நீங்கள் தலைப்பில் படித்தது சரி தான், 0 சதவிகித வட்டிக்கு Home Loan கொடுத்துக் கொண்டிருக்கிறது ஒரு வங்கி.
ஆனால் ஒரு சின்ன பிரச்னை என்னவென்றால்... அந்த வங்கி டென்மார்க் நாட்டில் இருக்கிறது. அந்த வங்கியின் பெயர் Jyske வங்கி.
உலகிலேயே இந்த வங்கி தான் முதல் முறையாக மைனஸில் Home Loan கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறது கார்டியன் பத்திரிக்கை.
வங்கி இயக்கம்
முதலில் வங்கி எப்படி செயல்படும் என்பதை புரிந்து கொள்வோம். ஒரு வங்கி இருக்கிறது.
அந்த வங்கியில் பணத்தை டெபாசிட் செய்கிறார்கள்.
டெபாசிட் செய்த பணத்துக்கு 8% வட்டி கொடுக்கிறது வங்கி.
பின் டெபாசிட்டாக வாங்கிய பணத்தை கடன் தேவை உள்ளவர்களுக்கு கடனாகக் கொடுத்து ஆண்டுக்கு 12 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் வட்டி வசூலிக்கிறது.
கொடுத்த கடன் பணத்துக்கு 12% வட்டி வரவு,
டெபாசிட் பணத்துக்கு 8% வட்டி செலவு போக
மீதமுள்ள 4% தான் வங்கியின் லாபம்.
இப்படித் தான் வங்கி இயங்குகிறது.
அதெப்படி -0.5
Jyske வங்கி தான் டென்மார்க் நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாம். Jyske வங்கியால் நிறுவன முதலீட்டாளர்களிடம் மைனஸ் வட்டி விகிதத்தில் பணத்தைத் திரட்ட முடிகிறதாம். அதாவது Jyske வங்கியில் ஒரு நிறுவன முதலீட்டாளர் பணம் போட வேண்டும் என்றால், பணம் போடுபவர்கள் வட்டி செலுத்த வேண்டும். இப்படி பணத்தை வாங்கிக் கொள்வதற்கே வட்டி வசூலிப்பதால், Jyske வங்கிக்கு எளிதில் செலவே செய்யாமல் வருமானத்தோடு பணம் கிடைக்கிறதாம்.
நோ வட்டி
ஆகையால் தான் Jyske வங்கி தன் Home Loan வாடிக்கையாளர்களுக்கு -0.5 சதவிகித வட்டிக்கு கடன் கொடுக்கிறார்களாம். அதாவது நாம் வங்கியில் கடன் வாங்கினால், நாம் கடன் வாங்கிய தொகைக்கு அரை சதவிகிதம் வட்டி கொடுக்கிறது வங்கி. ஆனால் உண்மையில் Jyske வங்கி இப்படி கூடுதல் வட்டிப் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதில்லையாம். அதற்கு மாறாக கூடுதல் பணத்தை கணக்கில் குறைத்துக் கொள்வார்களாம்.
கணக்கில் வரவு
எடுத்துக் காட்டாக Jyske வங்கியில் 10,000 ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்துகிறார்கள் என்றால் 10,050 ரூபாயை நம் கடன் கணக்கில் இருந்து கழித்துக் கொள்வார்களாம். எக்காரணத்தை முன்னிட்டும் இந்த 0.5 சதவிகித வட்டியை பணமாக வாடிக்கையாளர்கள் கையில் கொடுக்கமாட்டார்களாம். கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இல்லையா..? இங்கு கடன் வாங்குபவர்களுக்கு கொண்டாட்டம் தான். ஆனால் டெபாசிட் செய்பவர்களுக்கு மேலே சொன்னது போல திண்டாட்டம் தான்.
டெபாசிட்டுக்கு வட்டி கொடுங்க
டென்மார்க் நாட்டில் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்பவர்களுக்கு வட்டியை மைனஸில் போடவும் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம். அதாவது ஒருவர் டென்மார்க் வங்கிகளில் பணத்தைப் போட்டால், அவர் தான் வங்கிக்கு பணம் கொடுக்க வேண்டும். வங்கி வட்டிப் பணம் தராது. 5,00,000 யூரோக்களுக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தால் ஆண்டுக்கு 0.6 சதவிகிதம் வட்டித் தொகையை, டெபாசிட் செய்பவர் வங்கிக்கு கொடுக்க வேண்டும் என சுவிட்சர்லாந்தில் யூபிஎஸ் வங்கி கடந்த வாரம் சொன்னது கவனிக்கத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications