இன்றெல்லாம் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பலரும் தங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்துக் கொண்டு செலவு செய்கின்றனர். அவசரத் தேவைகளுக்கு கிரெடிட் கார்டு வசதியான ஒன்றாக இருந்தாலும், அதை பயன்படுத்துபவர்கள் செய்யும் சில தவறுகளால் பெரும் நிதி இழப்பு கூட ஏற்படலாம். இன்றளவும் பல கிரெடிட் கார்டு பயனர்கள் தாங்கள் செய்யும் சிறு தவறுகளால் பெரிய அளவிலான பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இன்று நாம் அப்படிப்பட்ட 5 தவறுகள் மற்றும் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது? என்பது குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.
குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவது: பல பயனர்கள் தங்கள் கிரெடிட் கார்டு பில்லில் குறைந்தபட்ச தொகையை மட்டுமே செலுத்தி வருகின்றனர். இந்த தவறு அவர்களுக்கு மிகப்பெரிய செலவைப் பிற்காலத்தில் ஏற்படுத்தலாம். குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்தி வந்தால் நிலுவை தொகைக்கு மாதா மாதம் வட்டி வசூலிக்கப்படும். இந்த வட்டியானது 2.5% முதல் 3.5% வரையில் இருக்கலாம். அப்படியானால் 1 ஆண்டுக்கு 30 முதல் 40 சதவீதம் வரை செலவு செய்ய வேண்டி வரும். இதுபோன்ற சூழ்நிலையைத் தவிர்க்க நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் முழுமையாகச் செலுத்த முயற்சி செய்யுங்கள்.

கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பது: பல பயனர்கள் ஏடிஎம்-இல் இருந்து கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கின்றனர். ஏடிஎம் கார்டைத் தவிர பிற கார்டுகளில் இருந்து பணம் எடுத்தால் 2.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். அதோடு நீங்கள் வட்டியில்லா காலத்தில் இருந்தாலும் எப்போது பணம் எடுக்கத் தொடங்கினீர்களோ? அன்றைய நாளிலிருந்து வட்டி விதிக்கப்படும். இது போன்ற சூழ்நிலையைத் தவிர்க்க பணம் எடுக்கும் போது டெபிட் கார்டை மட்டும் பயன்படுத்துங்கள்.
கடன் வரம்பை மீறி பயன்படுத்துதல்: உங்கள் கடன் வரம்பை முழுமையாக பயன்படுத்தினால் அது கிரெடிட் ஸ்கோரை குறைக்கக் கூடும். அதோடு கிரெடிட் கார்டு பயன்பாட்டு விகிதத்தையும் அதிகரிக்கும். எனவே உங்கள் கடன் வரம்பில் குறைந்தது 30 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்த முயற்சி செய்யவும்.
தேவையற்ற ஷாப்பிங்கைத் தவிர்க்கவும்: பல கிரெடிட் கார்டு பயனர்கள் தேவையற்ற ஷாப்பிங் செய்கின்றனர். இதனால் அவர்களின் பில் அதிகரிப்பதோடு வட்டி சுமையும் அதிகரிக்கிறது. இத்தகைய சூழ்நிலையை தவிர்க்க ஒரு பட்ஜெட்டை உருவாக்கி, கிரெடிட் கார்டு மூலம் தேவை உள்ள பொருட்களை மட்டுமே வாங்க முயற்சி செய்யுங்கள்.
பில் செலுத்துவதில் தாமதம்: பில்லை சரியான நேரத்தில் செலுத்துங்கள். பில்லை தாமதமாக செலுத்தும் பழக்கம் உங்களிடம் இருந்தால் தாமதக் கட்டணம், அதிக வட்டி மற்றும் கிரெடிட் ஸ்கோரில் தாக்கம் போன்ற பல விஷயங்களுக்கு நீங்கள் பலியாகலாம். அத்தகைய சூழ்நிலையை சரி செய்ய சரியான நேரத்தில் பில் செலுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் ஆட்டோமேட்டிக் பேமெண்ட் அமைக்கலாம் அல்லது ரிமைண்டர்களை ஆன் செய்து வைக்கலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications