Mutual funds வழியாக தீம் சார் பங்குகளில் முதலீடு செய்ய முடியுமா..? எவ்வளவு வருமானம் வரும்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Mutual funds: மியூச்சுவல் ஃபண்டில் வங்கி மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தவிர வேறு ஏதாவது ரக ஃபண்டுகள் இருக்கிறதா..? எனக் கேட்டால் இருக்கிறது. பார்மாசியூட்டிக்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார் ஈக்விட்டி முதலீடுகளில் மட்டும் முதலீடு செய்யக் கூடிய செக்டோரியல் ஃபண்டுகள் இருக்கின்றன. அதோடு மொட்டையாக ஒரு தீமின் அடிப்படையில் இயங்கக் கூடிய திமெட்டிக் ஃபண்டுகளும் இருக்கின்றன.

செக்டோரியல் ஃபண்டுகள் நமக்குத் தெரியும், அது என்ன திமெட்டிக் ஃபண்டுகள். திமெட்டிக் (Thematic Mutual Funds) மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன..?

Mutual funds வழியாக தீம் சார் பங்குகளில் முதலீடு செய்ய முடியுமா..? எவ்வளவு வருமானம் வரும்..?

செபி அமைப்பின் வழி காட்டுதலின் படி, தீம் சார் மியூச்சுவல் ஃபண்ட் வழியாக திரட்டப்படும் பணம், அதன் தீம் சார்ந்த ஈக்விட்டி முதலீடுகளில் மட்டும் 80 சதவிகிதத்துக்கு மேல் முதலீடு செய்து வைத்திருக்க வேண்டும். அப்படி தன் மொத்த நிதியில் (திரட்டிய நிதியில்) 80% வைத்திருந்தால் அது தீம் சார்ந்த திமெட்டிக் மியூச்சுவல் ஃபண்டுகளாகும்.

இவர்கள் தன் 80 சதவிகித நிதியை தங்கள் தீம் சாராத மற்ற ஈக்விட்டிகளில் முதலீடு செய்ய முடியாது. அதையும் மீறி செய்தால் அது செபி விதிமுறைகள் படி குற்றமாகும். எனவே நாம் நினைத்தது போல முழுக்க முழுக்க தங்களின் தீம் சார்ந்த நல்ல முதலீடுகளை தேர்வு செய்து நமக்கு வருமானம் ஈட்டிக் கொடுக்கும் ரக (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட் இந்த திமெட்டிக் மியூச்சுவல் ஃபண்டுகள்.

இந்த ரக திமெட்டிக் ஃபண்டுகளில் அதிகபட்சமாக ஐசிஐசிஐ ப்ருடென்ஷியல் எஃப் எம் சி ஜி ஃபண்ட், கடந்த 5 ஆண்டில் 12.63 சதவிகிதம் வருமானம் கொடுத்திருக்கிறது. அப்படி கடந்த 5 ஆண்டுகளில் திமெட்டிக் (Mutual funds) மியூச்சுவல் ஃபண்டுகள் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்திருக்கிறோம். நல்ல ஃபண்டைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன். உங்கள் வசதிக்காக (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்களின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் துறைசார் மியூச்சுவல் ஃபண்ட்கள் கொடுத்த விவரங்கள்
ஃபண்டுகளின் பெயர்ஃபண்ட் வகைதொடங்கிய தேதி5 வருட வருமானம் (%)நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr)
Reliance Pharma FundEQ-PharmaJun-20046.812,344
SBI Healthcare Opportunities FundEQ-PharmaJul-19992.77894
UTI Healthcare Fund - Regular PlanEQ-PharmaJun-19992.23382
Aditya Birla Sun Life Digital India FundEQ-ITJan-200011.77454
SBI Technology Opportunities FundEQ-ITJul-199911.09149
ICICI Prudential Technology FundEQ-ITMar-200011.02441
Franklin India Technology FundEQ-ITAug-19989.41241
ICICI Prudential FMCG FundEQ-THEMATICMar-199912.63486
SBI Magnum Equity ESG FundEQ-THEMATICJan-199110.582,409
ICICI Prudential Exports and Services FundEQ-THEMATICNov-20059.59720
Franklin India Opportunities FundEQ-THEMATICFeb-20009.50565
Taurus Ethical Fund - Regular PlanEQ-THEMATICApr-20097.8639
Tata Ethical Fund - Regular PlanEQ-THEMATICMay-19967.60525
Reliance ETF Dividend OpportunitiesEQ-THEMATICApr-20147.532
Aditya Birla Sun Life International Equity Fund - Plan BEQ-THEMATICOct-20077.2278
SBI Magnum COMMA FundEQ-THEMATICAug-20056.60261
Reliance Quant Fund - Retail PlanEQ-THEMATICFeb-20056.0524
UTI Transportation and Logistics Fund - Regular PlanEQ-THEMATICApr-20045.441,186
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mutual funds: thematic funds are giving 7 percent return in 5 years

Mutual funds: thematic funds are giving 7 percent return in 5 years
Story first published: Monday, August 12, 2019, 17:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X