மும்பை : அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனமான கோரா மேனேஜ்மென்ட் நிறுவனம், இந்தியாவில் எடில்வைஸ் நிறுவனத்தில் (Edelweiss group) 125 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்போவதாக கூறியுள்ளது.
இந்த நிலையில் இதில் 75 மில்லியன் டாலரை Edelweiss Global Investment Advisors (EGIA) நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளதாகவும், இது தொடர்பான ஒப்புதல்களுக்கும் எடில்வைஸ் நிறுவனம், ஒப்புதல் அளித்துள்ளதாகவும், கடந்த புதன் கிழமையன்று அளித்துள்ள அறிக்கையில் இந்த நிறுவனம் கூறியுள்ளது.

இது தவிர இன்னும் 50 மில்லியன் டாலரை கோரா மேனேஜ்மென்ட் முதலீடு செய்ய உள்ளதாகவும், இது குறித்தான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருவதாகவும், இதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது.
வளர்ந்து வரும் சந்தைகளில் முக்கிய நிதி மற்றும் தொழில்நுட்ப வணிகங்களில் கவனம் செலுத்தி வரும், முதலீட்டாளரான கோரா மேனேஜ்மென்ட் ஏற்கனவே எடெல்வைஸ் நிறுவனத்தில் முதலீட்டாளராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எடில்வைஸ் உடனான எங்களது நீண்ட கால உறவை ஆழப்படுத்த நாங்கள் எதிர் நோக்குகிறோம் என்றும் கோராவின் நிறுவனர் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரியான நிதின் சைகல் கூறியுள்ளார்.
மேலும் இந்த குழுமம் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக தனது சேவையை உருவாக்கியுள்ளது. மேலும் சொத்து மேலாண்மை மற்றும் கடன் கொண்டுள்ளது. மேலும் இந்தியாவின் நிதி சேவைகளில் இரண்டு முக்கியமான சேவைகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளில், உற்சாகமான பல மடங்கு வளர்ச்சி பெறும் அளவுக்கு, இந்த நிறுவனம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நாங்கள் எங்கள் போர்ட்ஃபோலியோ நிறுவனங்களுக்கு ஆக்கபூர்வமான கூட்டாளர்களாக நாங்கள் பணியாற்றுகிறோம். மேலும் எடில்வைஸ் உடன் கூட்டாளராக இருப்பதற்கான வாய்ப்பை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் சைகல் கூறியுள்ளார்.
EGIAல் சொத்து புனரமைப்பு, சொத்து மற்றும் சொத்து மேலாண்மை, இதோடு நிறுவன வாடிக்கையாளர் குழு வணிகங்கள் (institutional client group businesses), இது எடில்வைஸ்சின் இலாபங்களில் பாதிக்கும் மேல் பங்களிக்கிறது. மேலும் 2 டிரில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்ட இந்த நிறுவனம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

பட்டென சரிந்த தங்கம் விலை.. சட்டென நகை கடைக்கு கிளம்புங்க.. ஆனா ஒரு விஷயம்..!!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

பொட்டி பொட்டியா மாம்பழம் வீடு தேடி வரணுமா? ஒரு கிளிக் செஞ்சாலே போதும் மாந்தோப்பே சொந்தமாகும்!!

PPF வித்டிராயல் ரூல்ஸ்: 7 வருடம் முடிந்தால் போதும்.. பாதியை எடுக்கலாமா? முழு விவரம் இதோ!

மாதம் ரூ.20,000 வருமானம் + ரூ.1.5 லட்சம் வரி விலக்கு! அரசு திட்டத்தில் இதெல்லாம் சாத்தியமா?

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!



Click it and Unblock the Notifications