டெல்லி : தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமான விப்ரோ நிறுவனம், னடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் நிகரலாபம், 12.6 சதவிகிதம் அதிகரித்து, 2,388 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 2,121 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் கடந்த நான்காவது காலாண்டில், இதன் நிகரலாபம் 2483 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே வருவாய் 5.3 சதவிகிதம் அதிகரித்து 14,716 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த ஆண்டு இதே காலத்தில் வருவாய் 13,978 கோடி ரூபாயாக இருந்தது என்றும் கூறியுள்ளது இந்த நிறுவனம். இதே நான்காவது காலாண்டில் வருவாய் 15,006 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே இந்த நிறுவனம் ஐ.டி துறையில் பெறப்பட்ட வர்த்தகத்தின் மூலம் 2.03 பில்லியன் டாலரிலிருந்து 2.08 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதோடு ஐ.டி துறையில் 18.4 சதவிகித மார்ஜினில், அதிகளவிலான பணப்புழக்கத்தால் 98.8 வருமானம் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதையடுத்து, இவரது மகன் அசிம் பிரேம்ஜியின் மகன் ரிஷாத் பிரேம்ஜி வரும் ஜூலை 31ஆம் தேதியில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு முழுநேர இயக்குநராக செயல்படுவார் என்றும் விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதே அபுதாலி நீமுச்வாலா இந்த நிறுவனத்தில் புதிய தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், கடந்த நான்காவது காலாண்டை போல, நடப்பு நிதியாண்டிலும் 323.1 மில்லியன் ஈக்விட்டி பங்குகளை, 10,500 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இதற்கான ஒப்புதல் பங்குதாரர்கள் மத்தியில் பெறப்பட்டு பின்னர், செபியிடம் அனுமதி பெற்று, பின்னர் பங்குகளை திரும்ப வாங்கும் முறை செயல்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் டிவிடெண்ட் குறித்த எந்த வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications