உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று. தொழில்முனைவோர் மற்றும் தங்கள் கனவுகளை நினைவாக்க விரும்புவோருக்கு இது சிறந்த இடமாக விளங்குகிறது. நிறுவனங்களுக்கு சென்று பணி புரிவதை விட தாமாக ஒரு தொழில் செய்து முன்னேற வேண்டும் என்பதே பலரின் கனவு. இருப்பினும் இதற்கு முற்றுகட்டையாய் இருப்பது என்னவோ தொழிலுக்கு தேவைப்படும் பட்ஜெட் தான். இனி உங்களுக்கு கவலை வேண்டாம். மிகவும் குறைந்த முதலீடான 50,000 ரூபாயில் இருந்து தொடங்கக்கூடிய தொழில்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம். இதில் ஏதேனும் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதை வைத்து நீங்களும் தொழில் தொடங்கலாம்.
கிளாத் இண்டஸ்ட்ரி: இந்தியா பண்டிகைகளின் நாடு. புதிய ஆடைகள் இல்லாமல் எந்த ஒரு பண்டிகையையும் நம் நாட்டில் உள்ளவர்கள் கொண்டாடுவதில்லை. அதுமட்டுமின்றி ஒருவருக்கு புதிய ஆடைகள் தேவைப்படும் சந்தர்ப்பங்கள் பல உள்ளன. உதாரணமாக பிறந்த நாள், திருமணம், அழைப்புகள் என இதன் பயன்பாட்டை சொல்லிக் கொண்டே போகலாம். ஆடைகளுக்கான தேவை நம் நாட்டில் ஒருபோதும் குறையாது. எனவே 50,000 ரூபாய்க்குள் ஆடைகளை மொத்தமாக இறக்குமதி செய்து தொழில் தொடங்கலாம். ஆனால் இந்தத் தொழிலில் வெற்றி பெறுவதற்கு ரசனை மிக முக்கியம். பெரும்பாலானோருக்கு பிடிக்கும் வகையில் துணிகளை தேர்வு செய்யும் திறமை இருந்தால் இந்த தொழிலில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

உணவுக் கடை அல்லது உணவு ட்ரக்குகள்: சிறிய முதலீட்டில் தொடங்கக்கூடிய நல்ல தொழில் என்றால் அது உணவு கடைகள். இது போன்ற கடைகளை திறப்பதற்கு பல வகையான உணவுகளை சமைக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. எந்த உணவை நீங்கள் சுவையோடு தயாரிப்பீர்கள் என்பதை முதலில் ஆராய்ச்சி செய்யுங்கள். அதன் பிறகு அந்த ஒரு உணவை மட்டுமே முதன்மையாகக் கொண்டு இந்த கடையைத் தொடங்கலாம்.
உதாரணமாக நூடுல்ஸ், மோமோஸ் அல்லது சாட் ஐட்டம்ஸ் என மக்கள் விரும்பும் சில உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்யலாம். தற்போது பல இடங்களிலும் உணவு ட்ரக்குகள் காணப்படுகிறது. இதன் முக்கிய நன்மை என்னவென்றால் ஒரே இடத்தில் இருந்து விற்பனை செய்ய வேண்டும் என்ற அவசியம் இருக்காது. ஒருவேளை ஒரு இடத்தில் வியாபாரம் இல்லை என்றாலும் வேறு இடங்களுக்கு சென்று விற்பனை செய்யலாம். 50,000 முதலீட்டில் எப்படி ட்ரக் பெறுவது என்று உங்களுக்கு தோன்றலாம். நீங்கள் சிறிய கடையை தொடங்குவதற்கு கண்டிப்பாக இந்த முதலீடு போதுமானது. ஆனால் ட்ரக் பெற்று கடை தொடங்குவதானால் கண்டிப்பாக அதற்கு கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
டியூஷன் எடுக்கலாம்: உங்களுக்கு நன்றாக பாடம் சொல்லிக் கொடுக்க தெரியும் என்றால் நீங்கள் டியூஷன் வகுப்புகள் எடுக்கலாம். இதற்கு ஏன் முதலீடு? என்று உங்களுக்குத் தோன்றலாம். வீட்டில் இருந்தபடியே டியூஷன் வகுப்புகள் எடுப்பதற்கு பெரும்பாலும் முதலீடு எதுவும் தேவைப்படாது. அதுவே மக்கள் பார்க்கும் இடங்களில் டியூஷன் நடத்த வேண்டுமானால் அதற்கான வாடகை மற்றும் அட்வான்ஸ் ஆகியவற்றிற்கு செலவாகலாம்.
தற்பொழுது சிறிய குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதற்கு மாதத்திற்கு 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை சார்ஜ் செய்கின்றனர். அதுவே நீங்கள் 8 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் வரை பாடம் சொல்லிக் கொடுக்க தெரிந்தவர்களாக இருந்தால்.. இதைவிட அதிகமான டியூஷன் கட்டணம் பெற முடியும். உங்கள் டியூஷனில் 20 முதல் 30 மாணவர்கள் வரை சேர்ந்தாலே மாதத்திற்கு கணிசமான வருமானத்தை பெறலாம்.
வெட்டிங் பிளானர் அல்லது ஈவன்ட் மேனேஜர்: இது திருமணத்தை திறம்பட நடத்திக் கொடுப்பதற்கான தொழில். அதாவது மண்டபத்தில் டெக்கரேஷன் செய்வது முதல் விருந்தினர்களுக்கு உணவு உபசரிப்பது வரை அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் தொழில் என்று வைத்துக்கொள்ளலாம். இதற்கு ஆரம்பத்தில் கொஞ்சம் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் அதன் பிறகு வரக்கூடிய வருமானம் பெரிய அளவில் இருக்கும். இந்த தொழிலை பொறுத்தவரை பல நபர்களோடு கூட்டாக சேர்ந்து செயல்பட வேண்டியிருக்கும். உதாரணமாக கேட்டரிங், போட்டோகிராபி, மேக்அப் போன்ற பலருடனும் டை அப் வைத்துக்கொண்டு இந்த தொழிலை செய்யலாம்.
ஊறுகாய் தொழில்: இந்தியர்களாகிய நாம் பல நேரங்களில் ஊறுகாய் இல்லாமல் சாப்பிடுவதில்லை. ஊறுகாய் தொழில் தற்போது வளர்ந்து வரும் தொழிலாக பார்க்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்களில் இறைச்சியை கொண்டு ஊறுகாய் தயாரித்து விற்பனை செய்கின்றனர். வெஜ் மற்றும் நான்வெஜ் என இரண்டையும் கொண்டு ஊறுகாய்களை விதவிதமாக தயாரித்து விற்பனை செய்து லாபம் பெறலாம்.
ஆனால் எந்த ஒரு உணவுத் தொழில் ஆனாலும் சரி அதற்கு உரிமங்கள் உள்ளன. எனவே இது குறித்த உரிமங்கள் என்ன என்பதை தெரிந்து கொண்டு சுகாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த தொழிலை செய்யுங்கள். ஏனெனில் ஊறுகாய் தொழில் ஒரே நாளில் சமைத்து ஒரே நாளில் விற்பனை செய்யும் தொழில் அல்ல. நீண்ட நாட்கள் மக்கள் வைத்து பயன்படுத்தப்படுவதால் அதை பதப்படுத்தும் முறைகளும் முக்கியம். இதில் ஏதேனும் குளறுபடிகள் நடந்து விட்டால் அந்த உணவு கெட்டுவிடும். இதனால் நீங்கள் தயாரித்து விற்பனை செய்யும் பிராண்டின் பெயர் மக்கள் மத்தியில் போய் சேராமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எனவே எந்த ஒரு தொழிலை செய்ய வேண்டுமானாலும் அதற்கு நேர்த்தியான உழைப்பு மற்றும் சுத்தமான அணுகுமுறை ஆகியவை முக்கியம்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications