கிரெடிட் கார்டுகளை இப்படி யூஸ் பண்ணா இதைவிட பெஸ்ட் எதுவுமே இல்லை.. சூப்பரான 5 டிப்ஸ்!

கிரெடிட் கார்டு பயன்பாட்டை சுவாரசியமாக்குவதே அவற்றுக்கு வழங்கப்படும் ரிவார்டுகள் கேஷ் பேக் போன்றவை தான். இந்தியாவில் வழங்கப்படும் பெரும்பாலான கிரெடிட் கார்டுகளுக்கு கேஷ் பேக் வழங்கப்படுகிறது. புதிதாக கிரெடிட் கார்டு வாங்கியவர்கள் ஆனாலும் சரி.. ஏற்கனவே கிரெடிட் கார்டு பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் ஆனாலும் சரி.. எப்படி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி அதிக சலுகைகளை பெற முடியும்? என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

கிரெடிட் கார்டு ரிவார்டுகள் எப்படி கிடைக்கிறது?: ஒவ்வொரு முறையும் நீங்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பொருட்களை வாங்கும் போது அல்லது நீங்கள் செலவழித்த தொகையின் அடிப்படையில் ரிவார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்தியாவில் பல கிரெடிட் கார்டுகள் டிராவல், உணவு மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் போன்ற குறிப்பிட்ட செலவினங்களை நீங்கள் கிரெடிட் கார்டை வைத்து செய்யும் போது ரிவார்டுகளை வழங்குகின்றன.

கிரெடிட் கார்டுகளை இப்படி யூஸ் பண்ணா இதைவிட பெஸ்ட் எதுவுமே இல்லை.. சூப்பரான 5 டிப்ஸ்!

ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி நீங்கள் எவ்வளவு பொருட்களை வாங்குகிறீர்களோ? அந்த அளவுக்கு ரிவார்டுகளை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. மேலும் ஒரு கார்டுதாரரால் சேகரிக்கப்படும் இந்த ரிவார்டுகள் எதிர்காலத்தில் டிராவல் மற்றும் கிப்ட் கார்டுகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படலாம்.

கிரெடிட் கார்டு ரிவார்டுகளின் வகைகள் எத்தனை?: முக்கியமாக 3 வகையான கிரெடிட் கார்டு ரிவார்டுகள் கிடைக்கின்றன. அவை டிராவல் ரிவார்ட்ஸ், கேஷ் பேக் ரிவார்ட்ஸ், மற்றும் பாயிண்ட் ரிவார்ட்ஸ்.

டிராவல் ரிவார்ட்ஸ்: டிராவல் ரிவார்டுகள் பொதுவாக வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களால் கிரெடிட் கார்டு மூலம் ஒவ்வொரு முறையும் பயணம் செய்வதற்காக செலவு செய்யும்போது கிடைக்கின்றன. உலகெங்கிலும் உள்ள எந்த பெரிய விமான நிறுவனம் அல்லது ஹோட்டல் அறைகள் முன்பதிவு செய்வதற்கு இந்த ரிவார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கேஷ்பேக் ரிவார்ட்ஸ்: கேஷ் பேக் ரிவார்ட்ஸ் ஒவ்வொரு முறையும் நீங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி பர்சேஸ் செய்யும்போது வழங்கப்படுகிறது. மேலே கூறப்பட்டுள்ளது போல் ரிவார்டு புள்ளிகளை பிற விஷயங்களுக்காக பயன்படுத்தும் வசதி அல்லாமல் நேரடியாக இவை தொகையாகவே உங்களுடைய அக்கவுண்டில் வந்து சேரும்.

பாயிண்ட் ரிவார்ட்ஸ்: பாயிண்ட் ரிவார்ட்ஸ் என்பது ஒவ்வொரு ரூபாய் செலவு செய்வதற்கும் பாயிண்ட்களை வழங்குகின்றன. அதன் பிறகு இந்த பாயிண்டுகளை வைத்து விமான டிக்கெட் முன்பதிவு மற்றும் பிற கிப்ட் கார்டுகளை பெறுவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் கிரெடிட் கார்டு ரிவார்டுகளை எவ்வாறு அதிகரிக்கலாம்?: உங்கள் கிரெடிட் கார்டு ரிவார்டுகளை அதிகரிக்க கீழ்காணும் டிப்ஸ்களை நீங்கள் பின்பற்றலாம்.

சரியான கிரெடிட் கார்டைத் தேர்வு செய்தல்: உங்களுடைய செலவு பழக்கம், தேவைகள் மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றைப் பொறுத்து அதற்கு பொருத்தமான கார்டைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். ரிவார்டுகளின் மூலம் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம் மற்றும் எந்த வகையான ரிவார்டுகளை பெறலாம் என்பதை தீர்மானிக்க இது உதவுகிறது.

உதாரணமாக ஒரு கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் அதிகமாக பயணம் செய்பவர் என்றால் அவர் அதிகமாக டிராவல் ரிவார்டுகளை வழங்கும் கிரெடிட் கார்டைத் தேர்வு செய்யலாம். இது அவர்களுக்கு வெகுவாக பயனளிக்கும்.

ரிவார்ட் பெறுவதற்காக பணத்தை செலவு செய்யாதீர்கள்: ரிவார்ட்களை பெறுவதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அவற்றை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது தான். ரிவார்ட் பெறுவதற்காகவே செலவுகள் செய்யக்கூடாது. மளிகை பொருட்கள், பயன்பாட்டு கட்டணங்கள், டிராவல், ஷாப்பிங் போன்ற பல்வேறு வகைகளில் நீங்கள் எவ்வளவு பணம் செலவு செய்கிறீர்கள்? என்பதையும் கருத்தில் கொள்ளவும். ஏனெனில் செலவு செய்யும் தொகையை நீங்கள் தான் வட்டியுடன் சேர்த்து திரும்பச் செலுத்த வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

சலுகைகளை ஆராயுங்கள்: உங்களிடம் பல்வேறு கிரெடிட் கார்டுகள் இருந்தால் ஒவ்வொன்றின் பலன்களையும் எவ்வாறு அதிகரிப்பது? என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வங்கிகள் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு தள்ளுபடிகளை வழங்குகின்றன. குறிப்பாக பண்டிகை நாட்களில் இவை இன்னும் அதிகரிக்கலாம். எனவே இது போன்ற சலுகைகளை ஆராயுங்கள். இதனால் உங்களுடைய கிரெடிட் கார்டுகளை திறம்பட உபயோகிக்க முடியும்.

EMI-களை தவறாமல் செலுத்துங்கள்: கார்டுதாரர்கள் தங்கள் கிரெடிட் கார்டில் ரிவார்டுகளை அதிகரிக்க விரும்பினால், EMI-களை தவறாமல் செலுத்துவது அவசியம். ஒவ்வொரு மாதமும் முழு நிலுவைத் தொகையை செலுத்துவது அவசியம், இதனால் வட்டி குறையும்.

கிரெடிட் கார்டு ரிவார்ட் திட்டங்களை கண்காணித்தல்: கிரெடிட் கார்டு வழங்குநர்கள் சில ரிவார்ட் திட்டங்களை வழங்குகின்றன. மேலும் கிரெடிட் கார்டு வழங்குனர்கள் இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மாற்றி அமைத்துக் கொள்ளும். அதற்கு அவர்களின் இணையதளத்தை தவறாமல் பார்வையிடுவது உதவிகரமானதாக இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+