எந்த பெற்றோராக இருந்தாலும் சரி தங்களுடைய எதிர்காலத்திற்கு முன்பு தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அதற்காக அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. சில திட்டங்களுக்கு சிறப்பான வட்டி விகிதத்துடன் கூட்டு வருமானமும் கிடைக்கிறது. அப்படி கிடைக்கும் 5 திட்டங்களைத் தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
நேஷனல் சேவிங்ஸ் சர்டிபிகேட் (NSC): இந்தத் திட்டத்தினை தேசிய சேமிப்புச் சான்றிதழ் என்றும் கூறுவார்கள். NSC திட்டம் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் பாதுகாப்பான முதலீட்டு திட்டம் ஆகும். இதில் தனி நபர்கள், இந்து கூட்டுக் குடும்பங்கள் முதலீடு செய்யலாம். என்எஸ்சி கணக்கை தனிநபர் தங்களுக்காகவோ அல்லது தங்கள் குழந்தைகளுக்காகவோ திறக்கலாம். 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட மைனர்களுக்காகவும் கணக்கு திறக்கலாம். தற்போது இந்த திட்டத்திற்கு 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதற்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை நிதி அமைச்சகத்தின் மூலம் மாற்றி அமைக்கப்படும்.
ஒவ்வொரு காலாண்டும் என்ன வட்டி விகிதம் பொருந்துகிறது என்பன பற்றிய தகவல்கள் செய்திகள் மற்றும் இது போன்ற பதிவுகள் வாயிலாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இதில் நீங்கள் குறைந்தபட்சமாக 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இல்லை. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். ஆனால் அதன் பிறகு உங்களால் இதை நீட்டிக்க முடியாது. இதற்கு வருமான வரிச் சட்டம் 2025-இன் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும்.

சுகன்ய சம்ரித்தி யோஜனா (SSY): குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட திட்டம். இதில் ஏராளமான பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் முதலீடு செய்து வருகின்றனர். குழந்தைகளின் சார்பாக அவர்களுடைய பெற்றோர் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர் சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கை திறக்கலாம். இந்த திட்டத்தினை செல்வமகள் சேமிப்பு திட்டம் என்றும் கூறுவார்கள். குழந்தைக்கு 18 வயது பூர்த்தியானதும் தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பித்து அந்த குழந்தையின் பெயரிலேயே கணக்கை மாற்றி விடலாம். இதற்கு அதிகபட்சமாக 8.1% வழங்கப்படுகிறது.
சிறு சேமிப்பு திட்டங்களிலேயே மிக அதிக வட்டி இந்த திட்டத்திற்கு வழங்கப்படுவது தான் மற்றொரு சிறப்பம்சம். ஒரு நிதியாண்டில் நீங்கள் குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதன் லாக்கின் காலம் 21 ஆண்டுகள். ஆனால் தொடர்ந்து 15 ஆண்டுகள் மட்டும் முதலீடு செய்தால் போதும். பிறகுள்ள 6 ஆண்டுகளுக்கு கூட்டு வட்டியின் மூலம் வருமானம் கிடைக்கும். ஒரு நிதியாண்டில் எஸ்எஸ்ஒய் கணக்கில் முதலீடு செய்யப்படும் ரூ.1.5 லட்சம் வரையிலான தொகைக்கு வருமானவரிச் சட்டம் 80சி-இன் கீழ் வரி சலுகை கிடைக்கும்.
அதே போல ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டத்திற்கு கிடைக்கும் வட்டிக்கும் வரி விலக்கு உண்டு. எனவே முதிர்வு காலத்தில் முழு தொகையையும் எந்தவித வரியும் இன்றி வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி: பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் என்று சொல்லப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் ரிஸ்கில்லாத முதலீடாகும். இதுவும் ஒரு பிரபலமான முதலீட்டு திட்டமாக இருந்து வருகிறது. இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் ppf கணக்கை தொடங்கலாம். குழந்தைகள் அல்லது மைனர் சார்பாக அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கை தொடங்க முடியும். முன்பு சொன்னது போல குழந்தைக்கு 18 வயது ஆனதும் PPF கணக்கை குழந்தையின் பெயருக்கே மாற்றிவிடலாம். தற்போது பிபிஎஃப் திட்டத்திற்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி ஒவ்வொரு காலண்டிற்கும் மாற்றியமைக்கப்படும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். தேவைப்பட்டால் 5 ஆண்டுகள் கணக்கை நீட்டித்துக் கொள்ளலாம். இதன் சிறப்பம்சமும் நீங்கள் பெரும் வட்டி மற்றும் முதலீடு ஆகிய இரண்டிற்கும் வரி விலக்கு கிடைக்கும்.
NPS வாத்சல்யா: இந்தத் திட்டம் பிரத்தியேகமாக குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தையின் நிதி எதிர்காலத்தை பாதுகாக்க விரும்பும் பெற்றோர்கள் இதில் முதலீடு செய்யலாம். NPS திட்டத்தினை இந்திய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் நிர்வகித்து வருகிறது. இந்த திட்டத்திற்கு 9.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையிலான வட்டி கிடைக்கிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக ஆண்டுக்கு 1,000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு இல்லை. கணக்கு தொடங்கப்பட்ட தேதியிலிருந்து 3 ஆண்டுகள் வரை லாக்கின் காலம் உள்ளது. எனவே NPS திட்டத்தில் பெற்றோர் அல்லது பாதுகாவலரோ முதலீடு செய்யும் போது 1.5 லட்சம் வரையிலான தொகைக்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80CCD(1B)-இன் கீழ் வரி விலக்கு பெறலாம்.


Click it and Unblock the Notifications