பழமைவாத முதலீட்டாளர்கள் முதலில் தேர்ந்தெடுக்கும் ஒரு முதலீட்டு திட்டம் என்றால் அது பிக்சட் டெபாசிட்கள் தான். நிலையான வைப்புத் தொகை என்று சொல்லப்படும் FD-களில் தங்களுடைய பணத்தை முதலீடு செய்தால் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதே பலரின் நம்பிக்கையாக இருக்கிறது. அதற்கு ஏற்ப வங்கிகளில் பல்வேறு காலகட்டங்களில் பிக்சட் டெபாசிட் வழங்கப்படுகிறது. பிற திட்டங்களை காட்டிலும் பாதுகாப்பான திட்டமாக இருப்பதாலும், உத்தரவாதமான வருமானத்தை வழங்குவதாலும் FD-களில் மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்கின்றனர்.
பிக்சட் டெபாசிட்களில் பணத்தை முதலீடு செய்யும் போது.. எந்த வங்கியில் அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டுதான் முதலீடு செய்ய வேண்டும். ஏனெனில் சிலர் தாங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கியிலேயே FD கணக்கு திறக்க வேண்டும் என்று எண்ணுவர். ஆனால் இது முற்றிலும் தவறு. நீங்கள் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால், அதிக வட்டி விகிதம் வழங்கப்படும் வங்கியை தேர்வு செய்வது முக்கியமாகும்.

தற்போது 444 நாட்கள் கொண்ட சிறப்பு பிக்சட் டெபாசிட்களை பல்வேறு வங்கிகள் வழங்குகிறது. சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு பிற FD-களைக் காட்டிலும் அதிக வட்டி விகிதம் வழங்கப்படும். அந்த வகையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் உள்ளிட்ட பல முன்னணி வங்கிகளில் 444 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட பிக்சட் டெபாசிட்கள் வழங்கப்படுகின்றன. இந்த பதிவில் மேலே கூறப்பட்டுள்ள மூன்று வங்கிகளில் வழங்கப்படும் FD-களில் ரூ. 2 லட்சத்தை முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பார்ப்போம்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI): ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அம்ரித் கலாஷ் என்ற பெயரில் பிக்சட் டெபாசிட் திட்டத்தை வழங்கி வருகிறது. இதன் முதிர்வு காலம் 444 நாட்கள். இந்த திட்டம் பிப்ரவரி 2023-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு பொது வாடிக்கையாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம். ஆரம்பத்தில் 2024-ஆம் ஆண்டின் செப்டம்பர் 30-ஆம் தேதி முடிவடைய இருந்த இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் பலமுறை நீட்டிக்கப்பட்டு 2025-ஆம் ஆண்டின் மார்ச் 31-ஆம் தேதி முடிவடையும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டால் அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம். அதுவே நீட்டிக்கப்படவில்லை என்றால் மார்ச் 31-ஆம் தேதியுடன் இந்த சிறப்பு FD திட்டத்தின் மூலம் யாரும் பயனடைய முடியாது. தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்கும் அம்ரித் கலாஷ் திட்டத்திற்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு லாபம்?: ரூ.2 லட்ச ரூபாயை முதலீடு செய்தால் அதற்கு 444 நாட்கள் கழித்து வட்டி வருமானமாக 18,267 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் 2,18,6767 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை ரூ.4 லட்சத்தை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். 444 நாட்கள் கழித்து அதற்கு வட்டி வருமானமாக ரூ. 36,534 கிடைக்கும். இதன் மூலம் உங்களுடைய அசல் தொகையான ரூ.4 லட்சத்தோடு வட்டியையும் சேர்த்து 4,36,534 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்: இந்தியாவின் பழமையான வங்குகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், SBI வங்கியை விட சற்று அதிகமான வட்டி விகிதத்துடன் 444 நாட்கள் கொண்ட FD திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்திற்கு பொது வாடிக்கையாளர்களுக்கு 7.30 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
ரூ. 2 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு வருமானம்?: IOB வழங்கும் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் ரூ. 2 லட்சத்தை முதலீடு செய்தால் 7.30 சதவீத வட்டியில் வட்டி வருமானமாக 18,397 ரூபாய் கிடைக்கும், இதன் மூலம் அசலும் வட்டியுமாக 2,18,397 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை ரூ.4 லட்சத்தை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு வட்டி வருமானமாக ரூ. 36,795 கிடைக்கும். இதன் மூலம் உங்களுடைய அசல் தொகையான 4,36,795 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.ஒப்பீட்டளவில் பார்க்கும்போது ஐஓபி வங்கி தான் அதிக வட்டியை வழங்குகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications