பண நிர்வாகத்தில் நாம் தெரியாமல் செய்துவிடும் சில தவறுகள் நம்மை திவாலாக்கி விடுகின்றன. எனவே பணத்தைக் கையாளும்போதும் கடன்களை அடைக்கும் போதும் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும்.
எல்லா மனிதர்களுக்கும் சேமிப்பு என்பது மிகவும் அத்தியாவசியமானது. சேமிப்பு விஷயத்தில் நாம் செய்யும் தவறுகள் நம்மை மிகுந்த சிரமங்களுக்கு ஆளாக்கிவிடும். நாம் செய்யும் இதுபோன்ற 5 முக்கிய தவறுகள் பற்றி பார்க்கலாம்.

1. முறையான சேமிப்பு இல்லாதது: தொடர்ந்து ஒரு சிறு தொகையாவது மாதாமாதம் சேமித்து வருவதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது உங்களை நீண்டகாலத்துக்கு நிதி நெருக்கடி ஏற்படாமல் காப்பாற்றும். எதிர்பாராத அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிட்டால் சேமிப்புத் தொகை நிச்சயம் கை கொடுக்கும்.
நமது வருவாயில் குறைந்தபட்சம் 20 சதவீதத்தையாவது சேமிக்க வேண்டும். அது சம்பளமோ அல்லது வியாபாரமோ கவலையில்லை. ஆனால் சேமிப்பு செய்வதற்கு முன்பும் நன்கு திட்டமிட வேண்டும். பிற செலவுகளை தவிர்த்து சேமிப்பு செய்ய முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
2. கடன் தவணைகள் உரிய நேரத்தில் திரும்பச் செலுத்தாதது: கிரெடிட் கார்டில் 40 முதல் 50 நாட்கள் அவகாசம் இருப்பதால் அதை வைத்து நமது செலவீனங்களை சமாளிப்பது, பொருட்களை வாங்குவது இப்போது சகஜமாகிவிட்டது. இந்தக் காலத்துக்கு வட்டியில்லை என்பதோடு ரிவார்டு பாயிண்டுகளும் கிடைக்கும். இருப்பினும் கிரெடிட் கார்டுகள் ஆபத்தானவைதான். எப்போது என்றால் உரிய நேரத்தில் பணத்தைத் திரும்பச் செலுத்தாவிட்டில் கடுமையான வட்டி விதிப்புக்கு ஆளாக நேரிடும்.
முழுப்பணத்தையும் திரும்பச் செலுத்தாமல் கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிச் செலுத்தினாலும் கடுமையான வட்டியை கட்ட நேரிடும். இதுவும் நல்ல பழக்கமல்ல. இதனால் நீங்கள் வாங்கிய பொருட்களின் விலையில் வட்டிப்பணம் சேர்ந்து மறைமுகமாக அதிக விலையில் இருக்கும். ஸ்மார்ட்டாக பயன்படுத்தினால் கிரெடிட் கார்டுகள் உண்மையிலேயே பயனுள்ளவைகளாகும்.
3. இன்ஸ்சூரன்ஸ் மற்றும் பலன்களை மறுத்தல்: நமது வாழ்க்கை இப்படித்தான் செல்லும் என்று யாராலும் முடிவெடுக்க முடியாது. எதுவும் எப்போதும் யாருக்கும் நிகழக்கூடும். மிகப்பெரும் கடனோ அல்லது மரணமோகூட சம்பவிக்கலாம். அப்போது நமது நிதி நிலைமை நன்றாக இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம். அதேபோல இன்ஸ்சூரன்ஸும் இழப்பீட்டை சரி செய்யும். லைப், ஹெல்த், ஜெனரல் என எந்தவிதமான இன்சூரன்ஸ் என்றாலும் அது நிச்சயம் நல்ல பலன்களைத்தான் தரும். எதிர்பாராத நெருக்கடி சமயங்களின்போது இன்ஸ்சூரன்ஸ் தொகை உதவும்.
பணம் சேமிப்பு செய்ய வேண்டும் என்பதால் பலர் இன்ஸ்சூரன்ஸ் செய்வதை தவிர்க்கின்றனர். இது தவறான நடவடிக்கை. இன்சூரன்ஸ் என்பது ஒருவரது பாதுகாப்பு வளையாகும். அதற்குள் வாழ்க்கை நடத்துவது எப்போதும் நல்லது. கடன்கள் காரணமாக தலையில் துண்டைப் போட வேண்டிய அவசியம் ஏற்படாது. இன்சூரன்ஸ் என்பது நமது விருப்பங்களில் ஒன்றல்ல. அது நமக்கான பாதுகாப்பாகும்.
4. பட்ஜெட் இல்லாத வாழ்க்கை: பட்ஜெட் போட்டு வாழ்ந்தால் எந்தவித நிதிச்சிக்கலையும் சூப்பராகத் தவிர்த்து விடலாம். பட்ஜெட் என்பது உங்கள் பணத்தை சிறப்பாகக் கையாளுவதற்கு உதவும் ஆயுதமாகும். நாம் எங்கே அதிகம் செலவு செய்கிறோம் எனக் கண்டறிந்துவிட்டால் புத்திசாலித்தனமாகத் தவிர்த்து விடலாம். இதற்கு பட்ஜெட் போட வேண்டியது அவசியமாகும்.
பணச்சுதந்திரம் அல்லது பணத்துக்காக பிறரை நம்ப வேண்டிய சூழலை தவிர்ப்பதற்கு கட்டாயம் பட்ஜெட் போட்டாக வேண்டும். உங்களது நிதி இலக்குகளை அடைவதற்கு இது பெரிதும் உதவும். ஓய்வுக்காலத்துக்கான சேமிப்பு, அவசரகால நிதி, செலவுகளை கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளால் பணத்தை ஏராளமாக மிச்சப்படுத்தலாம்.
5. ஓய்வுத்திட்டம் இல்லாதது: ஓய்வுத்தட்டம் என்பது நீங்கள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின் மீதி காலத்தை எந்தவித அச்சமும் இல்லாமல் நிம்மதியாகக் கழிப்பதற்கு உதவியாக இருக்கும். சிறப்பான ஓய்வுக்காலத்துக்கு மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை சேமித்து வரவேண்டியது முக்கியமாகும். இதன்மூலம் உங்களது பணப்பலத்தை அதிகரித்து வாழ்க்கை முழுவதும் நிம்மதிப் பெருமூச்சை விடலாம்.
வாலண்டரி பிராவிடண்ட் பண்ட், பிராவிடண்ட் பண்ட், வரியில்லா ஓய்வு சேமிப்பு போன்ற திட்டங்களில் முதலீடு செய்யலாம். நீங்கள் வாங்கியுள்ள சொத்துகள் எப்போது மதிப்பு உயரும், உங்களது நிதி தேவை என்ன என்பதையெல்லாம் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.
இன்றைய காலச்சூழ்நிலையை வைத்தே உங்களது நிதிநிலைமை இருக்கும். சின்னச்சின்ன செலவுகள்கூட கண்காணிக்காமல் விடப்பட்டால் பெரும் இழப்புக்குக் கொண்டு சென்று விடும். சேமிப்புக்கு முன்னுரிமை கொடுத்தால் உங்களது எதிர்கால வாழ்க்கை சுபமாக இருக்கும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications