பொதுவாக முதலீடுகள் என்றாலே நம்மவர்கள் பிக்சட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்டு, தங்கம் போன்றவற்றில் தான் அதிகளவில் முதலீடு செய்வார்கள். ஆனால் பங்கு சந்தை என்றாலே, இன்றளவிலும் பாய்ந்தோடும் பலர் இருக்கிறார்கள்.
ஆனால் இதிலும் பல நல்ல லாபம் தரக்கூடிய பங்குகள் இருப்பது கவனிக்கதக்கது. குறிப்பாக பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த 10 ஆண்டுகளில் 14,500 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது 10 வருடங்களுக்கு முன்பு நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று 1.49 கோடி ரூபாய் உங்களுக்கு சொந்தம்.
குறிப்பாக கடந்த செப்டம்பர் 3, 2009ம் ஆண்டு இந்த பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவன பங்கின் விலையானது 21.8 ரூபாயாக இருந்த, இந்த பங்கின் விலை செப்டம்பர் 3, 2019ல் 3,260 ரூபாயாக வர்த்தகமாகியது. இதே செப்டம்பர் 3, 2009ல் இருந்த சந்தை மூலதனம் 821.58 கோடி ரூபாயாக இருந்தது, செப்டம்பர் 3, 2019ல் 1,89,605 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
போட்டி நிறுவனங்களின் வளர்ச்சி
இதன் போட்டி நிறுவனங்களான எம் & எம் ஃபைனான்ஷியல் 649.21 சதவிகித ஏற்றத்துடனும், சோலமண்டலம் ஃபைனான்ஷியர்ஸ் 669.65 சதவிகித ஏற்றத்துடனும், இதுவே ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் 157.09 சதவிகித ஏற்றத்துடனும், மணப்புரம் ஃபைனான்ஸ் 508.3 சதவிகித ஏற்றத்துடனும் காணப்பட்டது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், இந்த நிறுவனங்களின் பங்கு விலைகள், மூன்று இலக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன.
வாடிக்கையாளர் வளர்ச்சி
இந்த பங்கின் விலை கடந்த ஆண்டில் 17.45 சதவிகித ஏற்றத்தையும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 22.33 சதவிகித ஏற்றத்துடனும் காணப்படுகிறது. மேலும் ஆண்டு அடிப்படையில், இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் வளர்ச்சி, 2019வுடன் முடிந்த நிதியாண்டில் 32 சதவிகிதமாகவும், இதுவே 2018வுடன் முடிவடைந்த நிதியாண்டில் 28 சதவிகிதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடன் வளர்ச்சி
இதே கடந்த 2019ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட புதிய கடன்களின் எண்ணிக்கையானது 50 சதவிகித அளவில் வளர்ந்து வருகிறது என்றும், இதில் மிக சுவாரஸ்மான விஷயம் என்னவெனில் கடந்த 2016ல் சராசரி கடனின் அளவு 56,000 என்ற நிலையில் இருந்து, 2019வுடன் முடிவடைந்த நிதியாண்டில் 81,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது மற்ற கடன் வழங்குனர்களை விட அதிகமாகும்.
இவ்வளவு நிகரலாபம்
கடந்த மார்ச் 2010ல் இதன் நிகரலாபம் 89.41 கோடி ரூபாய் என்ற நிலையில், மார்ச் 2019ல் 3,890.34 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது. இதே கடந்த மார்ச் 2019வது காலாண்டில், இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 1,114 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 743 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எப்படியோ இந்த நிறுவனம் தொடர்ந்து இதில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபத்தையே அளித்துள்ளது கவனிக்கதக்கது.
More From GoodReturns

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

உங்க பணத்தை இரட்டிப்பாக்கும் போஸ்ட் ஆபிஸ் முதலீட்டு திட்டம்!! ரூ.1000 கூட முதலீடு செய்யலாம்!!

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications