Mutual funds வழியாக infrastructure பங்குகளில் மட்டும் முதலீடு செய்ய முடியுமா? அட இது நல்லா இருக்கே!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Mutual funds: என்னங்க, ஜூலை 05, 2019 அன்னக்கி நம்ம நிர்மலா சீதாராமன், இந்தியாவோட infrastructure துறையில நிறைய முதலீடு செய்யணும்னு சொல்லி இருக்காங்க. ஆக இனி நிச்சயமா infrastructure துறை சார்ந்த பங்குகளோட விலை கண்ணா பின்னான்னு அதிகரிக்கும். ஆக அதுல மட்டும் லட்டு மாதிரி முதலீடு பண்ணி லாபம் பாக்க வழி இருக்கா. ரிஸ்கும் கொஞ்சம் கம்மியா இருக்கணும் என கணக்கு போட்டுக் கொண்டிருப்பவர்கள் என்றால்... இது உங்களுக்கான ஃபண்டுகள் தான்.

 

அப்படி மியூச்சுவல் ஃபண்டில், infrastructure பங்குகளில் மட்டும் முதலீடு செய்ய முடியுமா..? எனக் கேட்டால் முடியும். அப்படி 20 infrastructure சார் மியூச்சுவல் ஃபண்டுகள், இப்போதே நம் பணத்தை வாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கின்றன. இந்த ஃபண்டுகள் எல்லாம் 2005-ம் ஆண்டில் இருந்தே இந்தியாவில் செயல்படத் தொடங்கிவிட்டன.

 
Mutual funds வழியாக infrastructure பங்குகளில் மட்டும் முதலீடு செய்ய முடியுமா? அட இது நல்லா இருக்கே!

infrastructure துறை சார் (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன..?

செபி அமைப்பின் வழி காட்டுதலின் படி, ஒரு infrastructure துறை சார் மியூச்சுவல் ஃபண்ட் வழியாக திரட்டப்படும் பணம், இந்த infrastructure துறை சார்ந்த ஈக்விட்டி முதலீடுகளில் மட்டும் 80 சதவிகிதத்துக்கு மேல் முதலீடு செய்து வைத்திருக்க வேண்டும். அப்படி தன் மொத்த நிதியில் (திரட்டிய நிதியில்) 80% வைத்திருந்தால் அது infrastructure துறை சார் மியூச்சுவல் ஃபண்டுகளாகும்.

உனக்கு BMW வேண்டாம்னா ஆத்துல தள்ளி விடுவியா..? அப்ப என்ன தான் வேணும்..? உனக்கு BMW வேண்டாம்னா ஆத்துல தள்ளி விடுவியா..? அப்ப என்ன தான் வேணும்..?

இவர்கள் தன் 80 சதவிகித நிதியை infrastructure அல்லாத மற்ற ஈக்விட்டிகளில் கூட முதலீடு செய்ய முடியாது. செய்தால் அது செபி விதிமுறைகள் படி குற்றமாகும். எனவே நாம் நினைத்தது போல முழுக்க முழுக்க நல்ல infrastructure பங்குகளை தேர்வு செய்து நமக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கும் ரக (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் இது.

இந்த ரக infrastructure ஃபண்டுகளில் அதிகபட்சமாக ஃப்ராங்க்ளின் பில்ட் இந்த்ஹியா ஃபண்ட் infrastructure துறை சார் ஃபண்ட், கடந்த 5 ஆண்டில் 13.19% வருமானம் கொடுத்திருக்கிறது. அப்படி கடந்த 5 ஆண்டுகளில் infrastructure துறை சார் (Mutual funds) மியூச்சுவல் ஃபண்டுகள் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்திருக்கிறோம். நல்ல ஃபண்டைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன். உங்கள் வசதிக்காக (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்களின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் துறைசார் மியூச்சுவல் ஃபண்ட் விவரங்கள்
ஃபண்டுகளின் பெயர்தொடங்கிய தேதி5 வருட வருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Franklin Build India FundSep-200913.191,195
L&T Infrastructure FundSep-20079.831,695
Kotak Infrastructure and Economic Reform FundFeb-20089.13392
SBI Infrastructure FundJul-20078.64522
Tata Infrastructure Fund - Regular PlanDec-20048.64518
DSP T.I.G.E.R. Fund - Regular PlanJun-20048.621,061
Invesco India Infrastructure FundNov-20077.6539
Sundaram Infrastructure Advantage Fund - Regular PlanSep-20057.64613
Taurus Infrastructure FundMar-20077.574
IDFC Infrastructure FundMar-20116.81833
UTI Infrastructure Fund - Regular PlanApr-20046.581,249
BOI AXA Manufacturing & Infrastructure FundMar-20106.0548
Reliance Power & Infra FundMay-20045.661,314
Aditya Birla Sun Life Infrastructure FundMar-20065.56524
ICICI Prudential Infrastructure FundAug-20055.441,157
LIC MF Infrastructure FundMar-20085.0152
Quant Infrastructure FundAug-20074.982
HDFC Infrastructure FundMar-20081.09736
Reliance ETF Infra BeESSep-20100.5313
HSBC Infrastructure Equity FundFeb-20060.0790
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mutual funds: infrastructure sector funds are giving at least 6 percent return in 5 years

Mutual funds: infrastructure sector funds are giving at least 6 percent return in 5 years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X