9% வட்டி கொடுக்கும் FD திட்டங்கள்..!

கடந்த 10 மாதங்களாக மத்திய ரிசர்வ் வங்கி தன் ரெப்போ ரேட் வட்டி விகிதங்களை குறைத்துக் கொண்டிருக்கிறது. ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து, வாங்கும் கடன் தொகைக்குச் செலுத்தும் வட்டி விகிதம் ஆகும். அதாவது சாதாரணமாக இந்தியாவில் செயல்படும் வங்கிகள் ஆர்பிஐ வங்கியிடம் இருந்து கடன் வாங்குவார்கள். இந்த பணத்தை வைத்தும் வணிக வங்கிகள் தங்கள் வியாபாரத்தைப் பார்க்கும். இந்த ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகள், ஆர்பிஐக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதம் குறையும்.

இந்த ரெப்போ வட்டி விகித குறைவால் வங்கிகள், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து இருக்கும் கடன் தொகைக்கு நிர்ணயித்து இருக்கும் வட்டி விகிதங்கள் குறையும். எனவே வங்கிகளில் கடன் வாங்கி இருப்பவர்களுக்கு வேண்டுமானால், வட்டி குறைந்து நன்மை கொடுப்பதாக இருக்கும். ஆனால் அதே வங்கிகளில் தங்கள் பணத்தை டெபாசிட் செய்து வைத்து இருப்பவர்களுக்கு இது அவ்வளவு நல்ல செய்தியாக இருக்காது. காரணம் இதே வட்டி விகிதம் தான்.

9% வட்டி கொடுக்கும் FD திட்டங்கள்..!

இந்த 2019-ம் ஆண்டில் மட்டும் ஆர்பிஐ இதுவரை ஐந்து முறை ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்து இருக்கிறார்கள். எனவே தற்போது எஸ்பிஐ வங்கியில் ஒரு வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.4 சதவிகிதம் தான் வட்டி நிர்ணயித்து இருக்கிறார்களாம். மூத்த குடிமக்களுக்கு அதே ஒரு வருட ஃபிக்ஸ்ட் டெபாசிட்டுக்கு 7 சதவிகிதம் தான் கொடுக்கிறார்கள். எஸ்பிஐ வங்கியிலேயே இந்த 6.9 சதவிகிதம் வட்டி தான் எல்லா டெபாசிட் திட்டங்களை ஒப்பிடும் போதும் அதிக வட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபர் 10, 2019 அன்று தான் கடைசியாக எஸ்பிஐ தன் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்து இருப்பதாக எஸ்பிஐ வங்கியின் https://www.sbi.co.in/portal/web/interest-rates/domestic-term-deposits வலைதளம் சொல்கிறது. ஆக இந்த வலைதள தரவுகளின் படி, ஒன்று முதல் இரண்டு வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி 6.5 சதவிகிதத்தில் இருந்து 6.4 சதவிகிதமாக குறைத்து இருக்கிறார்கள். 2 முதல் 10 வருடங்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.25 சதவிகிதமாக தொடர்கிறது.

இப்போது சில ஸ்மால் பேங்க் என்று அழைக்கப்படும் சிறிய வங்கிகளிடம் போடும் டெபாசிட்டுக்கு 9% வட்டி கொடுக்கிறார்கள். அந்த விவரங்களை கீழே பார்க்கலாம்.

Jana Small Finance Bank
3 years to 1095 days - 9.00%

Fincare Small Finance Bank
18 months 1 day to 21 months-9%
21 months 1 day to 24 months-9.25%
24 months 1 day to 36 months-9.50%

Utkarsh Small Finance Bank
456 days to less than 2 years- 9.50%
1 year to 455 days-9.00%

Suryoday Small Finance Bank
Above 1 year 6 months to 2 years: 9.00%
Above 2 years-3 years: 9.25%

இந்த விவரங்களை சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டு டெபாசிட் போடவும். அவசரப்பட்டு டெபாசிட் செய்துவிட்டு பின் குறைந்த வட்டி வந்ததாக வருத்தப்பட வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+