Income Tax நாம எல்லாரும் வரி தாக்கல் பண்ணனுமா? அப்ப அந்த 5 லட்சம் எப்ப நடைமுறைக்கு வரும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இது Income Tax தாக்கல் செய்யும் காலம். எல்லா வெகு ஜன மக்களுக்கும் தாங்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டுமா..? என்கிற அடிப்படை சந்தேகம் தொடங்கி, எனக்கு எவ்வளவு வரி செலுத்த வேண்டி இருக்கும் என்பது வரை பலருக்கு ஏதோ ஒரு விஷயத்தில் குழப்பம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

 

அதில் மிக முக்கியமான விஷயமாக மூன்று கேள்விகள் பொது மக்களிடையில் நிலவிக் கொண்டிருக்கிறது.
1. யார் எல்லாம் Income Tax தாக்கல் செய்ய வேண்டும்.
2. Income Tax கட்டுதல் மற்றும் Income Tax தாக்கல் செய்வதற்கு உள்ள வித்தியாசம்.
3. 2018 - 19 நிதி ஆண்டுக்கு எப்படி வருமான வரி கணக்கிடப்படும்.

இந்த மூன்றையும் கூடுமான வரை சுருக்கமாகவும் எளிமையாகவும் விளக்க முயற்சி செய்திருக்கிறோம். வருமான வரிச் சட்டங்கள் பல நுணுக்கமான விஷயங்களை உள்ளடக்கியது என்பதால் பொதுவாக சட்டம் சொல்வதைத் தான் இங்கு சொல்ல இருக்கிறோம். ஒவ்வொருவரும், தங்கள் ஆடிட்டர்களைச் சந்தித்து முறையாக கேட்டு அறிந்து கொண்டு Income Tax தாக்கல் செய்வது சாலச் சிறந்தது.

ஒரு லட்சத்துக்கு ரூ.1 கோடி தாரோம்.. வாங்க.. ஆசை காட்டி அழைக்கும் கும்பல்.. மக்களே எச்சரிக்கை! ஒரு லட்சத்துக்கு ரூ.1 கோடி தாரோம்.. வாங்க.. ஆசை காட்டி அழைக்கும் கும்பல்.. மக்களே எச்சரிக்கை!

1. யார் எல்லாம்Income Tax தாக்கல் செய்யணும்

1. யார் எல்லாம்Income Tax தாக்கல் செய்யணும்

1. வாடகை வீடோ சொந்த வீடோ வருமான வரித் துறை குறிப்பிட்டிருக்கும் சதுர அடிக்கு மேல் இருக்கும் வீடுகளில் குடி இருந்தால் கட்டாயம் Income Tax தாக்கல் செய்ய வேண்டும்.
2. சொந்த இடமோ வாடகை இடமோ, வருமான வரித் துறை குறிப்பிட்டிருக்கும் சதுர அடிக்கு மேல் வணிக ரீதியான பயன்பாட்டுக்கு நிலம் பயன்படுத்தினாலேயே, அவர்கள் கட்டாயம் Income Tax தாக்கல் செய்ய வேண்டும்.
3. காரை சொந்தமாகவோ அல்லது லீஸ் தொகைக்கோ வைத்திருந்தால் கட்டாயம் Income Tax தாக்கல் செய்ய வேண்டும்.

1.1 இவர்கள் எல்லாம்Income Tax தாக்கல் செய்யணும்

1.1 இவர்கள் எல்லாம்Income Tax தாக்கல் செய்யணும்

4. க்ரெடிட் கார்ட் எனப்படும் கடன் அட்டை கையில் இருந்தால் கட்டாயம் Income Tax தாக்கல் செய்ய வேண்டும்.
5. வெளிநாடுகளில் சொத்து வைத்திருந்தால் கட்டாயம் Income Tax தாக்கல் செய்ய வேண்டும்.
6. வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்தால் கட்டாயம் Income Tax தாக்கல் செய்ய வேண்டும்.
7. ஆண்டுக்கு 25,000 ரூபாய்க்கு மேல் செலுத்தி ஏதாவது க்ளப்களில் உறுப்பினராக இருந்தால் கட்டாயம் Income Tax தாக்கல் செய்ய வேண்டும்.

2. வருமான வரிப் பிடித்தம்
 

2. வருமான வரிப் பிடித்தம்

நம் அலுவலகத்தில் நம் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வருமான வரியாக பிடித்து, அரசிடம் செலுத்தி விடுவார்கள். இதற்கு பெயர் வருமான வரி பிடித்தம். பிடித்த பணத்தை அலுவலகம் அரசிடம் கொடுத்து விடும். ஆக நமக்கு பதிலாக நம் அலுவலகம் நம் பெயரில் வரி செலுத்திவிட்டது, அவ்வளவு தான். இந்த வரி செலுத்தியதைத் தான் நாம் வருமான வரி தாக்கல் செய்து விட்டோம் எனத் தவறாகப் புரிந்து கொள்கிறோம். வருமான வரி செலுத்துவது வருமான வரி தாக்கல் ஆகாது என்பதை புரிந்து கொள்ளவும்.

2.1 வருமான வரித் தாக்கல்

2.1 வருமான வரித் தாக்கல்

"இந்த 2018 - 19 நிதி ஆண்டுக்கு எனக்கு சம்பளத்துல இருந்து இவ்வளவு வருமானம், என்னோட சைடு இன்கம் இவ்வளவு, என்னோட ஃபிக்ஸட் டெபாசிட்ல இருந்து இவ்வளவு வட்டி வருமானம், எனக்கு பிசினஸ்ல இருந்து இவ்வளவு வருமானம், அதுல செலவுகள் போக என் லாபம் இவ்வளவு தான். இந்த லாபத்துக்கு, இவ்வளவு ரூபாய் வரியா கட்டிட்டேன் கட்டுனதுக்கான ஆதாரங்களோட இந்த வருமான வரிப் படிவத்த சமர்பிக்கிறேன்னு" எழுத்து மூலமா, அதாவது அவங்க கொடுக்குற வருமான வரி பார்ம் மூலமா பண்ணா தான் ஒரு முழுமையான வருமான வரித் தாக்கல்.

2.3 ஒரு பகுதி தான்

2.3 ஒரு பகுதி தான்

ஆக வருமான வரி செலுத்துவது என்பது வருமான வரித் தாக்கல் செய்வதில் பாதி வேலை மட்டுமே முடிந்திருப்பதாக அர்த்தம். மீதி வேலையான வருமான வரி தாக்கல் செய்வதை நாம் தான் முன் வந்து செய்து முடிக்க வேண்டும். இது தான் வருமான வரி செலுத்துவதற்கும், செலுத்திய பின் வருமான வரி தாக்கல் செய்வதற்கும் உள்ள தொடர்பு. ஆக யார் வருமான வரி செலுத்தினாலும், அவர்கள், தங்கள் வருமான வரிப் படிவத்தையும் நிரப்பி அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் வருமான வரிச் சட்டம் 139 உட்பிரிவு 1-ன் கீழ் உங்கள் வீட்டுக்கு (பான் அட்டையில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விலாசத்துக்கு) நோட்டீஸ் வரும்.

எதெல்லாம் அடக்கம்

எதெல்லாம் அடக்கம்

உங்கள் சம்பளம், கமிஷன், வட்டி வருமானம், முதலீடுகளில் இருந்து வரும் வருமானம், தனி நபர் பிசினஸ் வருமானம் கூட இதில் அடங்கும். ஆக ஒரு ஆண்டில் உங்களுக்கும் வரும் அனைத்து வருமானம் + சம்பளத்தை, வருமான வரி கணக்கிட எடுத்துக் கொள்ள வேண்டும். இது சம்பள தாரர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

3. 2018 - 19 நிதி ஆண்டு கணக்கு

3. 2018 - 19 நிதி ஆண்டு கணக்கு

2018 - 19 நிதி ஆண்டில் 60 வயதுக்கு உட்பட்ட தனி நபர்களுக்கு வரும் ஆண்டு மொத்த வருமானம் (சம்பளம் + தனிநபர் பிசினஸ் வருமானம் + கமிஷன் + வட்டி + முதலீட்டு வருமானம்)
ஒரு ரூபாய் முதல் 2,50,000 ரூபாய் வரை வரி கிடையாது
2,50,001 முதல் 5,00,000 ரூபாய் வரை 5% (12,500) + வரிக்கு 4% செஸ் வரி என 13,000 ரூபாய் செலுத்த வேண்டும்
5,00,0001 முதல் 10,00,000 ரூபாய் வரை என்றால் ஏற்கனவே சொன்ன 13,000 ரூபாயுடன், இந்த 5,00,000 ரூபாய்க்கு 20% (1,00,000) + வரிக்கு 4% செஸ் வரி 1,04,000 என மொத்தம் 13,000 + 1,04,000 = 1,17,000 செலுத்த வேண்டும்.

உதாரணம்

உதாரணம்

நந்தனாருக்கு, வருமான வரிக் கழிவுகள் எல்லாம் போக ஆண்டுக்கு 10,00,000 ரூபாய் வருமானம் என வைத்துக் கொள்வோம். அவருக்கு எப்படி 2018 - 19 நிதி ஆண்டுக்கு வருமான வரி கணக்கிட வேண்டும் எனக் கீழே அட்டவணையில் பார்க்கவும்.

