என்னங்க பெரிய Mutual funds. உங்கள் Mutual funds வழியாக எப்போது பார்த்தாலும் இந்தியா மற்றும் இந்தியா சார் முதலீடுகள் தான் பேசப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் தான் மிகக் கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறதே. இந்த கால கட்டத்தில் எப்படி இந்திய பொருளாதாரத்தை நம்பி நிம்மதியாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது..? எனக் கேட்கிறீர்களா..?
உங்களுக்கு இந்திய ஈக்விட்டிகளில் முதலீடு செய்ய விருப்பம் இல்லையா...? ஓகே பரவாயில்லை விடுங்கள். வெளிநாடுகளில் முதலீடு செய்கிறீர்களா..? அதுவும் நீங்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே..?

என்னங்க சொல்றீங்க. என் சொந்த ஊர் ஆண்டிப்பட்டி, அங்க இருந்துக்கிட்டு, அமெரிக்கா மாதிரி பெரிய நாடுகளோடு ஈக்விட்டி முதலீடுகள்ள முதலீடு பண்ண முடியுமா..?
விடை முடியும். அதற்குத் தான் ஈக்விட்டி சர்வதேச ஃபண்டுகள் இருக்கின்றன. இந்த ஈக்விட்டி சர்வதேச (International) ஃபண்டுகள் என்றால் என்ன..?
முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டும் பணத்தில் சுமாராக 90 சதவிகிதத்துக்கு மேல் வெளிநாட்டு ஈக்விட்டி சார் முதலீடுகளில் முதலீடு செய்தால், அது தான் இண்டர்நேஷனல் ஃபண்ட்கள்.
உதாரணமாக: மோதிலால் ஓஸ்வால் நாஸ்டாக் 100 எக்ஸ்சேஞ்ச் டிரேடெட் ஃபண்ட் வழியாக திரட்டிய 197 கோடி ரூபாய் ஃபண்டில் 99.9 சதவிகித பணம், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், அமேஸான், ஃபேஸ்புக், சிஸ்கோ, பெப்ஸி போன்ற தரமான உலக நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 0.01 சதவிகிதம் தான் ரொக்கம் சார் முதலீடுகளில் வைத்திருக்கிறார்கள். இந்த ஃபண்ட் கடந்த ஐந்து ஆண்டுகளில் 16.6 சதவிகிதம் வருமானம் ஈட்டி இருக்கிறது. ஆக இது போன்ற ஈக்விட்டி இண்டர்நேஷனல் ஃபண்டில் முதலீடு செய்தால், நீங்கள் ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டே, அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்ததாகத் தானே பொருள்.
அப்படி கடந்த 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் கொடுத்த மற்றும் மோசமான வருமானம் கொடுத்த இண்டர்நேஷனல் (Mutual funds) மியூச்சுவல் ஃபண்டுகள் விவரங்களைக் கீழே அட்டவணையில் கொடுத்திருக்கிறோம். நல்ல ஃபண்டைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன். உங்கள் வசதிக்காக (Mutual funds) மியூச்சுவல் ஃபண்ட்களின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறோம்.
கடந்த 5 ஆண்டில் நல்ல வருமானம் கொடுத்த ஈக்விட்டி இண்டர்நேஷனல் மியூச்சுவல் ஃபண்ட்கள் | ||||
---|---|---|---|---|
ஃபண்டுகளின் பெயர் | ஃபண்ட் வகை | தொடங்கிய தேதி | வருமானம் (%) | நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr) |
Motilal Oswal NASDAQ 100 Exchange Traded Fund | EQ-INTL | Mar-2011 | 16.61 | 197 |
Franklin India Feeder Franklin US Opportunities Fund | EQ-INTL | Feb-2012 | 12.95 | 915 |
ICICI Prudential US Bluechip Equity Fund | Invest Now | EQ-INTL | Jul-2012 | 10.34 | 299 |
DSP US Flexible Equity Fund | Start SIP Now | EQ-INTL | Aug-2012 | 9.88 | 233 |
Kotak US Equity Standard Fund | Invest Online | EQ-INTL | Dec-2013 | 9.38 | 11 |
Edelweiss Greater China Equity Off-shore Fund - Regular Plan | EQ-INTL | Aug-2009 | 7.57 | 93 |
ICICI Prudential Global Stable Equity Fund | Invest Now | EQ-INTL | Sep-2013 | 7.20 | 84 |
Edelweiss US Value Equity Off-shore Fund - Regular Plan | EQ-INTL | Aug-2013 | 7.13 | 41 |
Aditya Birla Sun Life International Equity Fund - Plan A | EQ-INTL | Oct-2007 | 6.39 | 68 |
Reliance ETF Hang Seng BeES | Invest Online | EQ-INTL | Mar-2010 | 6.16 | 7 |
கடந்த 5 ஆண்டில் மோசமான வருமானம் கொடுத்த ஈக்விட்டி இண்டர்நேஷனல் மியூச்சுவல் ஃபண்ட்கள் | ||||
ஃபண்டுகளின் பெயர் | ஃபண்ட் வகை | தொடங்கிய தேதி | வருமானம் (%) | நிர்வகிக்கும் மொத்த சொத்து (Cr) |
DSP World Energy Fund - Regular Plan | Start SIP Now | EQ-INTL | Aug-2009 | -4.34 | 18 |
DSP World Mining Fund - Regular Plan | Start SIP Now | EQ-INTL | Dec-2009 | -3.05 | 33 |
Aditya Birla Sun Life Global Emerging Opportunities Fund | EQ-INTL | Sep-2008 | -2.83 | 17 |
Franklin India Feeder - Franklin European Growth Fund | EQ-INTL | May-2014 | -2.00 | 19 |
Kotak World Gold Fund - Standard PlanKotak World Gold Fund | EQ-INTL | Jun-2008 | -1.83 | 39 |
HSBC Brazil Fund | Invest Online | EQ-INTL | May-2011 | -1.47 | 30 |
Invesco India Feeder- Invesco Pan European Equity Fund | EQ-INTL | Jan-2014 | -0.46 | 25 |
Sundaram Global Advantage Fund | EQ-INTL | Aug-2007 | 0.15 | 21 |
Kotak Global Emerging Market Regular Plan | Invest Online | EQ-INTL | Sep-2007 | 0.51 | 32 |
Edelweiss Europe Dynamic Equity Offshore Fund | EQ-INTL | Feb-2014 | 1.16 | 31 |