கார் வாங்கும் போது சிலர் கேஷ் பேமெண்ட் செய்து வாங்குவார்கள். சிலர் கிரெடிட் கார்டுகளை வைத்து வாங்குவார்கள். அப்படி கிரெடிட் கார்டுகளை வைத்து வாங்குவோர் சிலர் ரிவார்டு பாயிண்டுகளுக்காக முழு தொகையையும் அதன் மூலமே செலுத்தலாம் என்று எண்ணுவர். அப்படி கிரெடிட் கார்டுகளை வைத்து பணம் செலுத்தும் போது அவற்றில் உள்ள நன்மை, தீமைகளை கவனமாக கருத்தில் கொள்வது முக்கியம். இந்த பதிவில் கிரெடிட் கார்டை வைத்து முழு தொகையையும் செலுத்தி கார் வாங்கலாமா? அப்படி வாங்கினால் என்னென்ன விஷயங்களை பரிசீலிக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
100 சதவீதம் கிரெடிட் கார்டை வைத்து கார் வாங்க முடியுமா?: முழுக் காரையும் வாங்கும் யோசனை சிறப்பானதாக சிலருக்கு தோன்றலாம். ஆனால் உண்மையில் அப்படி இல்லை.

கிரெடிட் கார்டு மூலம் முன்பதிவு: கிட்டத்தட்ட அனைத்து கார் டீலர்களும் முன்பதிவு தொகையை செலுத்துவதற்கு கிரெடிட் கார்டுகளை ஏற்றுக் கொள்கின்றன. பொதுவாக காரின் மதிப்பில் 5 முதல் 10 சதவீதம் வரை முன்பதிவின்போது செலுத்த வேண்டும். உதாரணமாக நீங்கள் ரூ.10 லட்சம் மதிப்புள்ள காரை வாங்குகிறீர்கள்.. என்று வைத்துக் கொள்வோம். இதற்கு முன்பதிவு தொகையாக ரூ. 50,000 முதல் ரூ.1 லட்சம் வரை செலுத்தலாம். வோல்க்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா போன்ற டீலர்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் ரூ. 3 லட்சம் வரை பரிவர்த்தனைகளை ஏற்றுக் கொள்கின்றன.
ஆனால் சில சந்தர்ப்பங்களில் குறிப்பாக பிரீமியம் வாகனங்களுக்கு இந்த தொகை ரூ.3 முதல் ரூ.5 லட்சம் வரை இருக்கக்கூடும். மீதி கட்டணம் செலுத்த கிரெடிட் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை நினைவில் கொள்ளவும். காரின் விலையில் மீதமுள்ள நிலுவைத் தொகையை செலுத்தும் போது பெரும்பாலான டீலர்கள் கிரெடிட் கார்டு மூலம் கட்டணத்தை ஏற்க மாட்டார்கள்.
வரி: டீலர்ஷிப்கள் வசூலிக்கப்படும் தொகையில் 1.75% பரிவர்த்தனை கட்டணமாக செலுத்த வேண்டும். இது அவர்களின் லாப வரம்பை பாதிக்கலாம். அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்ற கார்டுகளை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும்போது வரியுடன் சேர்த்து 2.5% வரை கட்டணம் வசூலிக்கப்படலாம். இது கார் டீலர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்.
வேறு ஆப்ஷன்கள் என்னென்ன?: உங்கள் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்த திட்டமிட்டிருந்தால், நீங்கள் வேறு சில ஆப்ஷன்களைக் கருத்தில் கொள்ளலாம்.
முன்பதிவு தொகையை நீட்டிக்கவும்: உங்களுடைய கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி முழு தொகையும் செலுத்தி கார் வாங்கும்போது முன்பதிவு தொகையை நீட்டிப்பது குறித்து உங்கள் கார் டீலருடன் பேச்சுவார்த்தை நடத்தலாம்.
பரிவர்த்தனை கட்டணங்கள்: சில டீலர்கள் முழு பரிவர்த்தனை கட்டணங்களையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பர் அல்லது உங்களுடன் பிரித்து செலுத்த தயாராக இருப்பார். எனவே நன்மைகளை பெற இது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். குறிப்பாக நீங்கள் பிரிமியம் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் இது சாத்தியமே..
வணிக கட்டணம்: கார் வாங்குவதற்கு முன் கார் டீலர்ஷிப்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். பல டீலர்கள் தங்கள் செயலாக்க செலவுகளை ஈடுகட்ட கட்டணம் வசூலிக்கின்றன. இது 1 முதல் 2 சதவீதம் வரை இருக்கலாம்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications