 25 புள்ளிகள், இதில் அதிகம் சலுகை கிடைக்கும் என்றும், இதன் மூலம் அவர்கள் இன்னும் அதிகமாக சம்பாதிக்க முடியும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இதிலும் மாத வட்டித் தொகை, மற்றும் வருட வட்டிதொகை அதன் முதலீட்டு காலங்களுக்கு ஏற்றவாறு மாற்றம் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதோடு இந்த பத்திர வெளியீட்டை ஆகஸ்ட் 16 வரை வெளியிடும் என்று குறிப்பிட்டிருந்தாலும், தேவையான நிதி கிடைத்துவிட்டால் இதற்கு முன்னரே அல்லது பின்னரே இது முடித்து வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதோடு இந்த கடன் பத்திரங்கள் அனைத்தும் பங்குச் சந்தையில் பட்டியிலிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு திரட்டப்படும் நிதியை வைத்து கடன் வழங்குதல், வட்டி திருப்பிச் செலுத்துதல், ஏற்கனவே உள்ள கடன் களின் அசல், மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தலைவர் தீபக் ஐசானி, இந்த கடன்பத்திர வெளியீட்டின் மூலம் 9.5 - 9.7 சதவிகிதம் நிலையான வருமானம் பார்க்கலாம், எனினும் நிறுவனத்தின் வட்டி விகித ஏற்ற இறக்கம், அதிகரித்து வரும் வாராக்கடன், மூலதனம் போதுமான தன்மை இவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை முதலீட்டாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Shriram Transport Finance NCDs Today issue, its may offer up to 9.7%

Shriram Transport Finance NCDs Today issue, its may offer up to 9.7%
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X