நீங்க லோன் வாங்கிருக்கீங்களா? ஹோம் லோன் ட்ரான்ஸ்ஃபர் பற்றி தெரியுமா? 3 முக்கிய நன்மைகள்!

தங்களுக்கென சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்பதுதான் பலரின் கனவு. அதற்காக சிலர் சிறுக சிறுக சேமிக்கத் தொடங்கியிருப்பார்கள். என்னதான் சேமித்தாலும் சிலருக்கு தங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து வீடு கட்டுவது சிரமமானதாக இருக்கலாம். அதற்காக ஹோம் லோன்களை சிலர் நாடுவர். ஹோம் லோன்களை வாங்கிய பின்னர் வேறு வங்கிகளில் குறைந்த வட்டி விகிதம் இருந்தால்.. அந்த வங்கிக்கு உங்களுடைய கடனை மாற்றலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கி 2025-ஆம் ஆண்டில் 2 முறை ரெப்போ விகிதத்தை குறைத்திருக்கிறது. முதலாவதாக பிப்ரவரி மாதம் 6.25 சதவீதமாகவும், அதன் பின்னர் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் 6 சதவீதமாகவும் குறைத்தது. இதனால் வீட்டுக் கடன் வாங்கி ஹோம் லோன் பிடியில் சிக்கி இருப்பவர்கள், வேறு ஏதேனும் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கிடைத்தால் அந்த வங்கிக்கு தங்கள் கடனை மாற்ற முடியும்.

நீங்க லோன் வாங்கிருக்கீங்களா? ஹோம் லோன் ட்ரான்ஸ்ஃபர் பற்றி தெரியுமா? 3 முக்கிய நன்மைகள்!

ரெப்போ விகிதம் என்றால் என்ன?: தேவைப்படும் நேரங்களில் நாம் எப்படி வங்கிகளில் சென்று கடன் பெறுகிறோமோ? அதேபோல வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறும். அதற்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதம் தான் ரெப்போ விகிதம் என்று சொல்லப்படுகிறது. வீட்டுக் கடன் வாங்கிய பெரும்பாலானோருக்கு ஹோம் லோன் ட்ரான்ஸ்ஃபர் ஆப்ஷன் இருப்பது குறித்து தெரியாது.

ஹோம் லோன் ட்ரான்ஸ்ஃபர் என்றால் என்ன?: ஒரு வங்கியிலோ, நிதி நிறுவனத்திலோ பெற்ற கடனை தங்களுக்கு ஏற்ற நியாயமான வட்டியுடன் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு மாற்றும் வசதி தான் ஹோம் லோன் ட்ரான்ஸ்ஃபர். கடன் பெற்று செலுத்திக் கொண்டிருக்கும்போதே மீதமுள்ள கடன் தொகையை இன்னொரு வங்கிக்கு மாற்றும் ஆப்ஷன். ஆனால் ஹோம் லோனை மாற்றுவதற்கு முன்னர் சில முக்கிய விஷயங்கள் குறித்து கவனிக்க வேண்டும்.

ஹோம் லோன் ட்ரான்ஸ்ஃபர் செய்யும் போது நமக்கு ஏதேனும் ஒரு வகையில் பலன் அளிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் லோனை மாற்றியும் பிரயோஜனம் இருக்காது. உதாரணமாக நீங்கள் கடன் பெற்ற வங்கியில் அதிக வட்டி விகிதம் இருந்து நீங்கள் மாற்றியிருக்கும் வங்கியில் அதைவிட குறைந்த வட்டி இருந்தால் தாராளமாக ஹோம் லோன் ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம். இதனால் உங்கள் ஈஎம்ஐ தொகை குறையும். இப்படி சில விஷயங்களைக் கவனித்து தான் ஹோம் லோன் ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும்.

குறைந்த வட்டி விகிதங்கள்: நீங்கள் ஹோம் லோனை மாற்ற விரும்பும் போது மேலே சொன்னது போல் குறைந்த வட்டி கொண்ட வங்கிக்கு தான் மாற்ற வேண்டும். உதாரணமாக 45 லட்சம் கடன் பெற்றிருக்கிறீர்கள், அதற்கு நீங்கள் வாங்கிய வங்கியில் 9.5% வட்டி வசூலிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் லோனை மாற்ற இருக்கும் வங்கியில் 8.5% வட்டி இருந்தால் ரூ. 4.6 லட்சத்திற்கும் அதிகமாக வட்டி சேமிக்கலாம். ஒரு சதவீத வட்டி வித்யாசம் கூட எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை இதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

கடன் விதிமுறைகள்: சில வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றார் போல ஈஎம்ஐ திருப்பி செலுத்தும் வசதி மற்றும் கால அவகாசத்தை மாற்றும் வசதி போன்றவற்றை வழங்குகின்றனர். இதனால் சிறந்த கடன் விதிமுறைகளுடன் கடன் பெற முடியும். இன்னும் சில வங்கிகளில் வீட்டின் மறுசீரமைப்பு, மருத்துவ தேர்வுகள், கல்வி செலவுகள் போன்றவற்றுக்கு டாப் அப் கடன்களையும் வழங்குகின்றன. இப்படி கடன் விதிமுறைகளில் உங்களுக்கு ஏற்றார் போல சலுகைகள் வழங்கப்பட்டால் லோனை மாற்றம் செய்யலாம்.

மறைமுக கட்டணங்கள்: ஆனால் ஹோம் லோன் ட்ரான்ஸ்ஃபர் செய்யும் போது அதற்கான மறைமுக கட்டணங்கள், செயலாக்க கட்டணங்கள் போன்றவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே நீங்கள் மாற்ற இருக்கும் வங்கியில் எவ்வளவு செயலாக்க கட்டணம்? என்னென்ன மறைமுக கட்டணங்கள் உள்ளது? என்பது குறித்தும் தெரிந்து கொள்ளுங்கள். இந்த செயலாக்கக் கட்டணங்கள் பொதுவாக கடன் தொகையில் 0.35% முதல் 1 சதவீதம் வரை இருக்கலாம். இதுவும் அந்தந்த நிதி நிறுவனத்தை பொறுத்தது.

முன்கூட்டியே பணம் செலுத்துவதற்கான விதிமுறைகள்: கடன் பெற்ற ஒருவருக்கு திடீரென கையில் பணம் கிடைத்தால் அதை கொண்டு வங்கியில் வாங்கிய கடனை அடைக்க முடியும். ஆனால் அதற்கு வங்கிகள் குறிப்பிட்ட விதிமுறையை வகுத்துள்ளன. 3 மாதம் முதல் 6 மாத காலத்திற்கு பிறகு தான் அசல் தொகையில் பணத்தை வரவு வைக்க முடியும். இப்படி கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவதற்கு நிறைய விதிமுறைகள் உள்ளன. இவற்றையும் முன்னரே தெரிந்து கொண்டு ஹோம் லோன் ட்ரான்ஸ்ஃபர் செய்யுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+