முதலீடு செய்யும்போது இந்த 5 தவறை செய்யுறீங்களா.. இது உங்களுக்கு தான் பிரச்சனை!

பலருக்கும் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அதனை எதில் செய்வது? அப்படி செய்யும்போது எது மாதிரியான விஷயங்களை கவனிக்க வேண்டும். தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

பொதுவாக கொரோனாவின் வருகைக்கு பிறகு முதலீடு செய்வது என்பது கணிசமாக அதிகரித்துள்ளது.

எனினும் இன்றும் நம்மில் பலரும் செய்யும் சில தவிர்க்க வேண்டிய தவறுகளில் இதுவும் அடங்கும் எனலாம்.

முதலீடுகளை பிரித்து செய்யாமல் இருப்பது?

முதலீடுகளை பிரித்து செய்யாமல் இருப்பது?

இன்றைய காலகட்டத்தில் பல வகையான முதலீட்டு திட்டங்கள் என்பது இருந்தாலும், பலரும் ஒரு சில திட்டங்களை மட்டுமே சார்ந்திருப்பது. பங்கு சந்தை, பத்திரங்கள், ரியல் எஸ்டேட் என பல வகையான திட்டங்கள் இருந்தாலும், இவற்றில் அனைத்திலும் முதலீடு செய்வதில்லை. உதாரணத்திற்கு பங்கு சந்தை என்றால் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்வார்கள். குறிப்பாக ஒரே துறை சார்ந்த பங்குகள். ஒரே பங்கில் முதலீடினை குவிப்பார்கள். அப்படி செய்யும்பட்சத்தில் அது லாபம் கிடைத்தாலும் பெரியளவில் லாபம் கிடைக்கும். நஷ்டம் கொடுத்தாலும் அது பெரியளவில் இருக்கும்.

நேரத்தை கணக்கிடுதல்

நேரத்தை கணக்கிடுதல்

சந்தையின் ஏற்ற இறக்கத்தினை கணிக்க முயல்வது முட்டாள்தனமான செயல். ஆக முதலீட்டாளர்கள் நீண்டகால நோக்கில் திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும். இது நீண்டகாலத்திற்கு பிறகு மிகப்பெரிய கார்ப்பஸ் ஆக உருவெடுக்கலாம். அதனை விடுத்து மீடியம் டெர்மில் யோசித்தால் அது கடினமானதாக இருக்கும்.

சமீபத்திய போக்கை பின் தொடர்வது

சமீபத்திய போக்கை பின் தொடர்வது

ஒரு முதலீட்டு திட்டம் குறுகிய காலத்தில் மிக லாபகரமானதாகவும், பல தரப்பினரும் அதனை பற்றி பேசும்போது, அது தான் நமக்கும் ஏற்றது என நாம் தொடருவது. இது பெரும் பிரச்சனையாக கூட மாறலாம். ஆக இதனையும் தவிர்ப்பது அவசியமானது ஆகும். அதேபோல புதியதாக ஒரு திட்டம் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகின்றது எனில் அதனை உடனடியாக முதலீடு செய்யாமல், அதனை ஆய்வு செய்து பிறகு முதலீடு செய்யுங்கள்.

திட்டம் இல்லையா?

திட்டம் இல்லையா?

உங்களது முதலீடு குறித்து தெளிவான திட்டம் வகுத்துக் கொள்ளுங்கள். தெளிவான திட்டம் இல்லை எனில் அதனை தவிர்த்து விடுங்கள். தெளிவில்லாத சமயத்தில் முதலீடு செய்வது என்பது உங்களுக்கு நஷ்டத்தினை ஏற்படுத்தலாம். ஆக முதலீடு செய்வதற்கு முன்பு சரியான திட்டமிடல் என்பது மிக அவசியம். அந்த இலக்குகளை அடைவது என்பது மிக அவசியமான ஒன்று.

கட்டணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

கட்டணங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

பெரும்பாலானவர்களும் செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று. உங்களது முதலீடுகள் என்பது லாபம் கொடுத்தாலும், அதிக கட்டணங்கள் விதிக்கப்படும்போது அதனால் பயனில்லாமல் போகலாம். ஆக முதலீடு செய்வதற்கு முன்பு நுழையும் கட்டணம் எவ்வளவு? வெளியேறும் கட்டணம் எவ்வளவு? மறைமுக கட்டணங்கள் எவ்வளவு? என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு முதலீடு செய்தால், லாபத்தின் பலனை அடைய முடியும்.

மற்றவர்கள் பேச்சை கேட்காதீர்கள்?

மற்றவர்கள் பேச்சை கேட்காதீர்கள்?

பொதுவாக முதலீடு செய்யும்போது பலரும் மற்றவர்களை பார்த்து முதலீடு செய்வதோ? மற்றவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளாமல், முடிந்த அளவுக்கு ஆய்வு செய்து முதலீடு செய் வேண்டும். அப்படியே தெரியாவிட்டாலும், சரியான நிபுணர்களின் ஆலோசனையை பின்பற்றி செய்ய வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+