பொதுவாக வயதானவர்கள், மூத்த குடிமக்கள், சம்பாத்தியத்தை அதிகம் நம்பாமல் தன் ஃபிக்ஸ்ட் டெபாசிட் (FD - Fixed Deposit) பணத்தில் இருந்து வரும் வட்டியை நம்பி இருப்பவர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானம் தான் தெய்வம். இன்னும் நம் கிராம புறங்களில் ஃபிக்ஸட் டெபாசிட்டை மட்டுமே நம்பி இருப்பவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். ஒரு காலத்தில் இந்தியாவில் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் எல்லாம் 9 - 10 சதவிகிதம் வரை இருந்தது.
ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். இந்தியப் பொருளாதாரத்தின் பணவீக்கம் மிக மிகக் குறைவாக இருக்கிறது. அதோடு மத்திய ரிசர்வ் வங்கியும், இந்தியப் பொருளாதாரத்தில் வியாபாரம் தலைத் தோங்க, புதிதாக வியாபாரிகள் வந்து கடன் வாங்க, நுகர்வை அதிகரிக்க தொடர்ந்து குறைந்த வட்டியில் கடன் கொடுக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்திருக்கிறது. எனவே ஆர்பிஐ, தன் ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆர்பிஐ, இதுவரை தொடர்ந்து நான்கு முறை தன் ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்து இருக்கிறது. தற்போது ஆர்பிஐயின் ரெப்போ ரேட் வட்டி விகிதம் வெறும் 5.15 சதவிகிதம் தான். அதோடு எல்லா வங்கிகளையும் கடன் கொடுக்க வேண்டிய வட்டி விகிதங்களையும் குறைக்கச் சொல்கிறது. எனவே வங்கிகள் வாங்கும் ஃபிக்ஸட் டெபாசிட் தொகைகளுக்கு அதிக வட்டித் தொகையைக் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இவ்வளவு சிரமமான சூழலிலும் மூத்த குடிமக்களுக்கு இன்னும் சில வங்கிகள் 8.5 சதவிகிதம் வரை ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு வட்டியாக கொடுக்கிறார்கள். அவர்கள் யார்..? எந்த மாதிரியான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு இவ்வளவு வட்டி கொடுக்கிறார்கள்..? வாருங்கள் பார்ப்போம்.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க். இந்த வங்கியின் வட்டி விகிதம் 4.5 முதல் 8.5 சதவிகிதம் வரைக் கொடுக்கிறார்கள். இந்த வங்கியின் ஒரு ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் இரண்டு ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு ஆண்டுக்கு 8.5 சதவிகிதம் வட்டி கொடுக்கிறார்கள்.
அதே போல டிசிபி வங்கியில் 3 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு ஆண்டுக்கு 8.5 சதவிகிதம் வட்டி கொடுக்கிறார்கள்.
AU Small Finance Bank என்கிற வங்கி 15 மாதம் ஒரு நாள் முதல் 18 மாத காலம் வரையான டெபாசிட் திட்டத்துக்கு ஆண்டுக்கு 8.6 சதவிகிதம் வட்டி கொடுக்கிறார்கள். இரண்டு ஆண்டு முதல் மூன்று ஆண்டு கால டெபாசிட் திட்டத்துக்கு ஆண்டுக்கு 8.5 சதவிகிதம் வட்டி கொடுக்கிறார்கள். எனவே மேற்கொண்டு விசாரித்து இந்த வங்கிகளில் உங்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டைப் பொடுங்கள் மக்களே. நல்ல வட்டி கிடைக்க வாழ்த்துக்கள்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications