இன்று பலரும் அவசர தேவைக்கு கடன் என நினைக்கும்போது, முதலில் நினைவுக்கு வருவது பர்சனல் லோன் என்ற தனி நபர் கடன் தான்.
குறிப்பாக மாத சம்பளதாரர்கள் எதிர்பாராத செலவுகள் வரும் போது அடமான இல்லாமல், வங்கிகளில் எளிதாக கிடைக்கும் என்பதால் பர்சனல் லோனுக்கே அதிகம் விண்ணப்பிக்கின்றனர்.
இன்னும் சிலர் வீடு மறு கட்டமைப்பு, இடம் வாங்குதல் என மற்ற திட்டங்களுக்கு கூட, வட்டி அதிகமாக இருந்தாலும் பர்சனல் லோனையே நாடுகின்றனர். ஏனெனில் இதில் ஆவணங்கள் மிக குறைவு. செயல்பாடு எளிது. ஆக விரைவில் கிடைக்கும். எனினும் இதில் சில கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. வாருங்கள் அதனை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
இது தொற்று நோய் போல
வங்கியில் தனிநபர் கடனுக்கு குறைந்த வட்டி விகிதம் என வாடிக்கையாளர்களுக்கு வலை வீசுகின்றன. ஆனால் இந்த தனி நபர் கடன் என்பது ஒரு தொற்று நோய் போல. தொற்றிக் கொண்டால் எளிதில் அதில் இருந்து விடுபட முடியாது என இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
வட்டி அதிகம்
சொல்லப்போனால் தனிநபர் கடன்கள் மூலம் நாம் எந்த புதிய சொத்தையும் உருவாக்குவதில்லை. மாறாக இதனால் செலவுகளையே அதிகம் செய்கின்றன. மேலும் இந்த கடனுக்கு வட்டி விகிதம் குறைவு என வங்கிகள் கூறினாலும், இது பாதுகாப்பற்ற கடன் என்பதால் மற்ற கடன் களுடன் ஒப்பிடும்போது வட்டி அதிகம் தான்.
கட்டணங்கள் அதிகம்
இந்த கடன்களுக்கு செயல்பாட்டு கட்டணமும் அதிகம். அதற்கு வட்டி விகிதமும் அதிகம். அதற்கு மேலும் நீங்கள் வணிக கடன் வாங்கினால், உங்களுக்கு திரும்ப செலுத்த 12 - 60 மாதங்கள் வரையில் கால அவகாசம் கிடைக்கும். ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் பர்சனல் லோன் வாங்கினால், தொழிலில் வருமானம் கிடைப்பதற்கு முன்னதாகவே, இஎம்ஐ செலுத்தத் தொடங்கியாக வேண்டும்.
இருப்பை சரி பாருங்கள்
வழக்கமாக திட்டமிடாத சூழ்நிலைகளுக்காகவோ அல்லது அவசரத் தேவைக்காகவோ பர்சனல் லோன்களை வாங்குகின்றோம். அந்த நிலையில் உங்களது சேமிப்புகளை கணக்கு பார்க்கலாம். ஃபிக்சட் டெபாசிட்டை முன்கூட்டியே எடுக்கவோ அல்லது கையிலிருக்கும் தங்கத்தை விற்கவோ பலரும் தயங்குகிறார்கள். ஆனால் பர்சனல் லோன் வாங்குவதற்கு பதிலாக இவற்றை பயன்படுத்துவதே புத்திசாலித்தனம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடனுக்கு கடனா?
ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்குவது மிகப் பெரிய தவறு. அதனால் மீண்டும் கடன் வலையில் சிக்கிக் கொள்ளலாம். ஆக கடனை திரும்ப செலுத்த, திரும்ப கடன் வாங்குவது என்பது தீர்வு அல்ல, 15% வட்டியில் வாங்கிய பர்சனல் லோனை அடைக்க, 12% வட்டியில் மற்றொரு பர்சனல் லோன் வாங்க நினைக்கலாம். ஆனால் மற்ற கட்டணங்கள், பணத்தின் மதிப்பு என்பது குறைந்து கொண்டே செல்லலாம்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications