இன்று நடந்த பணக் கொள்கைக் கூட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி தன் ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. அதாவது 0.25 சதவிகிதம் வட்டி விகிதத்தைக் குறைத்து இருக்கிறது ஆர்பிஐ.
வட்டி விகித குறைப்புக்கு முன் ஆர்பிஐ-ன் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் 5.4 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது ரெப்போ ரேட் வட்டி விகிதம் குறைத்திருப்பதால் இனி ஆர்பிஐ-ன் ரெப்போ ரேட் வட்டி விகிதம் 5.15 சதவிகிதமாக இருக்கும்.
இதற்கும் வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு கிடைக்கும் வட்டிக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்கிறீர்களா..? வாருங்கள் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
ரெப்போ ரேட்
ரெப்போ வட்டி விகிதம் என்பது வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து, வாங்கும் கடன் தொகைக்குச் செலுத்தும் போது வட்டி விகிதம் ஆகும். அதாவது சாதாரணமாக இந்தியாவில் செயல்படும் வங்கிகள் ஆர்பிஐ வங்கியிடம் இருந்து கடன் வாங்குவார்கள். இந்த பணத்தை வைத்தும் வணிக வங்கிகள் தங்கள் வியாபாரத்தைப் பார்க்கும். இந்த ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகள், ஆர்பிஐக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதம் குறையும்.
நல்ல செய்தி
இதனால் வங்கிகள், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து இருக்கும் கடன் தொகைக்கு நிர்ணயித்து இருக்கும் வட்டி விகிதங்கள் குறையும். எனவே வங்கிகளில் கடன் வாங்கி இருப்பவர்களுக்கு வேண்டுமானால், வட்டி குறைந்து நன்மை கொடுப்பதாக இருக்கும். ஆனால் அதே வங்கிகளில் தங்கள் பணத்தை டெபாசிட் செய்து வைத்து இருப்பவர்களுக்கு இது அவ்வளவு நல்ல செய்தியாக இருக்காது. காரணம் இதே வட்டி விகிதம் தான்.
வட்டி குறைப்பு
இந்த 2019-ம் ஆண்டில் மட்டும் ஆர்பிஐ இதுவரை ஐந்து முறை (இன்று குறைத்ததையும் சேர்த்து) ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்து இருக்கிறார்கள். கடந்த ஆகஸ்ட் 2019-ல் இருந்து இப்போது வரை சுமார் 3 முறை வட்டி விகிதத்தைக் குறைத்து இருக்கிறார்களாம். எனவே தற்போது எஸ்பிஐ வங்கியில் ஒரு வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.5 சதவிகிதம் தான் வட்டி நிர்ணயித்து இருக்கிறார்களாம்.
எவ்வளவு குறைவு
கடந்த செப்டம்பர் 10, 2019 அன்று தான் கடைசியாக எஸ்பிஐ தன் ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்து இருப்பதாக எஸ்பிஐ வங்கியின் https://www.sbi.co.in/portal/web/interest-rates/domestic-term-deposits வலைதளம் சொல்கிறது. ஆக இந்த வலைதள தரவுகளின் படி, ஒன்று முதல் இரண்டு வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி 6.7 சதவிகிதத்தில் இருந்து 6.5 சதவிகிதமாக குறைத்து இருக்கிறார்கள். 2 முதல் 3 வருடங்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு 6.5 சதவிகிதத்தில் இருந்து 6.25 சதவிகிதமாக குறைத்து இருக்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டி இருக்கிறது.
சிறு சேமிப்பு திட்டங்களான
அஞ்சலக டெபாசிட் திட்டங்கள் 1 - 3 ஆண்டுகள் 6.9% வட்டி,
5 வருட டெபாசிட் திட்டங்கள் 7.7% வட்டி,
5 வருட அஞ்சலக ஆர்டி 7.2% வட்டி,
5 வருட மாதாந்திர வருமான திட்டம் 7.6% வட்டி,
கிஷான் விகாஸ் பத்திரம் (113 மாத முதிர்ச்சி) 7.6% வட்டி எனக் கொடுக்கிறார்கள். ஆக இனி வங்கிகளில் டெபாசிட் செய்வதற்கு பதிலாக நாம் இது போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வருமானத்தை பெருக்கிக் கொள்ளலாம்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications