ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது உற்சாகமானதாகவும்.. அதே நேரத்தில் சவாலானதாகவும் இருக்கும் ஒரு விஷயம். ஏனெனில் முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் சில நேரங்களில் தவறான இடங்களை தேர்வு செய்து வாங்கிவிடலாம். இதன் காரணமாக தான் நீங்கள் வாங்க இருக்கும் நிலம் அல்லது வீட்டைப்பற்றி முழுவதுமாக தெரிந்து கொண்டு இறங்க வேண்டும். நிலத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.
இடம்: நிலத்தில் முதலீடு செய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கூறுகளில் ஒன்று இடம். எந்த சொத்திலும் முதலீடு செய்வதற்கு முன், அது அமைந்துள்ள பகுதியை முழுமையாக ஆராயுங்கள். பள்ளிகள் மற்றும் ஷாப்பிங் மையங்கள் போன்ற வசதிகளுக்கு அருகாமையில் உள்ள பகுதி, குடியேறத் தேவையான சூழல் போன்ற அம்சங்களைக் கருத்தில் கொள்ளுங்கள். 2023-ஆம் ஆண்டின் 4-வது காலாண்டில், அகில இந்திய வீட்டு விலைக் குறியீடு அதன் முந்தைய ஆண்டை விட 3.81% அதிகரித்துள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பட்ஜெட்டை தீர்மானியுங்கள்: இந்தியாவில் ரியல் எஸ்டேட் சந்தை ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு மாறுபடும். எனவே வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள விலையை ஒப்பிட்டுப் பார்த்து உங்களுக்கு ஏற்ற விலையில் சொத்தை தேர்வு செய்யலாம். ஆனால் இன்னொரு முக்கியமான விஷயம் விலை மலிவாக இருக்கிறது என்பதற்காக எந்த பிரயோஜனமும் இல்லாத இடத்தை வாங்குவது உங்களுக்கு லாபகரமானதாக இருக்காது.
வணிக சொத்து: சிலர் தங்களுக்கு பிற சொத்துக்கள் அல்லது வீடு இருப்பதன் காரணமாக வாடகை வருமானம் பெற வேண்டி சில சொத்துக்களில் முதலீடு செய்யலாம். அப்படி வாங்கும் நபர் எனில் கண்டிப்பாக வாடகைதாரர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும். உதாரணமாக பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய தேவைகள் இருக்கும் இடத்தை தேர்வு செய்வதன் மூலம் நீங்கள் வாங்கும் சொத்துக்கு கணிசமான லாபத்தைப் பெற முடியும்.
சொத்தை விற்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்: எப்படி ஒரு இடத்தை வாங்கும் போது அது இருக்கும் இடம் மற்றும் பிற வசதிகளை கருத்தில் கொண்டு முதலீடு செய்ய வேண்டுமோ? அதேபோல ஒரு சொத்தை விற்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு ரியல் எஸ்டேட் சொத்தை வாங்கி குறிப்பிட்ட காலத்திற்கு வைத்திருந்து விட்டு தேவைப்பட்டால் விற்க நினைத்தால் எந்தவித இடையூறும் இல்லாமல் விற்கும் அளவுக்கு இருக்க வேண்டும்.
ஆவணங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்யுங்கள்: தற்போது மோசடிக்காரர்களின் அதிகரிப்பு சர்வ சாதாரணமாகிவிட்டது. யாரோ ஒருவருடைய சொத்தை தங்களுடையது போல காண்பித்துக் கொண்டு ஏமாற்றி விற்றுவிடும் கதையும் நடந்து வருகிறது. எனவே எந்த ஒரு சொத்தையும் வாங்குவதற்கு முன்பு அனைத்து ஆவணங்களும் சரியானதாக இருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை எனும் பட்சத்தில் அவற்றில் முதலீடு செய்வதற்கு பதிலாக வேறு இடத்தை பார்ப்பதே சிறந்தது.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications