Mutual funds-ல் டிவிடெண்ட் யீல்ட் திமெட்டிக் ஃபண்டுகள் இருக்கிறதா..? ஆஹா இத்தனை நாள் தெரியலயே..!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Mutual funds: நன்றாக டிவிடெண்ட் கொடுக்கக் கூடிய பங்குகளில் மட்டும் முதலீடு செய்து வருமானம் ஈட்டிக் கொடுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகள், சர்வதேச பங்குகளில் மட்டும் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகள், எனர்ஜியில் மட்டும் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகள், பொதுத் துறை நிறுவன பங்குகளில் மட்டும் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகள் இருக்கிறதா..?

இருக்கிறதே. தீம் சார் மியூச்சுவல் ஃபண்டுகளில் மேலே சொன்ன அனைத்து தேவைகளுக்கும் தனித் தனியாக சில ஃபண்டுகள் இருக்கின்றன. ஏற்கனவே சொல்லி இருந்தது போல செபி அமைப்பின் வழி காட்டுதலின் படி, தீம் சார் மியூச்சுவல் ஃபண்ட் வழியாக திரட்டப்படும் பணம், அதன் தீம் சார்ந்த ஈக்விட்டி முதலீடுகளில் மட்டும் 80 சதவிகிதத்துக்கு மேல் முதலீடு செய்து வைத்திருக்க வேண்டும். அப்படி தன் மொத்த நிதியில் (திரட்டிய நிதியில்) 80% வைத்திருந்தால் அது தீம் சார்ந்த திமெட்டிக் மியூச்சுவல் ஃபண்டுகளாகும்.

Mutual funds-ல் டிவிடெண்ட் யீல்ட் திமெட்டிக் ஃபண்டுகள் இருக்கிறதா..? ஆஹா இத்தனை நாள் தெரியலயே..!

இவர்கள் தன் 80 சதவிகித நிதியை தங்கள் தீம் சாராத மற்ற ஈக்விட்டிகளில் முதலீடு செய்ய முடியாது. அதையும் மீறி செய்தால் அது செபி விதிமுறைகள் படி குற்றமாகும். எனவே நாம் நினைத்தது போல முழுக்க முழுக்க தங்களின் தீம் சார்ந்த நல்ல முதலீடுகளை தேர்வு செய்து நமக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கும் ரக (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் இந்த திமெட்டிக் மியூச்சுவல் ஃபண்டுகள்.

உதாரணமாக டிவிடெண்ட் அதிகம் கொடுக்கும் பங்குகளில் மட்டும் முதலீடு செய்யும் திமெட்டிக் ஃபண்டுகளில் அதிகபட்சமாக பிரின்சிபல் டிவிடெண்ட் யீல்ட் ஃபண்ட், கடந்த 5 ஆண்டில் 8.97 சதவிகிதம் வருமானம் கொடுத்திருக்கிறது.

அப்படி கடந்த 5 ஆண்டுகளில் மேலே சொன்ன தீம் சார் திமெட்டிக் (Mutual funds) மியூச்சுவல் ஃபண்டுகள் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்திருக்கிறோம். நல்ல ஃபண்டைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன். உங்கள் வசதிக்காக (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்களின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டில் தீம் சார் மியூச்சுவல் ஃபண்ட்கள் கொடுத்த வருமானம்
ஃபண்டுகளின் பெயர்ஃபண்ட் வகைதொடங்கிய தேதிவருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Principal Dividend Yield FundEQ-DIV YOct-20048.97188
Templeton India Equity Income FundEQ-DIV YMay-20067.42910
UTI Dividend Yield Fund - Regular PlanEQ-DIV YMay-20057.212,318
ICICI Prudential Dividend Yield Equity FundEQ-DIV YMay-20146.16170
Aditya Birla Sun Life Dividend Yield FundEQ-DIV YFeb-20033.96726
Aditya Birla Sun Life MNC FundEQ-MNCApr-199412.273,426
UTI MNC Fund - Regular PlanEQ-MNCJul-199810.621,994
SBI Magnum Global FundEQ-MNCSep-19949.353,354
DSP Natural Resources and New Energy Fund - Regular PlanEQ-EnergyApr-200810.37348
Invesco India PSU Equity FundEQ-PSUNov-20096.7359
SBI PSU FundEQ-PSUJul-20100.13159
CPSE Exchange Traded FundCPSE Exchange Traded FundEQ-PSUMar-2014-1.4817,063
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mutual funds: dividend yield thematic funds are giving around 6 percent return in 5 years

Mutual funds: dividend yield thematic funds are giving around 6 percent return in 5 years
Story first published: Thursday, August 15, 2019, 18:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X