ஹைப்ரிட் ரக மியூச்சுவல் ஃபண்டுகள் 10 ஆண்டுகளில் எவ்வளவு வருமானம் கொடுத்திருக்கின்றன..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஈக்விட்டி சார் (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்ட் என்றால் ஈக்விட்டி முதலீடுகளில் 60 சதவிகிதத்துக்கு மேலான சொத்துக்களை முதலீடு செய்து நிர்வகிப்பார்கள். கடன் சார் (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்ட் என்றால் பெரும்பான்மையான சொத்துக்களை கடன் சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்வார்கள்.

 

இந்த ஹைப்ரிட் (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஈக்விட்டி மற்றும் கடன் சார்ந்த இரண்டு திட்டங்களிலும் முதலீடு செய்து பாதுகாப்பான லாபத்தை கொடுக்கும் ஒரு மியூச்சுவல் ஃபண்ட். இதில் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டை விட கொஞ்சம் கூடுதல் ரிஸ்க்கும், ஈக்விட்டி சார் மியூச்சுவல் ஃபண்டை விட மிகக் குறைவான ரிஸ்க் கொண்ட ஃபண்டுகளாக இருக்கும். எனவே மியூச்சுவல் ஃபண்டில் நல்ல வருமானம் வேண்டாம், ஆனால் குறைவான ரிஸ்க் மட்டுமே எடுக்க வேண்டும் என்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.

 ஹைப்ரிட் ரக மியூச்சுவல் ஃபண்டுகள் 10 ஆண்டுகளில் எவ்வளவு வருமானம் கொடுத்திருக்கின்றன..!

இதில் டாப் 10 மற்றும் மோசமான 10 மியூச்சுவல் ஃபண்ட் விவரங்களை இங்கே கொடுத்திருக்கிறோம். மியூச்சுவல் ஃபண்ட் போல வேகமாக அதிகரிக்கும் ஒரு நிதி முதலீட்டை இந்தியாவில் பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆக விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கும் ஃபண்ட் ரகங்கள் கொடுத்திருக்கும் வருமானத்தைப் பார்த்து, அந்த ரக (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள்.

ஒருவேளை, இதுவரை (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்டுகளில் பெரிய நாட்டம் இல்லாதவர்கள், (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்டுகள் கொடுத்திருக்கும் வருமானத்தைப் பார்த்தாவது ஒரு நல்ல (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யுங்களேன்.

குறிப்பு: 1. வாசகர்கள் இந்த (Mutual Funds)மியூச்சுவல் ஃபண்ட்களின் பெயரை இணையத்தில் தேடி விவரங்களை படிக்க வசதியாக இருக்க வேண்டி ஃபண்டுகளின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறோம்.
2. அதோடு ஒவ்வொரு வருடமும், ஒரு ஃபண்ட் ரகம், எவ்வளவு வருமானம் கொடுத்திருக்கிறது (Annual Return) என்கிற விவரத்தைத் தான் கொடுத்திருக்கிறோம். இது டிரெய்லிங் ரிட்டன் கிடையாது என்பதை புரிந்து கொள்ளவும்.

 

நல்ல முதலீட்டு திட்டத்தை தேர்ந்து எடுத்து உங்கள் பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வாழ்த்துகள்.

அட்டவணை

கடந்த 5 ஆண்டுகளில் நல்ல லாபம் கொடுத்த ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்ட் விவரங்கள்
சிறப்பாக வர்த்தகமாகும் ஹைப்ரிட் ஃபண்டுகளின் பெயர்வகை5 வருட வருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Tata Retirement Savings Fund - Moderate Plan - Regular PlanHY-AH13.821,101
SBI Equity Hybrid FundHY-AH12.1930,028
ICICI Prudential Equity & Debt FundHY-AH11.7526,036
DSP Equity & Bond FundHY-AH11.756,361
HDFC Hybrid Equity FundHY-AH11.5122,665
Canara Robeco Equity Hybrid Fund - Regular PlanHY-AH11.452,242
HDFC Children's Gift FundHY-AH11.332,808
Franklin India Equity Hybrid FundHY-AH11.21,947
SBI Magnum Children's Benefit FundHY-CH11.1263
L&T Hybrid Equity FundHY-AH10.949,382
கடந்த 5 ஆண்டுகளில் நஷ்டம் கொடுத்த ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்ட் விவரங்கள்
மோசமாக வர்த்தகமாகும் ஹைப்ரிட் ஃபண்டுகளின் பெயர்வகை5 வருட வருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
JM Equity Hybrid FundHY-AH3.8131
BOI AXA Conservative Hybrid Fund - Regular PlanHY-CH4.61194
BOI AXA Equity Debt Rebalancer Fund - Regular PlanHY-DAA4.68180
UTI Multi Asset Fund - Regular PlanHY-MAA4.78804
IDBI Equity Savings FundHY-EQ S5.5120
IDFC Equity Savings Fund - Regular PlanHY-EQ S6.0777
Principal Balanced Advantage FundHY-DAA6.08223
JM Arbitrage FundHY-AR6.2973
Axis Regular Saver FundHY-CH6.3262
DSP Regular Savings FundHY-CH6.39287
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

top 10 hybrid mutual fund and bottom 10 hybrid mutual fund details

top 10 hybrid mutual fund and bottom 10 hybrid mutual fund details
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X