வீடு வாங்குவது என்பது பலருக்கும் இருக்கும் ஆசை. ஆனால் நிலம் வாங்கி வீடு கட்டுவது அனைவருக்கும் சாத்தியமில்லை என்பதால் கட்டுமான நிலையில் உள்ள ஃபிளாட் அல்லது வில்லாக்களை வாங்குவது பொதுவான ஒன்றுதான். ஆனால் இது போன்ற "அண்டர் கன்ஸ்ட்ரக்ஷன்" (Under Construction) சொத்துக்களை வாங்கும் போது சில ரிஸ்க்குகள் இருக்கலாம். எனவே, அவற்றை தெரிந்து கொண்டு பாதுகாப்பாக சொத்தை வாங்க வேண்டும். எப்படி பார்த்து கட்டுமான நிலையில் இருக்கும் வீடுகளை வாங்குவது என்ற விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.
டெவலப்பர் நம்பகத்தன்மையை ஆராயுங்கள்: நீங்கள் கட்டுமான நிலையில் இருக்கும் சொத்தை வாங்க திட்டமிட்டிருந்தால் டெவலப்பரின் பின்னணி குறித்து முழுமையாக ஆராய்வது அவசியம். அவர்கள் சரியான நேரத்தில் பிராஜெக்ட் டெலிவரி தருகின்றனரா? என்பதையும் சரிபார்க்கவும். ஆன்லைன் ரிவியூக்களைப் படித்து தெரிந்து கொள்ளவும். அவர்கள் கட்டிய மற்ற வீடுகளையும் பார்வையிடவும்.

கட்டுமான அனுமதிகள் மற்றும் ஒப்புதல்களைச் சரிபார்ப்பது: முதலில், நிலத்தின் உரிமை மற்றும் டெவலப்பரின் சட்டப்பூர்வ உரிமைகளை உறுதிப்படுத்தும் "டைட்டில் டீடு"-ஐச் (Title Deed) சரிபார்க்க வேண்டும். இது டெவலப்பரின் நம்பகத்தன்மையையும் உறுதி செய்யும். அடுத்து, "Encumbrance Certificate" பெற்று, சொத்து எந்தவித சட்டப்பூர்வ கடன்கள் அல்லது தகராறுகளில் இருந்தும் விடுபட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
திட்டத்தின் நிதி நிலைமையை மதிப்பீடு செய்யுங்கள்: டெவலப்பரிடம், திட்டத்திற்கான நிதித் தேவை பற்றி கேளுங்கள். திட்டத்தை சரியான நேரத்தில் முடிக்க போதுமான நிதி இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
சில நேரங்களில் பாதி கட்டுமான வேலை முடிந்த பிறகு, பணம் தேவைப்படலாம். எனவே முழுமையாக உங்களுடைய வீட்டை கட்டி முடிப்பதற்கு தேவையான அனைத்து செலவுகளுக்கும், உங்களிடம் பட்ஜெட் உள்ளதா? என்பது பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். அதேபோல ஒரு முழு வீட்டையும் கட்டி, உங்களிடம் ஒப்படைக்க டெவலப்பருக்கு எவ்வளவு தொகை தேவை? என்பதையும் முன்னதாகவே கேட்டறிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு பணத்தை ஏற்பாடு செய்தால் எந்த வித சிக்கலும் இன்றி வீட்டை பெற முடியும்.
விற்பனை ஒப்பந்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்: விற்பனை ஒப்பந்தத்தை முழுமையாக வாசித்து, அதில் உள்ள நிபந்தனைகள், கட்டணங்கள், தாமதக் கட்டணங்களுக்கான அபராதங்கள் போன்ற விவரங்களக் கேட்டு புரிந்து கொள்ளுங்கள். ஒப்பந்தத்தில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், ஒரு வழக்கறிஞரை பார்த்து ஆலோசனைப் பெறுவது நல்லது.
கட்டுமான பணிகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும்: திட்டத்தின் கட்டுமான பணிகளை தொடர்ந்து கண்காணிப்பது முக்கியம். வாரம் தோறும் அல்லது மாதம் தோறும் சைட்டிற்கு சென்று பணிகளின் நடவடிக்கைகளை பார்க்கலாம். இது கட்டுமான பணி திட்டமிட்ட படி செயல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த உதவும்.


Click it and Unblock the Notifications