இப்போலாம் கிரெடிட் கார்டு வாங்குறது சர்வ சாதாரணமாயிட்டு. ஏன்னா அக்கவுண்ட் வச்சிருக்கிற பேங்க்-ல இருந்து கால் பண்ணி கிரெடிட் கார்டு வேணுமா? வேணுமானு? கேட்க ஆரம்பிச்சிட்டாங்க! இது ரொம்ப வசதியானதா இருந்தாலும் சில பேர் கிரெடிட் கார்டு பக்கமே போகக்கூடாது. அப்படி போனீங்கன்னா உங்களோட பணம் மொத்தமும் காலி ஆயிடும். யாரெல்லாம் கிரெடிட் கார்டு பக்கமே போகக்கூடாதுன்னு இந்த பதிவில் விரிவா பார்ப்போம். நீங்களும் இந்த லிஸ்ட்ல இருந்தீங்கன்னா தயவு செஞ்சு கிரெடிட் கார்டு பக்கம் தல வெச்சி படுத்துறாதீங்க.
அதிக ஷாப்பிங்: சிலர் கண்ணுல பாக்குறது எல்லாத்தையும் வாங்கணும்னு நினைக்கிற ஆளா இருப்பாங்க. இல்ல அடிக்கடி ஏதாவது ஒன்னு வாங்கிட்டே இருப்பாங்க. இங்கிலீஷ்ல இதை "Impulsive Shopping"-ன்னு சொல்லுவாங்க. அதே மாதிரி கிரெடிட் கார்டு வாங்கி தேவை இல்லாம இதேபோல ஷாப்பிங் பண்ணிட்டே இருந்தீங்கன்னா.. லிமிட் முடிஞ்சிடும் திரும்ப இன்னொரு கிரெடிட் கார்டு.. அந்த லிமிட் முடிஞ்சி இன்னொன்னு வாங்கி யூஸ் பண்றது! இப்படியே லிஸ்ட் பெருசா போயிட்டே இருக்கும். இதுக்கு வட்டியும் ஏறிட்டே போகும். கடைசியில பில் கட்றதுக்கு வழி இல்லாம முழிக்க வேண்டியதுதான்.

ஈஎம்ஐ: சிலர் லோன், குழு கடன், தனிநபர் கடன் என எல்லாத்தையும் வாங்கி வச்சிருப்பாங்க. ஆனா கரெக்ட்டா பில் கட்டிடுவாங்க. ஆனா சிலர் இஎம்ஐ, லோன், மொபைல் பில்லுன்னு எல்லாத்தையும் வச்சுக்கிட்டு கரெக்டா கட்ட மாட்டாங்க. இதுக்கு அவங்கள சொல்லி தப்பில்ல. வாங்கும் போது இருந்த வருமானம் பில் கட்டும்போது இல்லாம போயிருக்கலாம். அல்லது குடும்ப சூழல் இதுக்கு காரணமா இருக்கலாம். நீங்க இப்போ இருக்கிற வேலையில முழு திருப்தி இல்லாம இருந்தீங்கனா கிரெடிட் கார்டு பக்கம் போயிடாதீங்க! ஒருவேளை கிரெடிட் கார்டு வாங்குன அப்புறம் வேலையை விட்டுட்டா சிக்கல் ஆயிடும். இதனால உங்கள் கிரெடிட் ஸ்கோரும் குறைஞ்சிடும். அப்புறம் லோன் கேட்டு பேங்க் பக்கம் போனா "இன்று போய் நாளை வா"-னு அனுப்பி விட்டுருவாங்க.
மினிமம் பேமென்ட்: சிலர் மினிமம் பேமென்ட் மட்டும் கட்டுனா போதும்னு நினைக்கிறாங்க. இது தான் மிகப்பெரிய தப்பு. ஏன்னா மீதி பேலன்ஸ்க்கு வட்டி ஏறிக்கிட்டே போகுமே தவிர இதனால உங்களுக்கு பெருசா பிரயோஜனம் இருக்காது. உதாரணமாக 10,000 ரூபாய் பேலன்ஸ் இருந்தா 6 மாசத்துல 15000 ரூபாயா மாறிடும்.
கடன் மேல கடன்: ஏற்கனவே 4, 5 கடன்ல இருக்கிறவங்க கிரெடிட் கார்டு வாங்கலாமா வேண்டாமான்னு யோசிச்சு தான் முடிவு எடுக்கணும். உங்களோட சம்பளத்தை மட்டும் நம்பி கடன்களை அடுக்கிட்டே போறது பிற்காலத்துல பிரச்சனையா மாறலாம்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications