முதலீடு என்றாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது, எங்கு முதலீடு செய்யலாம், எதில் நிலையான வருமானம் கிடைக்கும், எதில் அதிக லாபம் கிடைக்கும். எது பாதுகாப்பானதாக இருக்கும்? எங்கு வட்டி அதிகம்? இப்படி பல கேள்விகள் இருக்கும்.
இப்படி இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக 5 நிலையான வருமானம் தரக்கூடிய முதலீட்டு திட்டங்கள் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
இந்தியாவில் பலவகையான திட்டங்கள் இருந்தாலும், பலரும் நினைக்கிறது குறைவான ரிஸ்க் ஆக இருக்கணும். சந்தை அபாயம் இருக்க கூடாது. வருமானம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை? ஆனால் சந்தை அபாயம் இருக்கக் கூடாது. இப்படி நினைக்கிறவங்களுக்கு கண்டிப்பா இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கலாம்.
ஏன் தேர்வு செய்யணும்?
நிரந்தர வருமானம் தரக்கூடியதாக திட்டங்களில் பொதுவாக ரிஸ்க் இருக்காது. வட்டி விகிதம் இதுதான் என நிர்ணயம் செய்து விடுவார்கள். அதேபோல எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை முன் கூட்டியே தெரிந்து கொள்ளலாம். ஆக தேவைக்கு ஏற்ப திட்டமிட்டு முதலீடு செய்து கொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக எளிதாக அணுக கூடிய திட்டங்களாக உள்ளன. முடிந்தால் எளிதில் ஆன்லைனில் கூட தொடங்கிக் கொள்ளலாம். இல்லையெனில் ஆப் லைனிலும் தொடங்கிக் கொள்ளலாம். இணைய வங்கிகளில் கூட சில திட்டங்களை தொடங்கிக் கொள்ள வழியுள்ளது. ஆக எது எளிதாக அணுக முடியுமோ அதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்.
மூத்த குடிமக்கள் திட்டம் என்பது நிரந்தர வருமானம் தரக்கூடிய ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தில் வட்டி 7.6% கிடைக்கிறது. இது குறிப்பாக மூத்த குடிமக்களுக்காகவே உருவாக்கப்பட்ட திட்டம். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்க்ள் இணைந்து கொள்ளலாம். இதில் மாத மாதம் பென்சன் போல வருமானம் பெற வழிவகை செய்து கொள்ளலாம்.
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டமும் மூத்த குடிமக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டம். இதிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இந்த திட்டத்திலும் 7.4% வட்டி கிடைக்கிறது. இதிலும் மாத மாதம் வருமானம் கிடைக்கும். இதுவும் மூத்த குடிமக்கள் திட்டத்தினை போல் தான் செயல்படுபவை.
மாதாந்திர வருமான திட்டம்
அஞ்சலகத்தின் மாதாந்திர வருமான திட்டம் என்பது புதியதாக முதலீடு செய்ய நினைப்பவர்கள், சந்தை அபாயம் வேண்டாம் என நினைப்பவர்கள், எனக்கு குறைஞ்ச லாபம் கிடைச்சாலும் பரவால்ல, ஆனா நிரந்தரமா வருமானம் கிடைக்கனும் அப்படின்னு நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். இதிலும் மாத மாத வருமானம் வேண்டுமென்றாலும் வாங்கிக் கொள்ளலாம். மொத்தமாகவும் வாங்கிக் கொள்ளலாம். இதில் தற்போது 6.6% வட்டி கிடைக்கிறது.
பிக்சட் டெபாசிட்
இன்றைக்கு வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், அஞ்சலகத்தில் கூட பிக்சட் டெபாசிட் திட்டங்கள் உள்ளன. பிக்சட் டெபாசிட்கள் பொதுவாக நிரந்தர வருமானம் கிடைக்கும் திட்டங்கள். இதில் சந்தை அபாயம் இல்லை. இங்கும் 3 - 8% வரையில் வட்டி கிடைக்கிறது. ஆக எந்த ரிஸ்கும் எடுக்க விரும்பாதவர்கள் இதில் இணைந்து கொள்ளலாம். குறிப்பாக எனக்கு எந்த ரிஸ்குமே வேண்டாம், கிடைக்கிற வருமானம் கிடைக்கட்டும், முதலீடு பாதுகாப்பா இருந்தா போதும் என நினைக்கிறவங்களுக்கு இது சரியான சாய்ஸ் தான்.
பொது வருங்கால வைப்பு நிதி
அஞ்சலகத் திட்டங்களில் மிக பிரபலமானவற்றில் இதுவும் ஒன்று. இந்த திட்டத்தில் 7.1% வட்டி கிடைக்கிறது. இதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள், அதற்கு அதிகமாகவும் முதலீடு செய்யலாம். அதனை 5 ஆண்டு தொகுப்புகளாக நீட்டித்துக் கொள்ள முடியும். ஆக நீண்டகால நோக்கில் பெரியளவில் கார்ப்பஸ் வேண்டும் என நினைக்கிறவங்களுக்கு இது ஒரு பாதுகாப்பான திட்டமாவும் இருக்கு. வட்டியும் அதிகம். கூட்டு வட்டி என்பதால், மிகப்பெரிய தொகையும் முதிர்வு காலத்தில் கிடைக்கும்.
More From GoodReturns

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?



Click it and Unblock the Notifications