அட்டவணை 1 நந்தனார்:

2018 - 19 நிதி ஆண்டில் நந்தனாரின் வருமான வரிக் கணக்கு 
சம்பளம் 658,000
பிசினஸ் வருமானம் 182,000
இன்ஷூரன்ஸ் கமிஷன் 215,000
வட்டி வருமானம் 235,000
மொத்த ஆண்டு வருமானம் 1,290,000
Less: 80C - PF, LIC, FD 150,000
Less: நிலையான கழிவுகள் 40,000
Less: Sec 24: வீட்டுக் கடன் வட்டி 100,000
வரிக் கழிவுகளுக்குப் பின் மொத்த வருமானம் 1,000,000
ரூ 1 முதல் 2,50,000 வரைக்குமான வரி 0
ரூ 2,50,001 முதல் 5,00,000 வரைக்குமான வரி 5% (2,50,000 - 5%) 12,500
5% வரிக்கு 4% செஸ் (12500*4%) 500
ரூ 5,00,001 முதல் 10,00,000 வரைக்குமான வரி 20% (500000 * 20%) 100,000
20% வரிக்கு 4% செஸ் (100000*4%) 4,000
மொத்தம் செலுத்த வேண்டிய வரி 117,000
உதாரணம் 2:

உதாரணம் 2:

அப்பருக்கு வருமான வரிக் கழிவுகள் எல்லாம் போக ஆண்டுக்கு 4,90,000 ரூபாய் வருமானம் என வைத்துக் கொள்வோம். அவருக்கு எப்படி 2018 - 19 நிதி ஆண்டுக்கு வருமான வரி கணக்கிட வேண்டும் எனக் கீழே அட்டவணையில் பார்க்கவும்.

அட்டவணை 2 அப்பர்:

2018 - 19 நிதி ஆண்டில் அப்பரின் வருமான வரிக் கணக்கு 
சம்பளம் 390,000
பிசினஸ் வருமானம் 40,000
இன்ஷூரன்ஸ் கமிஷன் 75,000
வட்டி வருமானம் 100,000
மொத்த ஆண்டு வருமானம் 605,000
Less: 80C - PF, LIC, FD 75,000
Less: நிலையான கழிவுகள் 40,000
வரிக் கழிவுகளுக்குப் பின் மொத்த வருமானம் 490,000
ரூ 1 முதல் 2,50,000 வரைக்குமான வரி 0
ரூ 2,50,001 முதல் 5,00,000 வரைக்குமான வரி 5% (2,40,000 *5%) 12,000
5% வரிக்கு 4% செஸ் (12000*4%) 480
மொத்தம் செலுத்த வேண்டிய வரி 12,480
உதாரணம் 3

உதாரணம் 3

சுந்தருக்கு வருமான வரிக் கழிவுகள் எல்லாம் போக ஆண்டுக்கு 3,49,532 ரூபாய் வருமானம் என வைத்துக் கொள்வோம். அவருக்கு எப்படி 2018 - 19 நிதி ஆண்டுக்கு வருமான வரி கணக்கிட வேண்டும் எனக் கீழே அட்டவணையில் பார்க்கவும்.

அட்டவணை 3 சுந்தர்:

2018 - 19 நிதி ஆண்டில் சுந்தரின் வருமான வரிக் கணக்கு 
சம்பளம் 644,532
பிசினஸ் வருமானம் 0
இன்ஷூரன்ஸ் கமிஷன் 40,000
வட்டி வருமானம் 170,000
மொத்த ஆண்டு வருமானம் 854,532
Less: 80C - PF, LIC, FD 150,000
Less: நிலையான கழிவுகள் 40,000
Less: Sec 24: வீட்டுக் கடன் வட்டி 200,000
Less: 80D - ஹெல்த் இன்ஷூரன்ஸ் 50,000
Less: 80G - அரசு அனுமதி பெற்ற நன்கொடைகள் 65,000
வரிக் கழிவுகளுக்குப் பின் மொத்த வருமானம் 349,532
ரூ 1 முதல் 2,50,000 வரைக்குமான வரி 0
ரூ 2,50,001 முதல் 5,00,000 வரைக்குமான வரி 5% (99532 * 5%) 4,977
Less: 87A வரிக் கழிவு (வரிக் கழிவுக்குப் பின் மொத்த வருமானம் 3.5 லட்சத்துக்குள் இருந்தால் மட்டும்) 2,500
வரிக் கழிவு போக செலுத்த வேண்டிய வரி 2,477
5% வரிக்கு 4% செஸ் (2477*4%) 99
மொத்தம் செலுத்த வேண்டிய வரி 2,576

ஆக மகா ஜனங்களே, இந்த 2018 - 19 நிதி ஆண்டுக்கு, நிதி அமைச்சர் சொன்ன 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் மொத்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி கிடையாது என்கிற அறிவிப்பு செல்லுபடியாகாது. இந்த 5 லட்சம் ரூபாய் அறிவிப்பு அடுத்த 2019 - 20 நிதி ஆண்டுக்குத் தான் செல்லுபடியாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Who has to file income tax returns and when 5 lakh rebate will be amended

Who has to file income tax returns and when 5 lakh rebate will be amended
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X