சிலர் குறைந்த அளவிலேயே சம்பளம் பெற்று தங்கள் பேங்கில் சிறுக சிறுக சேமித்துக் கொண்டே இருப்பார்கள். அதே சமயம் சிலர் நன்றாக சம்பாதித்தாலும் சேமிப்பதற்கு போராடிக் கொண்டிருப்பார்கள். உங்கள் நிதி நிர்வாகம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் உங்களின் சேமிப்பு பழக்க வழக்கங்கள் அமையும். சிறிய நிலையான சேமிப்புகள் கூட சரியான திட்டமிடல் இருந்தால், அதிக சேமிப்புக்கு வழிவகுக்கும். இந்த பதிவில் மாத சம்பளம் பெறுபவர்கள் தங்கள் சேமிப்பை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
சேமிப்பு: சம்பாதித்த அனைத்தையும் செலவழிக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. கடினமான காலங்களில் சேமிப்பு நம்பகமான துணையாக இருக்கும். ஆனால் அதற்கு எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது. உங்கள் வருமானத்தில் குறைந்ததை 20 சதவீதம் ஆவது மாதம் மாதம் சேமிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது உங்கள் சேமிப்பும் அதிகரிக்க வேண்டும். மேலும் காலப்போக்கில் இந்த ஒழுக்கமான அணுகுமுறையை கடைபிடித்தால் குறிப்பிடத்தக்க தொகையை சேமிக்க முடியும்.

உங்கள் சேமிப்பை அதிகரிக்க முதலீடு செய்யுங்கள்: சேமிப்பது மட்டும் போதாது. உங்கள் செல்வத்தை பெருக்க வைக்க முதலீடு செய்ய வேண்டும். இதற்கு பல முதலீட்டு விருப்பங்கள் உள்ளன. நீங்கள் தொடர்ந்து உங்கள் வருமானத்தை 20 சதவீதம் சேமித்து முதலீடு செய்தால் எதிர்காலத்தில் உங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும். ஆனால் அதற்கு கிடைக்கப் போகும் வருமானம் நீங்கள் எங்கு முதலீடு செய்கிறீர்கள் என்பதை பொறுத்தது. SIP முதலீட்டு திட்டங்கள், பொது வருங்கால வைப்பு நிதி, பிக்சட் டெபாசிட்கள் போன்ற விருப்பங்களை கவனியுங்கள், ஆனால் அதற்கு முன்பு உங்களுடைய நிதி ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. இதன் மூலம் சரியான முதலீட்டு தேர்வுகளை எடுக்க முடியும்.
நிலையான வேலை முக்கியம்: அதிக சம்பளம் உள்ள வேலையை தேடுவது இயல்பான ஒன்றுதான். ஆனால் அடிக்கடி வேலையில் மாற்றங்கள் செய்வது, உங்கள் தொழில் வாழ்க்கையை பாதிக்கக்கூடும். ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு மாறுவது குறித்து யோசிக்கும் போது சம்பளம் மட்டுமல்லாமல் வேலை பார்க்கும் இடம், உங்களுடைய ரோல், வரிவிதிப்புகள் போன்ற பிற அம்சங்களையும் கருத்தில் கொள்வது முக்கியம். வேலைகளை மாற்றுவது பற்றி எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பு இந்த காரணிகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
கிரெடிட் கார்டுகளை திறம்பட பயன்படுத்துதல்: கிரெடிட் கார்டுகள் எளிதாக கிடைப்பதன் காரணமாக தேவையானதை விட அதிகமாக சிலர் செலவழித்து விடுகின்றனர். இது கடன்களுக்கு வழிவகுக்கும். கிரெடிட் கார்டுகளைப் பொறுப்புடன் பயன்படுத்தவும். உண்மையிலேயே தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்தவும். இன்று பலவகையான கிரெடிட் கார்டுகள் கிடைக்கின்றன. அவசியமானபோது மட்டுமே கிரெடிட் கார்டு கடன்களை வாங்க வேண்டும்.
சரியான நேரத்தில் வரி செலுத்துங்கள்: உங்கள் வருமான வரி கணக்கை சரியான நேரத்தில் தாக்கல் செய்வது முக்கியம். இதை தாமதப்படுத்துவதால் அபராதம் விதிக்கப்படலாம் இது உங்கள் சேமிப்பை பாதிக்கலாம். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் உங்கள் வரிகளை தாக்கல் செய்வதற்கு முன்னுரிமை கொடுங்கள்.
மேற்கண்ட இந்த 5 டிப்ஸ்களைப் பின்பற்றுவதன் மூலம் சேமிப்பு, முதலீடு, வேலையில் நிலைத்தன்மை, கடனை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது போன்றவற்றை சரியான முறையில் செய்யலாம்
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications