நீண்ட காலத்திற்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாதம் மாதம் உங்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும். உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை தவறாமல் சேமிப்பது அவசர காலங்களில் உதவுவது மட்டுமின்றி தேவையற்ற கடன் பிரச்சனைகள் வராமலும் தடுக்கும். இதன் மூலம் உங்களுடைய எதிர்கால இலக்குகளான வீடு வாங்குவது அல்லது ஓய்வு காலங்களில் வசதியாக வாழ்வது என பலவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பலருக்கும் தங்களுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனாலும் அவற்றுக்கு இணங்க செயல்பட முடியாது. இந்தப் பதிவில் உங்களுடைய மாத வருமானத்தில் பணம் சேமிக்க 5 டிப்ஸ்களை பார்ப்போம்.
சில சம்பளக்காரர்களுக்கு அந்த மாதத்தின் 30-ஆம் தேதிக்குள் வாங்கிய சம்பளம் முழுவதுமாக காலி ஆகிவிடும். இது போன்ற நபர்களுக்கும் கீழ்காணும் டிப்ஸ் உதவியாக இருக்கும்.

ஆன்லைன் ஷாப்பிங்கைத் தவிர்க்கவும்: மாதம் மாதம் ஷாப்பிங் செய்பவராக இருந்தால் அவற்றைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். அதையும் மீறி சிலர் எதற்காக வாங்கினோம் என்றே தெரியாமல் சில பொருட்களை வாங்கி விடுவார்கள். வீட்டை சுற்றி பார்த்தால் அப்படி பலர் வீட்டில் பல பொருட்கள் தென்படும்.
அதிலும் சிலர் "Impulsive Shopping" என்று சொல்லப்படுகிற எந்த வித திட்டமிடலும் இல்லாமல் உணர்ச்சியின் அடிப்படையில் திடீரென ஏதாவது பொருளை வாங்கி விடுவார்கள். இது பலருக்கும் இருக்கும் பொதுவான விஷயம்தான். எனவே இது போன்ற பழக்கம் உள்ளவர்கள் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்ற திட்டமிட்டு விட்டால் சற்று நேரம் எடுத்துக்கொண்டு யோசித்து அதன் பிறகு முடிவெடுங்கள். ஒரு வேலை அவை உணர்ச்சியின் அடிப்படையில் தோன்றியிருந்தால் சிறிது நேரம் கழித்து அவற்றை வாங்க வேண்டாம் என்று உங்களுக்கே தோன்றிவிடும்.
உணவு செலவுகளை குறைக்கலாம்: வெளியில் சாப்பிடுவதை விட வீட்டில் சமைக்கும் உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்குங்கள். இது உங்கள் பணத்திற்கு மட்டுமின்றி உடலுக்கும் நன்மை பயக்கும்.
உங்கள் செலவுகளை கண்காணிக்கவும்: உங்களுடைய மாத வருமானம் மற்றும் செலவுகளை கண்காணிக்க பட்ஜெட்டை உருவாக்குங்கள். பட்ஜெட் என்பது எவ்வளவு தொகை செலவாகிறது? எவ்வளவு வருமானம் வந்துள்ளது? என்பதை பற்றிய விவரங்களே. இதை நீங்கள் ஒரு பேப்பரில் கூட எழுதி வைக்கலாம். அதன்பின் அவற்றை எடுத்துப் பார்க்கும்போது அதில் நீங்கள் செய்த செலவில் எது உங்களுக்கே தேவையற்றது என்று தோன்றுகிறதோ? அதை மறுமுறை செய்யாமல் இருக்கலாம்.
மளிகை சாமான் வாங்க லிஸ்ட்டை உருவாக்குங்கள்: ஒரு ஆய்வில் எந்தவித லிஸ்டும் இல்லாமல் மளிகை சாமான் வாங்க போகும்போது தேவையற்ற சில சாமான்களையும் சேர்த்து வாங்கி விடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே லிஸ்ட் எடுத்துக்கொண்டு செல்லும்போது அவற்றில் எந்த பொருட்கள் உண்மையில் தேவை என்பதை தெரிந்து கொண்டு ஷாப்பிங் செய்யலாம். மேலும் அவ்வப்போது சூப்பர் மார்க்கெட்களில் சலுகைகளை வழங்குகின்றனர். எனவே இது போன்ற சலுகைகளை பயன்படுத்தும் போது குறைந்த விலையில் மளிகை சாமான்களை வாங்கிக் கொள்ள முடியும்.
மாத சந்தாக்களை நீக்குங்கள்: சிலர் hotstar, netflix போன்றவற்றிற்கு சந்தாக்களை பெற்றிருப்பார். இதனால் ஆட்டோமேட்டிக் பே ஆப்ஷனை ஆன் செய்யப்பட்டிருக்கும். இதன் மூலம் மாதம் நீங்கள் பார்த்தாலும் அல்லது பார்க்கவில்லை என்றாலும் ஆட்டோமேட்டிக்காக பணம் உங்கள் அக்கவுண்டில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும். எனவே தேவையற்ற சந்தாக்களை பார்க்கவில்லை என்றால் நீக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications