இன்றைய வேகமான உலகில் ஒவ்வொருவருக்கென்றும் தனிப்பட்ட நிதி தேவைகள் உள்ளது. முன்பெல்லாம் ஒருவரின் சம்பளத்தை வைத்து குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றி வந்தனர். ஆனால் தற்போது பணவீக்க அதிகரிப்பின் காரணமாக செலவுகள் அதிகரித்து விட்டன. தேவையோ இல்லையோ சலுகைகள் கிடைப்பதால் மால்களுக்கு சென்று பொருட்களை வாங்குவது பல குடும்பங்களில் வழக்கமாகிவிட்டது. இதனால் மாத கடைசி தேதிக்குள் பணம் காலி ஆகிவிடுகிறது. இந்தப் பதிவில் செலவுகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த பார்ப்போம்.
பட்ஜெட் அமைத்தல்: நிதி மேலாண்மை என்பது அதிக சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே கிடையாது. இந்திய அரசு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 143 கோடி மக்களுக்கான பட்ஜெட்டை அறிவிக்கிறது. அரசு கோடிக்கணக்கான மக்களுக்கே பட்ஜெட் போடும்போது, உங்கள் குடும்பத்துக்கான நிதிச் செலவை எப்படி பட்ஜெட் போடாமல் நடத்த முடியும். வரவு செலவு குறித்த பட்ஜெட்டை அமைத்து, அதற்கு ஏற்ப செலவு செய்யும் போது மாத கடைசியில் பணப்பற்றாக்குறை ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

முக்கிய செலவுகள் மற்றும் பிற செலவுகள் ஆகியவற்றைப் பட்டியலிடுங்கள்: முக்கிய செலவுகளில் கரண்ட் பில், மொபைல் பில், குழந்தைகளின் பள்ளி கட்டணம், மளிகை சாமான்கள் போன்றவை அடங்கும். பிற செலவுகளில் வெளியில் உணவு ஆர்டர் செய்வது, ஷாப்பிங் செய்வது போன்ற விருப்பச் செலவுகள் அடங்கும்.
தேவை மற்றும் விருப்பம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொண்டு செலவு செய்ய வேண்டும். தேவை என்பது உண்மையிலேயே தேவைப்படும் விஷயங்களுக்காக செலவு செய்வது. உதாரணமாக வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு ஆகியவற்றை சொல்லலாம். விருப்பம் என்பது வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக வெளியில் செல்வது, படத்திற்கு செல்வது போன்ற செலவுகளைச் சொல்லலாம். தேவையை நம்மால் குறைக்க முடியாது. ஆனால் விருப்பச் செலவுகளைக் குறைக்க முயற்சி செய்யலாம்.
அவசரத்திற்கு சேமிப்பை வழக்கமாக்குங்கள்: அனைவருக்குமே அவசர நிலை ஏற்படுவது இயல்புதான். எதிர்பாராத சூழ்நிலைகளின் போது நிதி சுமையைத் தவிர்க்க கடுகளவு மாதமாதம் சேமியுங்கள். ஒருவருக்கு தொடர்ந்து எதிர்பாராத செலவுகள் வராது. எனவே மாத மாதம் சேமிப்பதை வழக்கமாக்குவது எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிக்கவும், ஒரு வேலை அப்படி எந்த சூழ்நிலையும் வரவில்லை என்றால் அதை வேறு எதிர்கால இலக்குகளுக்காக பயன்படுத்தவும் உதவும்.
வரவு செலவு திட்டத்தை இருமுறை பரிசீலியுங்கள்: வரவு செலவு திட்டத்தை உருவாக்கி அவற்றை 2 முறை சரி பார்க்க வேண்டும். எந்த செலவுகள் அவசியம், எது தேவையற்றது என்பதை தெரிந்து கொண்டு தேவையில்லாத செலவுகளை குறைக்கலாம். இதன் மூலம் மாத கடைசியில் பணம் தீர்ந்து கடன் வாங்கும் சிக்கலை தவிர்க்கலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications