Mutual funds வழியாக வங்கிப் பங்குகளில் மட்டும் முதலீடு செய்ய முடியுமா..? எவ்வளவு வருமானம் வரும்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Mutual funds: தமிழகத்தின் கொங்கு மண்டல பகுதிகளில், "பங்குச் சந்தைன்னாலே நமக்கு எல்லாம் அலர்ஜிங்க. ஊர் பேர் தெரியாத கம்பெனில எல்லாம் நம்பி பணத்த போட முடியாது" என பேசிக் கேட்டிருக்கலாம். ஆனால் அதே நபர்கள், நம்பிக்கையான பெரிய பெரிய வங்கிகள், நிதி நிறுவனங்களில் மட்டும் குறிப்பிட்டு முதலீடு செய்வதையும் பார்க்க முடியும்.

 

அப்படி மியூச்சுவல் ஃபண்டில், வங்கிப் பங்குகளில் மட்டும் முதலீடு செய்ய முடியுமா..? எனக் கேட்டால் முடியும். அப்படி 11 வங்கி சார் மியூச்சுவல் ஃபண்டுகள், இப்போதே நம் பணத்தை வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கின்றன. இந்த ஃபண்டுகள் எல்லாம் 2003 - 04-ம் ஆண்டில் இருந்தே இந்தியாவில் செயல்படத் தொடங்கிவிட்டன.

 
 Mutual funds வழியாக வங்கிப் பங்குகளில் மட்டும் முதலீடு செய்ய முடியுமா..? எவ்வளவு வருமானம் வரும்..?

வங்கித் துறை சார் (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன..?

செபி அமைப்பின் வழி காட்டுதலின் படி, ஒரு வங்கித் துறை சார் மியூச்சுவல் ஃபண்ட் வழியாக திரட்டப்படும் பணம், இந்த வங்கித் துறை சார்ந்த ஈக்விட்டி முதலீடுகளில் மட்டும் 80 சதவிகிதத்துக்கு மேல் முதலீடு செய்து வைத்திருக்க வேண்டும். அப்படி தன் மொத்த நிதியில் (திரட்டிய நிதியில்) 80% வைத்திருந்தால் அது வங்கி துறை சார் மியூச்சுவல் ஃபண்டுகளாகும்.

இவர்கள் தன் 80 சதவிகித நிதியை வங்கி அல்லாத மற்ற ஈக்விட்டிகளில் கூட முதலீடு செய்ய முடியாது. செய்தால் அது செபி விதிமுறைகள் படி குற்றமாகும். எனவே நாம் நினைத்தது போல முழுக்க முழுக்க நல்ல வங்கிப் பங்குகளை தேர்வு செய்து நமக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கும் ரக (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் இது.

அதிகபட்சமாக ஆதித்யா பிர்லாவின் வங்கி துறை சார் ஃபண்டுகள் 5 ஆண்டில் 15.93% வருமானம் கொடுத்திருக்கிறது. அப்படி கடந்த 5 ஆண்டுகளில் வங்கி துறை சார் (Mutual funds) மியூச்சுவல் ஃபண்டுகள் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்திருக்கிறோம். நல்ல ஃபண்டைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன். உங்கள் வசதிக்காக (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்களின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த பேங்கிங் துறைசார் மியூச்சுவல் ஃபண்ட் விவரங்கள்
ஃபண்டுகளின் பெயர்தொடங்கிய தேதி5 வருட வருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Aditya Birla Sun Life Banking & Financial Services Fund - RPDec-201315.931,861
ICICI Prudential Banking and Financial Services FundAug-200815.653,353
Invesco India Financial Services FundJul-200814.62155
Reliance ETF Bank BeESMay-200413.767,058
Reliance Banking FundMay-200312.493,203
Sundaram Financial Services Opportunities Fund - Regular PlanJun-200811.78183
Baroda Banking and Financial Services FundJun-201211.1745
UTI Banking and Financial Services Fund - Regular PlanApr-200410.64668
Taurus Banking & Financial Services Fund - Regular PlanMay-201210.447
Reliance ETF PSU Bank BeESOct-2007-5.19161
Kotak PSU Bank ETFNov-2007-5.2499
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mutual funds: banking sector funds are giving 10 percent return in 5 years

Mutual funds: banking sector funds are giving 10 percent return in 5 years
Story first published: Friday, August 2, 2019, 18:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X