எதிர்பாராத மருத்துவச் செலவுகளை தவிர்க்கும் பொருட்டு பலரும் "ஹெல்த் இன்சூரன்ஸ்" எடுத்து வைப்பது வழக்கம். அப்படி ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்கும் நபர்களுக்கு தேவைப்படும் நேரங்களில் அவை உதவாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன அவை என்ன என்பதை தெரிந்து கொண்டு முன்கூட்டியே சரி செய்வதன் மூலம் ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம் கோரிக்கையை விரைவில் செயல்படுத்தி பலன் பெறலாம். இந்தக் கட்டுரையில் ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம் கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.
அவசர காலங்களில் மருத்துவச் செலவுகளை ஈடு கட்டும் விதமாக பலரும் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைப்பார்கள். ஆனால் அவை தகுந்த நேரத்தில் கிடைக்கவில்லை என்றால் எடுத்ததற்கு எந்தவித பலனும் இல்லாமல் போய்விடும். எனவே எதனால் ஹெல்த் இன்சூரன்ஸ் கிளைம் கோரிக்கை ரிஜெக்ட் செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

தவறான தகவல்கள்: வயது, வருமானம், ஏற்கனவே இருக்கும் மருத்துவ காப்பீடுகள், தொழில் விவரங்கள் போன்றவற்றை தவறாகக் குறிப்பிடுவதனால் உங்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.
முன்பே இருக்கும் நோய்களைக் குறிப்பிடாமல் இருப்பது: முன்பே இருக்கும் நோய்கள், உங்கள் குடும்பத்தின் மருத்துவ வரலாறு, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவற்றை வெளிப்படுத்தாமல் கிளைம் பிற விண்ணப்பித்தால் அவை நிராகரிக்கப்படலாம். ஏனெனில் சில பாலிசிகள் குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு பயன்படுவதில்லை. எனவே உங்களுடைய பாலிசியின் கவரேஜ் என்ன? என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல ஏற்கனவே உங்களுக்கு இருக்கும் நோய்களின் விவரங்களையும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
எக்ஸ்பைரி டேட்: ஒவ்வொரு பாலிசிக்கும் குறிப்பிட்ட எக்ஸ்பைரி டேட் இருக்கும். பொதுவாக ஒரு வருட கால அவகாசத்தை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. உங்களுடைய பாலிசி எஸ்பியரி ஆகிவிட்டால்.. அவை பயனற்று போய்விடும். எனவே எக்ஸ்பைரி தேதிக்கு முன்பே மீண்டும் புதுப்பித்து வைத்துக் கொள்வது அவசியம்.
ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் பாலிசியும் க்ளெய்ம் இன்டிமேஷனுக்கான ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவைக் கொண்டுள்ளது. இந்தக் காலக்கெடு தவறினால் காப்பீட்டாளரின் கோரிக்கை மறுக்கப்படலாம்.
முழுமையற்ற கோரிக்கை: உங்களுடைய அனைத்து தகவல்களையும் துல்லியமாக பூர்த்தி செய்ய வேண்டும். ஏதேனும் தகவல்களை படிவங்களில் விட்டிருந்தாலோ அல்லது பொய்யாக பூர்த்தி செய்திருந்தாலோ உங்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்படலாம்.
பாலிசி பெறும்போது நோய்களை மறைத்தல்: பாலிசியை வாங்கும்போதே உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் நோய்களை தெளிவாக குறிப்பிட வேண்டும். ஏற்கனவே இருக்கும் நோய்களை மறைத்து பாலிசி வாங்குபவர்களின் கிளைம் கோரிக்கையும் நிராகரிக்கப்படலாம்.
மேலே கூறப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தும் இன்சூரன்ஸ் கிளைம் கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான பொதுவான காரணங்களாகும். எனவே பாலிசி பெறும்போது அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டு அதன் பின் பாலிசி வாங்குவது தக்க நேரத்தில் உங்களுக்கு பலன் தரும்.


Click it and Unblock the Notifications