அடேங்கப்பா.. இந்திய நிறுவனம் வியட்னாமில் முதலீடா.. அதுவும் ரூ.142 கோடியா.. நல்ல விஷயம் தானே!

ஹைதராபாத் : இந்தியாவைச் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கான்டினென்டல் காஃபி லிமிடெட் நிறுவனம், தனது வியட்னாம் பிளான்டில் 20 மில்லியன் டாலர், அதாவது இந்திய ரூபாயில் கிட்டதட்ட 143 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூறியுள்ளது.

ஆமாங்க.. இந்த நிறுவனம் ஏற்கனவே Continental Coffee Limited நிறுவனம், வியட்னாமில் தனது கிளையை நிறுவியுள்ளது. இந்த நிலையில் அந்த பிளாண்டை மேலும் விரிவாக்கம் செய்வதற்காக 20 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் மேலும் இந்த வியட்னாம் பிளான்ட் உற்பத்தி 10,000 டன்னிலிருந்து, 13,500 டன்னாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

அடேங்கப்பா.. இந்திய  நிறுவனம்  வியட்னாமில் முதலீடா.. அதுவும் ரூ.142 கோடியா.. நல்ல விஷயம் தானே!

எனினும் ஆந்திரா மாநிலம் சித்தூரில் அமையவிருக்கும் யூனிட்டில், ஒருங்கிணைப்பு மற்றும் பேக்கேஜிங் பிரிவு, 5,000 டன் கொள்ளளவு கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சல்லா ராஜேந்திர பிரசாத், இந்த முதலீடுகள் நடப்பு நிதியாண்டில் கிடைக்கும் வருவாயிலிருந்து, இந்த முதலீட்டு நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் மும்பை பங்கு சந்தையில் பட்டியிடப்பட்டிருக்கும் இந்த பங்கானது, நடப்பு நிதியாண்டில் 2019 - 2020ல் 15 - 20 சதவிகித அளவில் வளர்ச்சி இருக்கலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. தில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இந்த நிறுவனம் கடந்த ஆண்டே சுமார் 1,100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது நான்கு பிளான்ட்களை கொண்டுள்ள இந்த நிறுவனம் இரண்டினை இந்தியாவிலும், இரண்டினை மற்ற நாடுகளிலும் கொண்டுள்ளது. காஃபி உற்பத்தியில் முக்கிய ஏற்றுமதியாளரான இந்த நிறுவனம், 90 நாடுகளுக்கு தற்போது ஏற்றுமதி செய்து வருகிறது.

மேலும் சுமார் 50,000 டன்கள் வரை வருடத்துக்கு ஏற்றுமதி செய்து வருவது கவனிக்கதக்கது. இதுதவிர இந்த நிறுவனம் 1000 கலவைகளில் 100க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கிறது.

இந்த நிலையில் இந்தியா காஃபி சந்தை அதிகமான தேவை வளர்ச்சி இருப்பதால், உள்நாட்டு சந்தையிலும் கவனம் செலுத்த இருப்பதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. எப்படியோ ஒரு இந்திய நிறுவனம் இந்த அளவு வளர்ச்சி கண்டிருப்பது நல்ல விஷயம் தானே.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+