மும்பை : தொடர் சரிவைக் கண்டு வரும் ஐ.டி.பி.ஐ வங்கியின் காலாண்டு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதிலும் நிகர வட்டி வருவாய் குறைந்ததையடுத்து, நிகர நஷ்டம் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில், இந்த வங்கி ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 3800.84 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுவே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 2,409.89 கோடி ரூபாயாக நஷ்டம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் நிகர வட்டி வருமான ஆனது கடன் களில் ஈட்டப்பட்ட வட்டி மற்றும் வைப்புத் தொகைக்கு செலுத்தப்பட்ட வட்டி வித்தியாசம் ஆகியவை 11.04 சதவிகிதம் குறைந்து, 1,457.73 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 1,638.62 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
எனினும் முக்கிய கட்டணம் வருமானத்தை உள்ளடக்கிய பிற வருமானம், மூன்று மாதங்களில் 29.55 சதவிகிதம் உயர்ந்து, 832.33 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 642.84 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவே செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 29.12 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த மார்ச் காலாண்டில் 27.47 சதவிகிதமாக இருந்தது. இதே போல கடந்த ஆண்டில் இதே ஜூன் காலாண்டில் 30.78 சதவிகிதமாகவும் இருந்தது.
இந்த நிலையில் மொத்த வாராக்கடன் 51,657 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது, இதுவே கடந்த ஆண்டு 50,028 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய தொழில் துறையின் வளர்ச்சிக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டதே ஐடிபிஐ வங்கி. ஆனால் வாராக்கடன் பிரசனையில் சிக்கி நஷ்டத்தில் இயங்கி வந்த அந்த வங்கியின் வங்கியின் குறிப்பிட்ட பங்குகளை வாங்குவதற்கான செயல் திட்டம் ஏற்கனவே திட்டம் வகுக்கப்பட்ட நிலையில், ஐடிபிஐ வங்கியின் 51 சதவிகித பங்குகளை எல்.ஐ.சி நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஐடிபிஐ வங்கி பொதுத் துறை வங்கி என்ற நிலையிலிருந்து தனியார் வங்கியாக மாற்றம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த வங்கியின் வாராக்கடன் அளவில் மாற்றம் ஏதும் இன்றி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலும் நஷ்டம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வங்கியின் பங்கு விலை, 27.15 சதவிகிதமாக வர்த்தகமாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications