இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேசமயம் இதனால் பலன் அடைபவர்கள் என்பதை காட்டிலும் பலரும் கூடுதல் கட்டணம் செலுத்துபவர்களாகத் தான் உள்ளனர்.
ஏனெனில் கிரெடிட் கார்டினை சரியாக பயன்படுத்த பலருக்கும் தெரிவதில்லை. குறிப்பாக கிரெடிட் கார்டில் சிலவற்றிற்கு அதிக கட்டணம் என்பது வசூலிக்கப்படுகின்றது.
தெரியாமல் செலவு செய்து விட்டு பின்னர் விழிபிதுங்கி நிற்பவர்கள் மிக அதிகம்.
சம்பளதாரர்களுக்கு பயன்
குறிப்பாக மாத சம்பளதாரர்கள் கையில் பணம் இல்லாமல் செலவு செய்துவிட்டு, பின்னர் சம்பளம் வாங்கி ஒரு மாதம் கழித்து எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கும் வசதி தான் கிரெடிட் கார்டாக உள்ளது. இதனால் சம்பளதாரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. அதே சமயம் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் ஒரு சில கட்டணங்கள் உள்ளன என்பதும் அந்த கட்டணங்களை கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் தெரிந்து கொள்வதில்லை. இது சில சமயங்களில் அவர்களின் பரிவர்த்தனையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
அந்த வகையில் நாம் இன்று இன்று சில கட்டணங்கள் பற்றி பார்க்க இருக்கிறோம்.
வருடாந்திர கட்டணம்
ஒரு சில வங்கிகள் கிரெடிட் கார்டுகளை வழங்கும்போது ஒரு வருடத்திற்கு மட்டும் வருடாந்திர கட்டணம் இன்றி வழங்குகின்றன. ஆனால் ஒரு வருடம் முடிந்த பின்னர் கட்டணங்களை போட்டு தீட்டி விடுவார்கள். இதனை வருடா வருடம் செலுத்த வேண்டியிருக்கும். ஆக கார்டினை வாங்கும் முன்பே இதனை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
கிரெடிட் கார்டின் வகை மற்றும் கடன் வரம்புக்கு ஏற்ப வருடாந்திர கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான கட்டணங்களை வசூலிக்கின்றன. பொதுவாக இந்த கட்டணங்கள் 500 முதல் 3000 ரூபாய் வரையில் கூட இருக்கும். சில வங்கிகள், சில கார்டுகளுக்கு மட்டும் இந்த கட்டணம் என்பதை விதிப்பதில்லை. ஆக அதுபோன்ற கார்டுகளை தேர்ந்தெடுப்பது பயனுள்ள ஒன்றாக இருக்கும்.
பணம் எடுக்க கட்டணம்
கிரெடிட் கார்டு பயனர்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவற்றில் இதுவும் ஒன்று. டெபிட் கார்டுகளை போலவே ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் வசதி கிரெடிட் கார்டிலும் உண்டு. இவ்வாறு கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் எடுப்பதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. அதுவும் பணம் எடுத்த நாள் முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆக முடிந்தளவுக்கு இதனை எடுக்காமல் இருப்பது நல்லது.
தாமத கட்டணம்
கிரெடிட் கார்டுகளில் பயன்படுத்திய தொகையை சரியான தேதியில் கட்டாவிட்டால், தாமதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இது சில சமயம் பெரும் தொகையாக இருக்கும் என்பதால் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தி தாமத கட்டணங்களை தவிர்க்கலாம்.
வெளிநாட்டு பரிவர்த்தனை கட்டணம்
சில கிரெடிட் கார்டுகளை வெளிநாட்டிலும் பயன்படுத்தலாம் என்ற வசதிகள் உள்ளது. எனினும் வெளிநாட்டில் கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது, உள்நாட்டில் பயன்படுத்துவது போல கட்டணமின்றி பயன்படுத்த முடியாது. வெளிநாட்டில் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தினால் அதற்கென தனியாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆக அதனை தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.
ரயில் டிக்கெட்
ரயில் டிக்கெட் வாங்கும்போது அல்லது பெட்ரோல், டீசல் வாங்கும்போது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். இது ஒரு சிறிய தொகை தான் என்றாலும் அடிக்கடி இதற்காக பயன்படுத்தினால் அதுவே ஒரு பெரிய தொகையாக மாறிவிடும். இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் கார்டு, ஷாப்பிங் கார்டு, பெண்களுக்கு என தனி கார்டு என பல கார்டுகள் உள்ளன. ஆக அவற்றில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்யும்போது கட்டணம் குறைவாக இருக்கலாம்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications