பொதுவாக இன்றைய காலகட்டத்தில் பலரும் நினைக்கும் ஒரு விஷயம், இன்று கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. ஓய்வு காலத்தில் ஆவது நன்றாக இருக்க வேண்டும். நாம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, நம் குழந்தைகளாவது நன்றாக இருக்க வேண்டும் என்பது தான்.
குறிப்பாக 30 வயதிற்கு மேபட்டவர்கள் எனில், தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும். ஓய்வூகாலம் பற்றி திட்டமிட வேண்டும்.
குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள் என பலரும் நிரந்தரமாக வருமானம் கிடைக்க கண்டிப்பாக முதலீடு செய்ய வேண்டும்.
எவ்வளவு செய்ய வேண்டும்?
அந்த வகையில் குட் ரிட்டர்ன் ரீடர் ஒருவர்? அவருக்கு 33 வயதாகிறது? மாதம் 60,000 ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும்? அவரின் குழந்தைகளின் கல்வி மற்றும் ஓய்வுகாலத்திற்கு எதில் முதலீடு செய்யலாம் என கேட்டுள்ளார். நீங்கள் முதலீடு செய்வதற்கு முன்பு பணவீக்கத்தினையும் கணக்கிட்டு கொள்ளுங்கள். உதாரணத்திற்கு இன்று உங்களுக்கு 50,000 ரூபாய் தேவைப்படுகின்றது எனில், இன்னும் 10 வருடங்கள், 20 வருடங்கள், 30 வருடங்கள் கழித்து எவ்வளவு தேவைப்படும் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள்.
பணவீக்கம் எவ்வளவு?
இன்று உங்களுக்கு 50000 ரூபாய் தேவைப்படுகிறது என வைத்துக் கொள்வோம். பணவீக்கம் 6% என வைத்துக் கொண்டால், 30 ஆண்டுகள் கழித்தும் சுமார் 2.87 லட்சம் ரூபாய் தேவைப்படும்.
இதே 20 வருடம் கழித்து 1.6 லட்சம் ரூபாய் தேவைப்படும்.
இதே 10 ஆண்டுகள் கழித்து 89,542.38 ரூபாயாக தேவைப்படும். ஆக அதற்கேற்ப உங்களின் முதலீடுகளையும் திட்டமிடலாம்.4
எவ்வளவு முதலீடு?
தற்போது 33 வயது என்ற நிலையில், எதிர்காலத்தில் குழந்தை மற்றும் ஓய்வுகாலம் என்பதே முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் மாதம் 6000 - 7000 முதலீடு செய்யலாம் எனும்போது, எதிர்காலத்தில் எவ்வளவு கார்ப்பஸ் கிடைக்கும். வருடத்திற்கு சுமார் 12% வருமானம் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம்.
வருவாய் எவ்வளவு?
மாதம் 7,000 ரூபாய் எஸ் ஐ பி முதலீடு செய்கிறீர்கள் எனில், 12% வருமானம் என கணக்கீடு செய்தால், 30 ஆண்டுகள் கழித்து 25,20,000 ரூபாய் முதலீடுன் செய்திருப்பீர்கள்.
இதன் மூலம் உங்களுக்கு கிடைக்கும் எவ்வளவு வருமானம் 2,21,89,396 ரூபாயாக இருக்கும்.
ஆக 30 ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் கையில் 2,47,09,396 ரூபாயாக இருக்கும்.
மெடிக்கல் இன்சூரன்ஸ் போட்டு வைக்கலாம்
இது தவிர அரசின் பிபிஎஃப் அல்லது சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்யலாம். மேலும் உங்களது சம்பளம் மாத மாதம் அதிகரிக்கும்போது, உங்களது எஸ் ஐ பி முதலீட்டினையும் அதிகரிக்கலாம். அதே போல மருத்துவ செலவுகளை சமாளிக்க மெடிக்கல் இன்சூரன்ஸ் போட்டு வைக்கலாம். அதுவும் குடும்பத்தில் அனைவரும் பயன்படுத்தும் படி போட்டு வைக்கலாம். இவற்றோடு எளிதில் எடுக்கும்படியாக அவசர தேவைக்காக கணிசமான தொகையை போட்டு வைக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?



Click it and Unblock the Notifications