இளம் முதலீட்டாளர்களே.. முதலீடு செய்வதற்கு முன் இதை செய்யுங்க.. அப்பறம் என்ன கண்டிப்பா லாபம் தான்!

சென்னை: உடல்நலம் மற்றும் கல்வியை போலவே முதலீடும் ஒரு முக்கியமான துணையாகும். இது ஒருவரின் நிதி எதிர்காலத்தை வடிவமைப்பதில், முக்கிய பங்கு வகிக்கிறது. பாண்டமிக் காலத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் இளம் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டில் மொத்தம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் நான்கில் ஒரு பங்கு 25 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் முதலீடு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இது போன்ற இளம் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு முன்பு கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைத் தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

அதிக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இளம் முதலீட்டாளர்கள் பலர் பெரும்பாலும் இன்றாடே ட்ரேடிங், பொசிஷனல் டிரேடிங் மற்றும் கிரிப்டோக்கரன்சி போன்ற குறுகிய கால விருப்பங்களைத் தேர்வு செய்கிறார்கள். உலகளாவிய ஆராய்ச்சி அறிக்கையின் படி 54 சதவீதம் இதுபோன்ற இளம் முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது. இளம் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 இளம் முதலீட்டாளர்களே.. முதலீடு செய்வதற்கு முன் இதை செய்யுங்க.. அப்பறம் என்ன கண்டிப்பா லாபம் தான்!

பிளானிங்: எதை செய்தாலும் பிளான் பண்ணி பண்ணனும் என்ற வடிவேலு வசனத்திற்கு ஏற்ப உங்களுடைய வாழ்க்கையின் இலக்குகளை புரிந்து கொண்டு அதன் பிறகு உங்களுடைய முதலீட்டு திட்டங்களைப் பற்றிய பிளானை உருவாக்குங்கள். உங்கள் நிதி இலக்கை புரிந்து கொண்டு முதலீடு செய்யும்போது எளிதில் நீங்கள் நினைக்கும் விஷயத்தை அடைவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம்.

சான்றாக, உங்களுடைய வருமானம், நிகர மதிப்பு, கடன் தவணைகள் அவசர காலத்திற்கு தேவைப்படும் பணம் போன்ற கட்டாயக் கடமைகள் மற்றும் நீங்கள் முதலீடு செய்ய இருக்கும் திட்டத்தின் ஆபத்து அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரு பிளானை உருவாக்குங்கள். இதன் மூலம் முதலீடு செய்வதற்கு முன்பே உங்களால் சில விஷயங்களை புரிந்து கொள்ள முடியும்.

பல்வேறு திட்டங்களை ஆராய்தல்: ரிஸ்க் எடுக்கலாம் ஆனால் அதீத ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்கவும். குறைந்த ஆபத்துள்ள திட்டங்களை ஒப்பீடு செய்து, அவற்றில் முதலீடு செய்யுங்கள். அதேபோல உங்களுடைய முதலீடுகளை பலவிதமான திட்டங்களில் பரவலாக்குங்கள். பங்குச்சந்தைகள், நிலம், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள். இது உங்கள் முதலீடுகளை பாதுகாக்கும். மேலும் பல்வேறு வழிகளில் இருந்து லாபத்தை பெறுவதற்கு உதவியாக இருக்கும். ஒரே இடத்தில் நீங்கள் செய்யும் முதலீடு, சில நேரங்களில் ஆபத்தானதாக இருக்கும் பட்சத்தில் உங்களுடைய வருமானத்தை பாதிக்கலாம். இதுபோல பல்வகைப்படுத்தும் போது ஒரு திட்டம் சரிவர இயங்கவில்லை என்றாலும் இன்னொன்றின் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.

சந்தையின் சுழற்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள்: பங்குச்சந்தைகள் மேலே போவதும், கீழே இறங்குவதும் இயல்பான ஒன்றுதான். நீங்கள் முதலீடு செய்யும் சந்தையின் சுழற்சிகளை புரிந்து கொண்டு அமைதியாக காத்திருங்கள். உங்களுடைய நெருக்கடி காலங்களில் பங்குகளை விற்காமல் கட்டுப்படுத்தி வைத்திருங்கள். சந்தையின் வளர்ச்சியை நம்புங்கள். நீண்ட காலத்திற்கு அது உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.

உங்களுடைய கற்றல் தொடரட்டும்: முதலீடு என்பது ஒரு கலை. ஒரு நாள் அல்லது ஒரு மாதத்தில் கற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் பற்றிய ஆராயுங்கள். நிபுணர்களின் கருத்துக்களை கேளுங்கள். பங்குச்சந்தை மற்றும் பொருளாதாரத்தை பற்றிய புத்தகங்களை படியுங்கள். இது தொடர்பான செமினார்களிலும் கலந்து கொள்ளலாம். இதுவும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

முதலீடு செய்வதற்கு முன்பு தெரிந்து கொள்ளுங்கள்: நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய இருக்கிறீர்கள் என்றால் அந்த ஃபண்ட் ஹவுஸ்-இன் நற்பெயர் பற்றியும் அதன் பெர்பார்மன்ஸ் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமே போதுமா? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. ஆனால் ஃபண்டின் கடந்த கால பெர்பார்மன்ஸ், நீங்கள் முதலீடு செய்த பிறகு அதே வருமானத்தைப் பெற்றுத் தரும் என்று கூறிவிட முடியாது. இருந்தாலும் அதைப்பற்றி தெரிந்து கொள்வது நிலையான முடிவுகளை எடுப்பதற்கு உங்களுக்கு உதவும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+