புத்தாண்டில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா? அதிக ரிட்டன்ஸ் தரும் டாப் 5 திட்டங்கள்!

இன்னும் 3 நாட்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. இந்நேரம் பலரும் புத்தாண்டுக்கு என்னென்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். சிலர் இந்த வருடமாவது சேமிக்க தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். இதுபோன்ற நபர்கள் நீண்ட கால இலக்குகளைப் பூர்த்தி செய்யும், அதே வேலையில் உடனடி நிதித் தேவைகளை நிவர்த்தி செய்யும் திட்டங்களில் முதலீடு செய்யலாம். இந்தப் பதிவில் 5 குறுகிய கால முதலீட்டு திட்டங்கள் குறித்து பார்ப்போம்.

சேமிப்பு என்பது அனைவருக்குமே தேவையான ஒன்று. அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு எதிராக கடுகளவு சேமிப்பதும் பிற்காலத்தில் ஏதோ ஒரு விஷயத்திற்கு உதவிகரமானதாக இருக்கும். அதுவும் இன்றெல்லாம் மருத்துவச் செலவுகள் எப்போது ஏற்படும் என்று கணிக்க முடியவில்லை. திடீரென ஏற்படும் அவசர செலவுகளை தடுப்பதற்கு குறுகிய கால முதலீடுகள் முக்கியம். அப்படி குறுகிய காலங்களில் எந்தெந்த விஷயங்களில் சேமிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

 புத்தாண்டில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா? அதிக ரிட்டன்ஸ் தரும் டாப் 5 திட்டங்கள்!

பிக்சட் டெபாசிட்கள்: வங்கிகளில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான பிக்சட் டெபாசிட்கள் கிடைக்கிறது. குறுகிய கால நிதி தேவைகளுக்கு உங்களுக்கு ஏற்ற பிக்சட் டெபாசிட் திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம். இதற்கான வட்டி விகிதங்கள் நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலத்தின் அடிப்படையில் மாறுபடலாம். எனவே முதலீடு செய்வதற்கு முன்பு வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களை அணுகி வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்து சிறந்த வருமானம் தரும் திட்டத்தை தேர்ந்தெடுங்கள்.

கார்ப்பரேட் பிக்சட் டெபாசிட்கள்: கார்ப்பரேட் பிக்சட் டெபாசிட்கள் வங்கிகளில் வழங்கப்படும் பிக்சட் டெபாசிட்களைப் போலவே நிதி திரட்டும் நோக்கில் நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன. இது பொதுவாக 1 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கலாம். கார்ப்பரேட் பிக்சட் டெபாசிட்களுக்கு 9.25 சதவீதம் முதல் 10.75 சதவீதம் வரையிலான வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஆனால் முதலீடு செய்வதற்கு முன்பு நிறுவனத்தின் கடன் தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு ஒரு நிறுவனம் பிக்சட் டெபாசிட்களை வழங்குகிறது என்றால் அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு மற்றும் பிற காரணிகள், நிறுவனத்தின் நம்பகத்தன்மை குறித்தும் ஆராய வேண்டும்.

ரெக்கரிங் டெபாசிட்கள்: மொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்கள் மாதம் மாதம் RD என்று சொல்லப்படுகிற ரெக்கர்ரிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். RD திட்டங்களை வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்கள் வழங்குகின்றன. பொதுவாக 1 வருடம் அல்லது அதற்கு மேல் என எவ்வளவு ஆண்டுகள் வேண்டுமானாலும் நீங்கள் முதலீடு செய்யலாம். வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் இந்த முதிர்வு காலம் மாறுபடலாம். அதோடு வட்டி விகிதங்களும் மாறுபடலாம். எனவே வருமானத்தை அதிகரிக்க வெவ்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்து அதன் பிறகு முடிவெடுக்க வேண்டும்.

மியூச்சுவல் ஃபண்டுகள்: லாபகரமான முதலீட்டை தேடும் குறுகிய கால முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஏற்றவை. ஒரு வருடம் அல்லது அதற்கும் குறைவாக முதலீடு செய்யலாம். பிற முதலீட்டு திட்டங்களை விட இதில் வருமானம் அதிகம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அபாயமும் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

SIP-கள்: எப்படி மாதம் ரெக்கர்ரிங் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்கிறோமோ அதே போல மியூச்சுவல் ஃபண்டுகளின் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானில் முதலீடு செய்யலாம். எஸ்ஐபி என்பது காலாண்டுக்கு ஒருமுறை, மாதம் ஒருமுறை அல்லது அரையாண்டுக்கு ஒரு முறை என பணத்தைப் பிரித்து முதலீடு செய்யும் முறையாகும். இதற்கு கூட்டு வட்டி வழங்கப்படுவதால் காலப்போக்கில் உங்களுடைய வருமானம் கணிசமாக வளரும்.

ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை என்பதை தெரிந்து முதலீடு செய்யுங்கள். 2025-ஆம் ஆண்டு பிறக்க இருக்கிறது. இந்நிலையில் சிறந்த முதலீட்டு தேர்வுகளை ஆராயும் முதலீட்டாளர்கள் மேலே கூறப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து பரிசீலிக்கலாம். மேலே கூறப்பட்டுள்ள விவரங்களை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. எந்த ஒரு முதலீட்டு திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன்பு ஒரு நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+