வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்களில் போடும் பணத்துக்கு வரி அதிகமாக செலுத்த வேண்டி இருக்கிறது. ஆக கொஞ்சம் வரியை குறைவாகச் செலுத்த வேண்டும், ஆனால் வருமானம் இந்த அளவுக்கு நிலையாக இருக்க வேண்டும் என்று தோன்றுகிறதா..? வாருங்கள் மியூச்சுவல் ஃப்ண்ட்களில் கடன் சார் ஃபண்டுகளில் முதலீடு செய்வோம்.
இந்த முறை நீண்ட கால கடன் சார் இன்வெஸ்ட்மெண்ட்களில் முதலீடுச் செய்யும் ஃபண்டுகள் மற்றும், மீடியம் டூ லாங் டியூரேஷன் ரக கடன் சார் மியூச்சுவல் ஃபண்ட்கள் பற்றியும் பார்ப்போம்.

நீண்ட கால கடன் சார் மியூச்சுவல் ஃபண்டுகள் என்றால் என்ன..?
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் திரட்டும் நிதியில் பெரும் பகுதியான முதலீடுகளை 7 ஆண்டுகளுக்கு மேல் (மெக்காலே கால அளவையில்) கடன் பத்திரங்கள், கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் போன்ற முதலீடுகளில் முதலீடு செய்து, வரும் வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுத்தால் அதுவே லாங் டேர்ம் கடன் சார் மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும். இப்போது வரை இந்தியாவில் இதற்கு ஒரே ஒரு ஃபண்ட் தான் இருக்கிறது. ICICI Prudential long term bond fund கடந்த ஐந்து ஆண்டுகளில் 10.15 சதவிகிதம் வருமானம் கொடுத்து இருக்கிறது.
பொதுவாக நீண்ட கால கடன் சார் ஃபண்டுகளில் வட்டி விகிதங்கள் ரிஸ்க் அதிகமாக இருக்கும் எனவே ஜாக்கிரதையாக யோசித்து, தீர விசாரித்து இந்த ஃபண்டில் முதலீடு செய்யவும்.
மீடியம் டூ லாங் டேர்ம் கடன் சார் மியூச்சுவல் ஃபண்டுகள் என்றால் என்ன..?
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் திரட்டும் நிதியில் பெரும் பகுதியான முதலீடுகளை 3 முதல் 7 ஆண்டுகளுக்குள் (மெக்காலே கால அளவையில்) கடன் பத்திரங்கள், கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் போன்ற முதலீடுகளில் முதலீடு செய்து, வரும் வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு பிரித்துக் கொடுத்தால் அதுவே மீடியம் டூ லாங் டேர்ம் கடன் சார் மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகும்.
அப்படி கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த மற்றும் மோசமான வருமானம் கொடுத்த மீடியம் டூ லாங் டேர்ம் கடன் சார் மியூச்சுவல் ஃபண்டுகளின் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்திருக்கிறோம். கீழே கொடுத்திருக்கும் அட்டவணையைப் பயன்படுத்தி நல்ல ஃபண்டைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன். உங்கள் வசதிக்காக (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்களின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறோம்.
| கடந்த 5 ஆண்டில் நல்ல வருமானம் கொடுத்த கடன் மியூச்சுவல் ஃபண்ட்கள் | ||||
|---|---|---|---|---|
| ஃபண்டுகளின் பெயர் | ஃபண்ட் வகை | தொடங்கிய தேதி | வருமானம் (%) | நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr) |
| IDFC Bond Fund Income Plan - Regular Plan | DT-M to LD | Jul-2000 | 9.23 | 670 |
| ICICI Prudential Debt Management Fund | Invest Now | DT-M to LD | Dec-2003 | 9.20 | 178 |
| Reliance Income Fund | Invest Online | DT-M to LD | Jan-1998 | 9.05 | 249 |
| ICICI Prudential Bond Fund | Invest Now | DT-M to LD | Aug-2008 | 8.92 | 3,280 |
| SBI Magnum Income Fund | Invest Online | DT-M to LD | Nov-1998 | 8.86 | 1,206 |
| Aditya Birla Sun Life Income Fund | Invest Online | DT-M to LD | Oct-1995 | 8.77 | 981 |
| Canara Robeco Income Fund - Regular Plan | Invest Online | DT-M to LD | Sep-2002 | 8.67 | 108 |
| Kotak Bond Fund - Regular Plan | Invest Online | DT-M to LD | Nov-1999 | 8.26 | 1,882 |
| HSBC Debt Fund | Invest Online | DT-M to LD | Dec-2002 | 7.85 | 43 |
| HDFC Income Fund | Invest Online | DT-M to LD | Sep-2000 | 7.84 | 608 |
| கடந்த 5 ஆண்டில் மோசமான வருமானம் கொடுத்த கடன் மியூச்சுவல் ஃபண்ட்கள் | ||||
| ஃபண்டுகளின் பெயர் | ஃபண்ட் வகை | தொடங்கிய தேதி | வருமானம் (%) | நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr) |
| JM Income Fund | DT-M to LD | Apr-1995 | 4.73 | 11 |
| UTI Bond Fund - Regular Plan | Invest Online | DT-M to LD | May-1998 | 5.93 | 607 |
| Tata Income Fund - Regular Plan | Invest Online | DT-M to LD | Apr-1997 | 7.77 | 73 |
| LIC MF Bond Fund | Invest Online | DT-M to LD | Jun-1999 | 7.80 | 270 |
| HDFC Income Fund | Invest Online | DT-M to LD | Sep-2000 | 7.84 | 608 |
| HSBC Debt Fund | Invest Online | DT-M to LD | Dec-2002 | 7.85 | 43 |
| Kotak Bond Fund - Regular Plan | Invest Online | DT-M to LD | Nov-1999 | 8.26 | 1,882 |
| Canara Robeco Income Fund - Regular Plan | Invest Online | DT-M to LD | Sep-2002 | 8.67 | 108 |
| Aditya Birla Sun Life Income Fund | Invest Online | DT-M to LD | Oct-1995 | 8.77 | 981 |
| SBI Magnum Income Fund | Invest Online | DT-M to LD | Nov-1998 | 8.86 | 1,206 |


Click it and Unblock the Notifications