சுமார் ரூ.38,000 கோடி வரி மோசடி.. 1,620 போலி இன்வாய்ஸ் பில்கள்.. 154 பேர் கைது..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் வரி மோசடி செய்தவர்கள் மூலம் சுமார் 38,000 கோடி ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக வரி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

ஆமாங்க.. கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் மட்டும் 37,946 கோடி ரூபாய் வரி செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவே ஏப்ரல் - ஜூன் வரையிலான காலத்தில் மட்டும் 6520 கோடி ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

 
சுமார் ரூ.38,000 கோடி வரி மோசடி.. 1,620 போலி இன்வாய்ஸ் பில்கள்.. 154 பேர் கைது..

இது தவிர போலி இன்வாய்ஸ் பில்கள் மூலம், கிட்டதட்ட 11,251 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவே நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 2,805 கோடி ரூபாயாகவும் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளார்.

அதிலும் ஜி.எஸ்.டி அமலப்டுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே, 5 வழக்குகள் மூலம் 12.67 கோடி ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் இரு இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வியாபாரம் இல்லாமல் தவிக்கும் இந்திய நூற்பாலைகள்! ஐயா பிசினஸ் இல்லிங்க முழுக்க நட்டத்துல தான் ஓடுது! வியாபாரம் இல்லாமல் தவிக்கும் இந்திய நூற்பாலைகள்! ஐயா பிசினஸ் இல்லிங்க முழுக்க நட்டத்துல தான் ஓடுது!

இதில் கடந்த 2018 - 2019ம் ஆண்டில் மட்டும் 1,620 போலி இன்வாய்ஸ் பில்கள் மூலம், சுமார் ரூ.11,251.23 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 154 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதே நடப்பு நிதியாண்டில் ஏபரம் முதல் ஜூன் வரையிலான காலத்தில் மட்டும் 666 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 2,804 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 41 பேர் இது சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வந்த பின்னர் வரி மோசடி வழக்குகள், கடந்த 2017 - 2018 ஜூலை முத; மார்ச் வரையிலான காலத்தில் 1,216 கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட 424 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

இந்த வகை மோசடிகளைக் குறைக்க அரசு பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்றும் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tax fraud வரி போலி
English summary

Tax officials detected Rs.37,946 crore worth of tax fraud in last financial year

Tax officials detected Rs.37,946 crore worth of tax fraud in last financial year
Story first published: Tuesday, July 16, 2019, 18:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X