இன்றைய காலகட்டத்தில் சேமிக்க ஆயிரம் வழிகள் உண்டு. ஆனாலும் காலம் காலமாக சேமிப்பு திட்டங்களில் முதன்மை வகிப்பது வங்கி பிக்ஸட் டெபாசிட் திட்டமே.
ஏனெனில் இது பங்கு சந்தை ஏற்ற இறக்கம், பொருளாதார சரிவு இப்படி முக்கிய காரணங்களால் பாதிக்கப்படுவதில்லை. அதோடு வட்டி விகிதம் குறைந்தாலும், முதலீட்டுக்கு எந்த பங்கமும் வருவதில்லை.
இதனாலேயே பெரும்பாலும் பலராலும் விரும்பப்படும் முதலீட்டு திட்டங்களில், இது முதலாவதாக இருப்பது பெரிய விஷயம் அல்ல. அதோடு மூத்த குடிமக்களுக்கு அதிகவட்டி விகிதம் கொடுப்பதால் இது, மூத்த குடிமக்களுக்கு சரியானதொரு சேமிப்பு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
வங்கி வட்டி விகிதம்
இப்படி வழங்கப்படும் வட்டி விகிதங்களில் எந்த வங்கி வட்டியினை அதிகம் கொடுக்கிறது. எந்த வங்கியில் டெபாட்சிட் செய்தால், உங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்பதை பலரும் ஆராய்வதே கிடையாது. ஆக இன்று நாம் பார்க்கவிருப்பது மூத்த குடி மக்களுக்கு அதிக வட்டி கொடுக்கும்., சில ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளைத் தான்.
பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் வட்டி?
பொதுவாக வங்கியானலும் சரி, ஸ்மால் பைனான்களானாலும் மூத்த குடி மக்களுக்கு வட்டி விகிதம் சற்று அதிகம். பின்கேர் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 7 - 7 வருடங்களுக்கான டெர்ம் டெபாசிட்டுகளுக்கு, வட்டி விகிதம் 4 - 8 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. இதே 12 - 18 மாதங்களுக்கு 7.5% வட்டியும், 18 மாதம் 1 நாள் முதல் 24 மாதங்களுக்கு வட்டி விகிதம் 7.6% வட்டியும், இதே 36 மாதம் 1 நாள் முதல் 42 மாதங்களுக்கு வட்டி விகிதம் 8%மும் வழங்கப்படுகிறது.
நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் வட்டி விகிதம்
7 நாள் முதல் 90 நாட்களுக்கு நார்த் ஈஸ்ட் ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 4.5% வட்டி வழங்கப்படுகிறது. இதுவே 91 நாள் -180 நாட்களுக்கும், 181 - 364 நாட்களுக்கு முறையே 5% மற்றும் 5.75% வட்டியினை வழங்குகின்றது. இதே 365 - 729 நாட்களுக்கு 7.50% வட்டி அளிக்கப்படுகிறது. 730 நாள் முதல் 1095 நாட்களுக்கு அதிகபட்சமாக 8% வட்டியும், 1096 நாட்கள் - 1825 நாட்கள் வரையில் 7% வட்டியும் வழங்கப்படுகிறது. இதே 1826 நாட்கள் முதல் - 3650 நாட்கள் வரையில் 6.25% வட்டி வழங்கப்படுகிறது.
ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் வட்டி விகிதம்
ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் 4 சதவீதம் முதல் 8 சதவீதம் வரையில், 7 நாட்கள் முதல் 10 வருடங்களுக்கு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மால் பைனான்ஸ் வங்கியில் அதிகபட்ச வட்டி விகிதமானது, 2 - 3 வருடத்திற்கு 8% ஆக மூத்த குடி மக்களுக்கு வட்டியாக வழங்கப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications